Wednesday, July 29, 2009

தேங்காயும் புட் பாலும்...!

நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும்
வெஞ்சினத்தில் பல்பட்டால் மீளாது- விஞ்சுமலர்த்
தேம்பாயும் சோலைத் திருமலைரா யன்வரையில்
பாம்பாகும் வாழைப் பழம்.


இது கவி காளமேகம் எழுதிய ஒரு சிலேடை . இதை இரட்டுற மொழிதல் என்றும் சொல்வார்கள். இரண்டு பொருள் வரும்படி ஒரே வார்த்தைகளால் பாடுவது சிலேடை. இதன் அர்த்தம் பார்ப்போம் .
நஞ்சிருக்கும் - பாம்பு கொடிய விஷமுடையது
வாழைப்பழம் நைந்து (கனிந்து ) இருக்கும்.
தோலுரிக்கும் - பாம்பு அடிக்கடி தோல் உரிக்கும்.
வாழைப்பழம் தோலுரித்து உண்ணப்பட வேண்டியது.
நாதர்முடி மேலிருக்கும்- பாம்பு சிவபெருமான் தலையில் இருக்கும்.
வாழைப்பழம் பஞ்சாமிர்தமாக அபிஷேகம்
செய்யப்பட்டு லிங்கத்தின் மீது காணப்படும்.
வெஞ்சினத்தில் பல்
பட்டால் மீளாது - பாம்பு கொத்தினால் நம் உயிர் மீளாது.
கூட்டு பொரியலாக செய்யப்படும் வாழைக்காய்
மீது நம் பல் பட்டால் அது மிஞ்சாது.

இவ்வாறு தேன் பாயும் சோலைகள் உள்ள திருமலைராயன் மலையில் பாம்பும் வாழைப்பழமும் ஒன்றாகும். என்பதே இதன் அர்த்தம்.

http://pm.tamil.net/pub/pm0220/kalamega.pdf


என்னடா ஏதோ foot ball தேங்காய் என்று தலைப்பிட்டுவிட்டு செய்யுளுக்கு விளக்கம் தருகிறானே என்று பார்க்கிறீர்களா? தொடர்பு உண்டு.

இந்தப் பதிவின் நாயகனும் நமது முருகேஷ் தான். இந்தமுறை அவனது விளையாட்டின் பரிமாணங்கள். முருகேஷ் விளையாட்டுகளில் ஒரு அசகாயசூரன்.
கிரிக்கெட் , புட் பால் இரண்டிலும் வெளுத்து வாங்குவான்.ஒரு முறை ஆஸ்திரேலியா அணி சென்னை டெஸ்ட் மேட்ச் இல் இந்தியாவிடம் தோற்றபோது எங்களிடம் சொன்னான் " மக்கா...! இந்தியா எப்பிடி தெரிமால ஜெயிச்சான் ..? மெட்ராஸ்ல நடந்தனாலயாக்கும் ஜெயிச்சான்..! இதே டெல்லி பாம்பே னு வெளிநாட்ல நடந்திருந்தா கண்டிப்பா தோத்திருப்பாம்ல..!" என்றான். அந்த அளவுக்கு அபாரமான தேசிய புவியியல் ஞானம் உடையவன்.

சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் முடிந்து திங்கள் பள்ளி வரும்போது தன் விளையாட்டு வீரப்ரதாபங்களை அள்ளி விடுவான். பெரும்பாலும் நகைச்சுவைத் தோரணங்களாக வெடிச்சிரிப்பை வழங்கும். சரி அப்பிடி அவன் யாருடன்தான் விளையாடுகிறான் என்று பார்த்தால் எல்லாம் அவன் இடுப்பளவு பொடிப்பயல்கள்.இவன் எல்லாரையும் மிரட்டி அவுட்டே ஆகாமல் ஆடிக்கொண்டிருப்பான்.

அவனுக்கு விளையாட்டுகளில்தான் ஈடுபாடே தவிர அதன் விதிமுறைகளில் இல்லை.கிரிக்கெட் என்றால் bat இல் பந்து படவேண்டும். foot ball என்றால் பந்தில் கால் படவேண்டும் அவ்வளவுதான். ஒரு விளையாட்டைப் பற்றி மிக எளிய அடிப்படைப் புரிதல் மட்டும் போதும்.
அதற்கு மேல் அவன் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டதில்லை.

ஒருநாள் வந்து
"லேய் நேத்து நாங்க தோத்துட்டோம்ல" என்றான். காரணம் கேட்டபோது " நேத்து வெளாடும்போது 17 ரன் அடிச்சிருந்தேன். அப்போ பாத்து ஒருத்தன் கேட்ச் பிடிச்சிட்டாம்ல.. நான் " duck out " ஆயிட்டேம்ல என்றான். வகுப்பில் வெடித்துக்கிளம்பிய சிரிப்பலை அடங்க வெகுநேரமாகியது. அகில உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே 17 ரன்கள் அடித்து " duck out " ஆனவன் அவனாகத்தான் இருக்க முடியும். அவனைப் பொறுத்தவரை கேட்ச் ஆகி அவுட் அனால் அது "duck out" .

இவ்வாறு கிரிக்கெட்டை புரட்டி எடுத்த அவன் பார்வை "foot ball" பக்கம் திரும்பியது.

நாங்கள் ஆடுவதே ஒரு களேபரம் தான் . எங்களுக்கு "passing the ball, kicking the ball " எல்லாம் தெரியாது . "touching the ball" தான். பந்தைச் சுற்றி கும்பலாக ஓடுவோம். பந்தில் கால் பட்டாலோ, இல்லை கால் பந்தில் பட்டாலோ அன்றைக்கு சிறப்பாக விளையாடியதாய்க் கணக்கு. 4 வருடங்கள் விளையாடி 3 கோல்கள் அடித்திருக்கிறேன். ( அதில் ஒன்று சேம் சைடு கோல்). என்னை விட பெரிய ட்ராக் ரெக்கார்ட் கொண்டவன் முருகேஷ். அவன் defending position இல் ஆடுவதால் (ஓடுவதால்) பெரும்பாலும் சேம் சைடு கோல் தான்.

ஒருமுறை காலை வகுப்பில் தமிழ் பாடம். சீறாப்புராணம் நடத்திக் கொண்டிருந்தார் ஆசிரியர். "கருமியிடம் உள்ள செல்வமானது நாய்க்கு கிடைத்த தேங்காயைப் போல, தானும் உண்ண வழி தெரியாமல் அடுத்தவர்களும் எடுக்க விடாமல் உருட்டிக்கொண்டே அலையும். நாய் பெற்ற தெங்கம்பழம் உலோபியின் செல்வமாகும் " என்று பாடம்.

பின்னர் மதியம் விளையாட்டு வகுப்பில் அன்று "foot ball" ஆடினோம். வழக்கம்போலவே. முருகேஷ் எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல ஒரு சுரத்தின்றி defender ஆக நின்றுகொண்டிருந்தான். அன்று அதிர்ஷ்டம் அவன் பக்கம். பந்து திடீரென்று அவனிடம் சென்றது. அவ்வளவுதான் அவன் இதுகாறும் திரட்டியிருந்த ஒட்டு மொத்த திறமையையும் அன்று காட்ட முடிவு செய்துவிட்டான் போலும். பந்தை யாருக்கும் பாஸ் பண்ணாமல் ரொனால்டோ போல வித்தை செய்வதாக எண்ணிக்கொண்டு இரண்டு கால்களுக்கிடையே பந்தை உருட்டிக்கொண்டே ஓடினான்.

சற்று தொலைவிலிருந்து பார்த்த ஒருவன் " லேய் ..! நாய் பெற்ற தெங்கம்பழம் பாருங்கல ..! முருகேஷ்ட உள்ள பந்துதாம்ல அது ..! என்றான். விளையாட்டை மறந்து சிரிக்க ஆரம்பித்தோம்.

5 comments:

  1. Machi !!! Netthi Adi da!! :) really I loved it man!! The sense of Humor inside is amazing !! coz I was also in the gang running behind the football!!! ( Touching the ball gang) ... I was able to recollect my old memories da!! Love it man !! Keep it up !! :)

    ReplyDelete
  2. Hey good one da.. getting all those memories back.. waiting 4 more da machi :)

    ReplyDelete
  3. machi really thinking of the old days da..moreover i was from ur front bench,u and kuppu were in the back..u usually pass these kind of msgs first to us(front bench)..keep rocking da maci..

    ReplyDelete
  4. முறுக்குபட்டி இத படிச்சான் உன்ன தேடிவந்து இடிப்பான்.

    நமது பள்ளிகாலங்களில் PET Period மிகவும் ரசனயான சமயங்கள்.

    நமது வடிவேலு(Pet Sir) பற்றி நினைவிருந்தால் எழுது.

    ReplyDelete

இந்த பதிவு பிடித்திருந்தால் வாழ்த்துங்கள், இல்லையென்றாலும் பரவாயில்லை உங்களுடைய விவாதங்களை தெரிவியுங்கள். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி !