Sunday, September 15, 2013

ஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்!

சாரு  நிவேதிதா தனது நண்பர்களோடும் ஜெயமோகன் தனது நண்பர்களோடும் சில வாரங்களுக்கு முன் இமயமலை நோக்கி ஒரு பயணம் சென்று திரும்பி வந்தது நாம் அனைவரும் அறிவோம். ம்ம்ம் ..சரி சரி நம்மில் சிலபேர் அறிவோம். அதுவொன்றும் சரிந்து விழும் இந்தியப் பொருளாதாரத்தை  நிமிர்ந்து எழச் செய்யும் ஒரு முக்கியமான விஷயம் இல்லை என்றாலும் வலையுலகில் அது குறித்து சிற்சில சர்ச்சைகள் எழுந்துள்ளன. சாரு நிவேதிதா  இமயம் செல்ல தேர்ந்தெடுத்த பாதை மிக மிக அபாயமானது என்றும் இடுப்பு செத்த பயலுவள் தான் சொகுசான பாதையில் செல்வர் என்று ஜெயமோஹனை இடித்துரைத்தது தனது பயணத்தின் துவக்கத்திலேயே நடந்தது.  ஜெயமோகன் இதுகுறித்து எந்த ஒரு எதிர்வினையும் எழுப்பாமலேயே சென்று வந்து பயணத்தை பற்றிய தொடரையும் எழுதிக் கொண்டிருக்கிறார். 

சாருவின் தொண்டரடிப் பொதிகளில் முக்கியமான ஒருவரான பிச்சைக்காரன் அண்மையில் கவிஞர்...? ரியாஸ்  குரானாவிடம் ஒரு பேட்டி  என்று ஒரு கேள்வி கேட்டிருந்தார்.

சாரு இமயம் போனால் , ஜெயமோகனும் போகிறார்,,,அவர் கல்யாணத்துக்கு போனால் இவரும் போகிறார்...உங்கள் கருத்து ? :)  

அட இதிலென்னப்பா இருக்கிறது ? இருவரும் ஒரே சமயத்தில் (கிட்டத்தட்ட) இமயமலை சென்றது ஒரு தற்செயல் நிகழ்வுதான். மரபான பாணியில் ஒரு பயணக் கட்டுரையும் பின் நவீனத்துவ , transgression பாணியில் ஒரு பயணக்கட்டுரையும் கிடைக்கிறதே என்று எளிதாக எடுத்துக் கொண்டு போயிருக்கலாம்.
மாறாக தமிழர்தம் குலத்தொழிலாம் பகடி மட்டுமே என் பணி என்று கிண்டல் மட்டுமே வருகிறது பிச்சைக்காரரிடமிருந்து.
சாருவின் அண்மைய பயணங்கள் பற்றி எனக்கு ஒரு ஞானமும் இல்லை. ஆனால் கூபா செல்ல வேண்டும் லத்தீன்அமெரிக்கா செல்ல வேண்டும் என்று உண்டியல் குலுக்கியது மட்டும் என் கேடு கேட்ட நினைவில் வந்து தொலைக்கிறது.

ஜெயமோகனின் பயணங்கள் பற்றி ஒரு நான்கைந்து வருடங்களாக நாம் படித்து வருகிறோம். வடகிழக்கு நோக்கிய இரு பயணங்கள், அருகர்கள் சென்ற பாதையில், குகைகளை நோக்கிய ஒரு பயணம், அமெரிக்க பயணக் குறிப்புகள் , புல்வெளி தேசம் என்னும் தலைப்பில் ஆஸ்திரேலியப் பயணக் குறிப்புகள் என்று   அவை வெளியாகிவந்த காலகட்டத்தில் ஒவ்வொருநாளும் அந்த உடனடி நிகழ்வுகளை தன்னுடைய கூர்ந்த மொழிநடையில் ஜெ தன்னுடைய தளத்தில் வெளியிட்ட போது சுஜாதாவின் தொடர்கதைகளை பத்திரிகைகளில் ஒவ்வொரு வாரமும் காத்திருந்து படிப்பதைப் போன்ற உணர்வினைப் பெற்றேன். 

எத்தனையோ நாட்கள் கடுமையான அலைச்சலுக்குப் பிறகும் மின்னல் போல உடனுக்குடன் பதிவுகளை எழுதி சரியான புகைப்படங்களை இணைத்து பதிவேற்றம் செய்ய மிகுந்த ஈடுபாடு வேண்டும்.  இம்முறை கூட இமயத்தில் இணையத் தொடர்பு  வசதிகள் இல்லாத காரணத்தினாலேயே ஜெவால் உடனடிப் பதிவுகள் எழுத இயலாமல் போயிற்று .

அது போகட்டும், சாரு என்ன கூறுகிறார் ? ஜெ யின் கட்டுரைகள் விக்கிபீடியாவிலிருந்து மொழிபெயர்க்கப் பட்டது என்று. ஒரு நகரைப் பற்றிய தகவல்களுக்கு , வரலாறு பெயர்க்காரணம் போன்றவை குறித்து அறிவதற்கு விக்கிபீடியா பயன்படுத்துவதில் என்ன தவறு இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை.
இன்று இந்தியாவில் இந்தியராகப் பிறந்தாலும் ஒரு தென்னமேரிக்கராகவே  வாழும் தென்னமேரிக்கர் போலவே "Espanol" அதாம்பா ஸ்பானிஷ் பேசும் சாருவிற்கு ( அதுசரி சாரு ஸ்பானிஷ் பேசி ஸ்பானிஷ் தெரிஞ்ச யாராவது கேட்டிருக்காங்களா?) வேண்டுமானால் எல்லா நகரங்களைப் பற்றிய வரலாற்றுப் பின்புலம் தெரிந்திருக்கலாம்.( ஒன்பது கிரகங்களும் நேர்கோட்டில் நிற்கும் ஜாதகம் உடைய ஒரு மனிதன்.! ). ஆனால் சாமானிய மனிதனாகிய ஜெ  வுக்கு விக்கிபீடியா உதவி செய்தது எவ்வளவு பெரிய தவறு?   முதல் வேலையாக விக்கி நிறுவனத்தை தடை செய்ய வேண்டும்.


சாரு இப்படி என்றால் பிச்சைக்காரன் ஒரு படி மேலேயே போய்விட்டார் 

**///"அதாவது சாரு இமயமலை போனால் , அங்கு சாரு மறைந்து இமயமலையாகவே ஆகி விடுகிறார். ஜெமோ போனால் , அங்கு மலை இருப்பதில்லை...ஜெமோதான் இருப்பார்

இங்குள்ள சிலர் ஐரோப்போ சுற்றூலா செல்லுவார்கள். 10 நாட்களில் 12 நாடுகள் செல்வார்கள்
எப்படி அது முடிகிறது என தெரியவில்லை


ஜெ ஒரு விமானம் பிடித்து இமயமலையின் ஒரு பாதுகாப்பான இடதுக்கு போய் அமர்ந்து , இமயத்தின் வழியே என தான் படித்ததை எழுதுவார்
ஆனால் சாரு , இமயமலை வாழ்வை வாழ்ந்து விட்டு வந்து இருக்கிறார்

என்றாவது ஒரு நாவலில் அது வீரியத்துடன் வெளிவரும்.. அதாவது அவர் பயணம் , நம் ஒவ்வொருவரின் அனுபவம் ஆகி விடும்..ஆனால் ஜெமோவை பொருத்தவரை , மற்றவர்களின் அனுபவங்கள்தான் அவர் பயணமாக இருக்கும் "///**

சொற்றொடர்கள் ஒவ்வொன்றும் மணி முத்துக்கள். 
அது எப்படி ஜெயமோகன் பத்து நாட்கள் பயணம் சென்றால் அது வெறும் பயணம் . சாரு  நிவேதிதா சென்றால் அது வாழ்க்கை அனுபவம்.?
அது பயணமா இல்லை வாழ்க்கை அனுபவமா என்பது பயணம் செய்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும். வெற்றுப் பகடி  "மட்டுமே" செய்யும் நமக்கு எப்படி தெரியும்? 

சாருவின் இமயமலைப் பயண அனுபவம்   என்றாவது ஒரு நாவலில் "வீரியத்துடன்" வெளிவரும் என்று பிச்சை சூளுரைக்கும்போதுதான் நமக்கு லேசாக கிலி பிடிக்கிறது. 
சாருவின் "வீரியத்தை" குப்பி கொடுத்தல் , குப்பி அடித்தல் என்னும் ரீதியிலேயே படித்துப் பழகிவிட்டதால் மேற்படி வாசகம் பீதியை ஏற்படுத்துவதில் வியப்பொன்றும் இல்லை. புனிதமான இமயமலை சாருவின் எழுத்தில் நல்லபடியாக வர சாருவின் ஞானகுரு எல்லாம் வல்ல நித்தியனந்தாவைப் பிரார்த்திக்கிறேன்.

12 comments:

 1. என்ன சகோ பிச்சைக்காரன் போன்ற மானம் கெட்ட ஈன அல்லக்கைகளின் பேச்சை எல்லாம் பொருட்டாக எடுத்து பதிவு போட்டிருக்கின்றீர்கள். அந்த ஈன பிறவி ஜெமோவை திட்டா விட்டால் தான் அதிசயம்.
  அந்த அல்லக்கையின் பேச்சை எல்லாம் லூசில் விட்டுங்க

  HARRIS DAVID

  ReplyDelete
  Replies
  1. எதற்குமே எதிர்வினை ஆற்றாத ஒரு சமூகமாக நாம் இருப்பதாலேயே அல்லக்கைகளின் துள்ளல் உச்சத்தில் இருக்கிறது. நம் கருத்துக்களையும் பதிந்துதான் வைப்போமே .. நன்றி டேவிட்

   Delete
 2. Are you ஜெமோ அல்லக்கை?

  ReplyDelete
  Replies
  1. உங்கள் அடையாளத்தோடு வந்து கேளுங்கள், இதற்கு பதிலளிக்கிறேன். முகமூடிகளுக்கு பதில் சொல்ல முடியாது

   Delete
 3. எழுத்தாளர்களில் தாம் இருவர் மட்டுமே என்பதை மக்கள் மனதில் பதிய வைக்கும் செய்யப்படும் செயல்கள் இவை என்று சிலர் பேசிக் கொள்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. வெறுமனே அப்படி சொல்லிவிட முடியாது திரு தங்கவேல், இன்றைய தமிழ் எழுத்தாளர்களில் அதிகமும் செயல்பாட்டில் இருப்பது இந்த இருவர் தான் . எனவே இதுபோன்ற சர்ச்சைகள் வருவது இயல்பே. என்னுடைய பதிவு சாரு மற்றும் பிச்சைகாரன் எண்ணங்களுக்கு ஒரு சிறிய எதிர்வினை மட்டுமே.

   Delete
 4. Charu Pitchaikaara sanga thalaivan.... athaan pitchaikaaran thuthi jaasthiyaa irukku

  ReplyDelete
 5. சாரு தன்னை சூப்பர் ஸ்டார் என்று நினைத்து கொள்ளும் ஒரு பவர் ஸ்டார்

  ReplyDelete
 6. "சாருவின் "வீரியத்தை" குப்பி கொடுத்தல் , குப்பி அடித்தல் என்னும் ரீதியிலேயே படித்துப் பழகிவிட்டதால்"

  படிப்பது மட்டுமல்ல சாருவுக்கு அந்த சேவையை செய்தும் விடுவார்களாம். அராத்து, பிச்சை இந்த விடயத்தில் experts

  ReplyDelete
 7. சாரு எமைய மலை (அப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கு ) போன படங்களை போட்டிருக்கு. அதில் எதிலாவது இமைய மலை தெரியுதா ????
  எல்லா படத்திலும் இந்த சாரு தலை தூக்கி கொண்டும் காலை அகட்டி வைத்து கொண்டு போஸ் கொடுத்து கொண்டு இருக்கு. இதில ஜெயமோகனின் படங்களை நொள்ளை சொல்லி கொண்டு இருக்கு.

  அதுக்கு சாருவின் அடிமட்ட அல்லக்கையும் மீன் சப்ளை செய்பவருமான அன்பு கணேஷ் என்ற குட்டி யானை ஜால்ரா பாடியிருக்கு

  ReplyDelete
 8. சாருவுக்கு என்னொரு குமைச்சல்/எரிச்சல் என்னவென்றால்
  ஜெயமோகன் போவது உல்லாச பயணம், தான் போவதுதான் சாகச பயணம் என்று அள்ளி விட்டு கொண்டு இருந்தது.
  ஆனால் கடைசியில் ஜெயமோகன் போனதுதான் உலகிலேயே ஆபத்தான வழிகளில் ஒன்று . அதை ஜெயமோகன் பதிவில் வேறு போட்டு விட்டார். இதனால் சாருவுக்கு பல போத்தல் gelusil குடிக்க வேண்டிய நிலைமை .

  ReplyDelete
 9. உச்ச வழு
  artsy fartsy என்ற சொல் வழக்கு ஒன்று உண்டு. அதாவது ஒன்றுமில்லாததை தலையில் தூக்கி வைத்து ஆடுவது. wildgoose chase என்பது இதற்கு சமீபத்தில் வருவது. அதாவது இல்லாத்தை தேடுவது. உதாரணமாக Picasso வின் ஓவியக்கண்காட்சி என்று நம்பகம் தரும் வகையில் விளம்பரம் செய்து, அதில் அவரது பல ஓவியங்களுக்கிடையே என்னுடைய 2 வயது குழந்தை "கிறுக்கிய" ஒரு ஓவியத்தையும் நடுவே வைத்து விடுவது. இப்போது சமுதாயத்தில் ஏற்கனவே நம்பகமான ஒரு ஓவிய விமர்சகரை வைத்து அதன் முன்னால் நின்று ஏதாவது அளந்துவிடச்சொலவது. "இந்தக்கலர் காம்பினேசனை பாத்தீங்களா, இந்த stroke symmetry பாத்தீங்களா...ஆ...ஊ.." இந்த ரீதியில் பேச வைத்தால் அந்த ஓவியத்தையும்....சுருக்கமாக சொல்லவெண்டுமென்றால் இந்த மகாராஜாவின் கண்ணுக்குத்தெரியாத ஆடை என்பது போல. அதற்கும், ஆடை இல்லை என்பதற்கும் என்ன வேறுபாடு?

  நீங்களே சொல்கிறீர்கள் இது என் கனவிலிருந்து இன்னொருவர் கனவுக்கு செல்லவேண்டியது என்று. கனவை கண்டவனாலேயே (ஆசிரியர்) அதை விளக்கமுடியவில்லையென்றால், கனவை பெற்றவரால் (வாசகர்) அதை கண்டிப்பாக விளக்க முடியப்போவதில்லை. ஆக இது விளக்க முடியாத ஒன்று. இல்லாத ஒன்றையும் விளக்க முடியாது. அப்படியானால் இதற்கும், இல்லாததற்கும் என்ன வேறுபாடு. நிரூபணவாதத்தின் அடிப்படையில் இலக்கியத்தை விளக்கவேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் இந்த ஓட்டையை பயன்படுத்திக்கொண்டு இல்லாத்தையும் பொல்லாத்தையும் அளந்துவிட்டு நம்மேல் சவாரி செய்பவரை எப்படி இனம் கண்டு கொள்வது?.

  நீங்கள் இன்னும் ஒருபடி மேலே போய் என்மேல் காதலுள்ளவரால் மட்டுமே இந்த படிமத்தை உள்வாங்கிக்கொள்ளமுடியும் என்றெல்லாம் சொல்கிறீர்கள். இந்த ஜக்கி வாசுதேவும் இதேபோல் பேசுகிறார். இமயமலையில் வேற்றுகிரகவசிகள் வருகிறார்கள் என்கிறார், நினைத்த மாத்திரத்தில் உயிரை போக்கி கொள்ள முடியும் (தற்கொலை இன்றி), காலிலுள்ள வளையம்தான் தன் உயிரை உடலுடன் பிணைத்து வைத்திருக்கிறது...இத்யாதி..இத்யாதி.. இப்படி ஒரு ஆளின் பிரபலம் கூடக்கூட பொய்யின் பிரம்மாண்டமும் கூடும் போல.மொத்ததில் எங்கெல்லாம் நிரூபணவாதம் என்ற burden இல்லையோ அங்கெல்லாம் சொல்பவரின் passion மற்றும் charisma இதுதான் make or break ஐ முடிவு செய்கிறது என்று தோன்றுகிறது.எஸ்கிமோவிடம் குளிர்சாதனப்பெட்டியை விற்கும் ஒரு விற்பனையாளனின் திறமை போல

  இலக்கியவாதி தன் அகத்தின் மூலம் வாழ்க்கையை அள்ள முயல்கிறான். அதை பின் எழுத்தில் வார்க்கிறான். இந்த carte blanche ஐ பயன்படுத்தி அப்ப என்ன வேணாலும் அடிச்சி விடலாம். எவ்வளவுக்கெவ்வளவு புரியாம இருக்கோ அவ்வளவுக்கவ்வளவு மதிப்பு கூட வேற செய்யும்.

  சாதாரண தளம், விசேஷ தளம் இதைப்பற்றி நீங்கள் சொன்னதிலிருந்து, இலக்கியமென்பது , சாமியாடுவதை போல சன்னதம் போல முழுக்க முழுக்க விசேஷ தளம் பக்கம் இல்லாமலும், ராஜேஷ்குமார் கதை போல முழுக்க முழுக்க சிறுபிள்ளைத்தனமானதாக இல்லாமலும் நடுவில் எங்கோ இருக்கிறது போல

  இந்த பெண்களெல்லாம் விளக்கு பூஜைக்கு போவார்கள். அதேபோல் ஆண்கள் சிலர் நண்பர் குழாம் அமைத்து கொண்டு தண்ணியடிப்பார்கள் அல்லது கிரிக்கெட் மாட்ச் பார்ப்பார்கள் டிவியில். அது மாதிரி இந்த இலக்கிய குழு அதில்பங்கு கொள்ளும் அங்கத்தினருக்கு அது பற்றிய ரசனை இருக்க வேண்டும் போல. எப்படி இந்த பிரம்ம சூத்ரம் படிக்க வருபவருக்கு pre requisite ஆக "நான் அழிவற்றவன்" என்பதில் நம்பிக்கை இருக்க வேண்டுமோ அது போல

  இந்த மாதிரி என்னுடைய புரிதல் சரியா? அல்லது உங்கள் மீதுள்ள பொறாமையினாலும் மேலும் படைப்பூக்கமற்ற எனது சாதாரண வாழ்க்கையினாலும் நான் இந்த விஷயத்தை கோணலாக புரிந்து கொண்டிருக்கிறேனா? பொறாமையால்தான் இந்த மாதிரி கேள்வி வருமா? இந்த கேள்வி தன்னளவில் ஞாயமானது கிடையாதா? இது போன்ற குழப்பத்திற்கு விடை தேட உங்கள் உதவியை நாடும்

  GSMஸ்வாமி

  ReplyDelete

இந்த பதிவு பிடித்திருந்தால் வாழ்த்துங்கள், இல்லையென்றாலும் பரவாயில்லை உங்களுடைய விவாதங்களை தெரிவியுங்கள். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி !