Sunday, August 19, 2012

இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்!


நான் துவக்கப் பள்ளியில் படித்த போது பள்ளி பாடப்புத்தகங்களில் கடைசி பக்கத்தின் பின்புறத்தில் எழுதியிருப்பார்கள் "இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம், இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோம்". இன்று புத்தகங்களில் அந்த வாசகம் காணாமல் போயிருக்கலாம். அதே போல இந்திய ஒருமைப்பாடும் காணாமல் போய்க்கொண்டிருப்பது  கண்கூடாகத் தெரிகிறது.இதற்கான காரணங்கள் பலவாக இருப்பினும் மிக மிக முக்கியமான காரணமாக நான் நினைப்பது  நமது இந்திய அரசியல் தலைமை.
பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியவுடன் வல்லரசு நாடுகள் னம் நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதித்தன. அந்த நேரத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை நாலாயிரம் ரூபாய்க்குப் பக்கத்தில். நாட்டின் உள்கட்டமைப்பு  வசதிகள் வலுப்பெறத்தொடங்கிய காலம் அது. 15 ஆண்டுகளாக இன்னமும் நத்தை வேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பது ஜனநாயக அரசியலின் அளப்பரிய சாதனை.
இந்தியாவின் சிறப்பம்சமே வேற்றுமையில் ஒற்றுமை என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் நிகழ்வது அதற்கு தலைகீழாக இருக்கிறது. ஒரு  மாநிலத்திற்கும் இன்னொரு மாநிலத்திற்கும் இடையில் ஒற்றுமை என்பது மருந்துக்கும் கூட இல்லாத நிலைமை உள்ளது.நதிநீர் பங்கீடு முதல் வேற்று  மாநிலத்தோர் ஒரு மாநிலத்தில் பணிபுரிவது வரை இன்று ஒருமைப்பாடு சிறுமைப்பட்டுப் போய்க்கொண்டிருக்கிறது. நீதியின் பக்கம் இருந்து அதனை சரியா செய்ய வேண்டிய மத்திய அரசோ ஓட்டுக்காக கையாலாகாத நிலையில் உள்ளது.


இலங்கையிலிருந்து அகதியாய் வந்த தமிழனுக்கு குடியுரிமையோ நல்ல வேலை வாய்ப்போ இந்தியாவில் கிடைப்பதில்லை. மாறாக வங்கதேசத்திலிருந்து வந்தவர்களுக்கு இங்கே வாழ்வதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. எனில் மண்ணின் மைந்தர்கள் எதிர்ப்பது இயல்புதானே?
வங்கதேச அகதிகள் மேல் அரசாங்கம் கைவைக்க முடியாது , ஏனென்றால் நமது மதச்சார்பின்மை கொள்கை என்னாவது ? 
எனவே எத்தனை இந்தியக் குடிமகன் கலவரங்களில் இறந்தாலும் பரவா இல்லை. இலங்கையிலிருந்து தமிழன் வருகிறானென்றால் உள்நாட்டுப் போர் நிகழ்ந்துகொண்டிருந்தது ஒரு காரணம். ஆனால் சின்ன பாகிஸ்தனாகிய வங்கதேசத்தில் இப்போது என்னதான் பிரச்சனை ? 1972 இலேயே  காசுவெட்டி பிரித்து விட்டது இந்தியாதானே ? கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வங்கதேசத்திடம்  தோற்றால் கூட பாக் கேப்டன் "எங்கள் சகோதரரிடம்தான் தோற்றோம் இது ஒன்றும் அவமானமில்லை" என்கிறான்.அப்புறம் என்ன மயித்துக்குடா பிரிஞ்சீங்க என்று இங்கு யாரும் கேட்க முடியாது, ஏனென்றால் இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு.இன்றும் கூட கள்ளநோட்டுக்கள் ஆயுதங்கள் அதிகமும் இந்தியாவுக்கு வருவது பாகிஸ்தான்  மூலம் வங்கதேசம் வழியாகத்தான்.இப்போது கூட வங்கதேச அகதிகளை இந்திய அரசாங்கம் திரும்பிப் போக சொல்லட்டும் பார்ப்போம்?நமது பதிவுலகிலேயே  சுவானப் பிரியர்கள், அரேபிய  இஸ்லாமிய கனவு தேசத்தை இந்தியாவில் கட்டமைக்க போராடுபவர்கள் " சகோ சகோ" என்று தமிழ்மணத்தில் இந்தியா அரசாங்கத்தின் காவி பயங்கர வாதத்தையும் பாசிச வெறியையும் போட்டுத் தாக்கி பொளந்து விடுவார்கள்.

இந்திய என்பது பல தேசிய இனக்குழுக்கள் இணைந்த ஒரு தொகுப்பு. ஏதோ ஒரு தர்மத்திற்கு கட்டுப்பட்டு இன்னும் ஒரே நாடாகத் திகழ்வது மிகப்பெரும் அதிசயமே. அந்த கண்ணுக்குத்தெரியாத இணைப்பை உறுதிபடுத்த வேண்டியதுதான் மத்திய அரசாங்கத்தின் கடமை. கூட்டணி தர்மம் என்னும் நிர்பந்தத்தில் ஒருமைப்பாட்டினை சீர்குலைக்கும் நடவடிக்கைகளிலே எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஊமையாய் இருப்பதற்குப்பதில் , இதுவரை அடித்த கொள்ளையோடு இவர்கள் ஒதுங்கிவிட்டு வேறு  ஒரு நல்ல தலைமை வர வழிவிட்டால் நன்றாக இருக்கும்.( பகல்கனவு )

எது எப்படியோ போய்க்கொண்டிருக்க நமது தமிழ்நாட்டிலோ மதச்சார்பின்மையானது சிறந்த அளவில் பேணிக் காக்கப்படுகிறது. எப்படியெனில் , கிருஸ்துமஸ் மற்றும் பிற இஸ்லாமியப் பண்டிகைகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும்  முதுபெரும் கலைஞர் தீபாவளிக்கு மக்களுக்கு வாழ்த்துக்கள் சொல்ல மாட்டார். ஏனென்றால் இந்துக்கள் காட்டுமிராண்டிகள்.இந்துப் பண்டிகைகள் மூடநம்பிக்கைகள். ஆனால் பாருங்கள் விநாயகர் சதுர்த்தி அன்று மற்ற தொலைக்காட்சிகள் சிறப்புநிகழ்ச்சிகள் மூலம் காசு அள்ளிக்கொண்டிருக்கும் வேளையில் கலைஞரின் தொலைகாட்சி மட்டும் ஏன் வருமானம் இழக்கவேண்டும் ? விடுமுறை நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் என்ற தலைப்பில் அங்கே மதச்சார்பின்மை பேணிக்காக்கப்படும் .ஆக பிள்ளையார் வேண்டாம் ஆனால் அவர் பிறந்த நாளில் விளம்பர வருமானம் வேண்டும். இந்த பிழைப்பிற்கு ஒரு நாலு பேரிடம் .............. வாங்கி ......... ஹ்ம்ம் இதை எப்படி என்கையால் எழுதுவது ? இவர்கள்தான் இந்திய ஒருமைப் பாட்டினைக் கட்டிக் காப்பாற்றும் மிகப்பெரிய தூண்கள்.

இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சனை பாகிஸ்தானோ சீனாவோ இலங்கையோ அல்ல. மாறாக தான் ஒரு வல்லரசு என்னும் எண்ணமே இந்தியாவின் மிகப்பெரும் பிரச்சனை.  இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட குடிநீரோ , தரமான சாலை வசதியோ , தடையில்லா மின்சாரமோ அனைவருக்கும் கிடைப்பதில்லை.இவ்வளவு ஏன் நல்ல பொதுக் கழிப்பறை வசதிகள் நாட்டிலேயே கிடையாது எனினும் நம் வல்லரசு இந்தியாவோ தள்ளாடும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்த 10 பில்லியன் டாலர்கள் வழங்கப்போவதாகப்   படித்து மனம் அதிர்ந்தேன்.மேலும் தமிழ் நாட்டிலும் பிற மாநிலங்களிலும் கடுமையான  மின்வெட்டுப் பிரச்சனை நிலவி வரும்போது பாகிஸ்தானுக்கு 5000  மெகா வாட் மின்சாரம் வழங்கப்போவதாக திருவாளர் மன்மோகன் சிங் சில வாரங்களுக்கு முன்  மேலும் ஒரு அதிர்ச்சி அளித்தார். இந்தமாதிரி பெருமைக்குப் பி  தின்னும் போக்கினை நமது அரசாங்கம் என்று மாற்றுமோ தெரியவில்லை.

இப்போதுதான் 2G ஊழல் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி எனும் இலக்கினை நிர்ணயம் செய்து சிலவருடங்கள் ஆகவில்லை, வந்தாயிற்று சுரங்க ஊழல் முறைகேடுகள் ஒரு லட்சத்து எண்பத்து மூன்றாயிரம் கோடிகள். ஆஹா அருமை.
இந்தியாவில் நிகழும் ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடு பற்றி எழுதுவதற்கு ஒன்றும் இல்லை. இவற்றிற்கு எதிராகப் போராடிய அண்ணா ஹசாரே வை   
ஊடகங்களே ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டன. சோனியா மன்மோகன்சிங் , ப சிதம்பரம், சுரேஷ் கல்மாடி, சரத் பவார், நாராயண சாமி  போன்ற அப்பழுக்கில்லாத தலைவர்கள் இருக்கும்போது ஊழலாவது ஒன்றாவது ? அண்ணா ஹசாரே ஒரு விளம்பரப்பிரியர் என்றெல்லாம் எழுதிய  என்வழி போன்ற இணைய தளங்கள் தள்ளாத வயதிலும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட அந்த விவசாயி ஹசாரே போராடுவது அவரை எதிர்க்கும் ஆட்களுக்கும் சேர்த்துதான் என்பதை புரிந்து கொள்ளவே இல்லை. 


காந்திய வழி நடப்பதாகக் கூறிக்கொள்ளும்  காங்கிரஸ் அரசு , காந்தியின் ஆயுதமான உண்ணாவிரதத்தை மயிருக்கும் சமானமாக மதிக்கவில்லை. இடிந்தகரையில் கூடங்குளம் அணுமின் நிலையத்ததிற்கு எதிர்ப்பு தெரிவித்து காந்திய வழியில் போராடிய மக்களை எக்கேடோ கேட்டு செத்துத் தொலையுங்கள் என்று கண்டு கொள்ளாமல் விட்ட தருணம் இந்தியாவில் ஜனநாயகம் என்ற விழுமியத்தின் இறுதி மூச்சினை நிப்பாட்டிய தருணம்.
மொத்த இந்திய ஊடகங்களும் ஆரம்ப கட்டப் பரபரப்புக்குப்பின் தற்போதைய நிலைமை என்ன ஏது என்று தெரிந்து கொள்ள ஆர்வம் செலுத்தவில்லை. 
தமிழக மக்களுக்கு கதிர்வீச்சினால் கல்பாக்கம் சுற்றியுள்ள கிராமங்களில் மரபணுக் குறைபாடுகள் அதிகமுள்ள குழந்தைகள் பிறப்பது பற்றிக் கவலையில்லை. நாளை நம்முடைய பிள்ளைகள் அவ்வாறு பிறக்கும் என்பதைப் பற்றிய கவலை இல்லை. நமக்கு இப்போதைக்கு வேண்டியது மின்சாரம் , கள்ள உறவினை சித்தரிக்கும் தொலைக்காட்சித் தொடர்கள் , ஐ பி எல் ,டாஸ்மாக்  மது.


கேரளாவிற்கு தன் மாநிலத்தில் அணுமின் நிலையம் வேண்டாம் ஆனால் கூடங்குளத்திலிருந்து மின்சாரம் வேண்டும். பிறமாநில செய்திகள் கூடங்குளம் மக்கள் போராட்டத்தை ஒரு மக்கள்விரோத போராட்டமாகவே பார்க்கின்றன. இப்படி மொழியால் , கலாச்சாரத்தால் இன்னும் பலவற்றாலும் வேறுபட்டுக் கிடக்கும் இந்தியா மேலும் மேலும் சீரழியும் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது. எனக்கு தேசப்பற்று ஒரு புண்ணாக்கும் கிடையாது.

இங்கு காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்துக்களைத் தெரிவித்திருப்பதால் நான் கண்மூடித்தனமான  பிஜேபி ஆதரவாளர் என்று நினைக்க  வேண்டாம். அவர்களும் காங்கிரசுக்கு சளைத்தவர்கள் இல்லை. என்ன ஒன்று அவர்களுக்கு இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கிடைத்த வாய்ப்பிலும் அடி பின்னி எடுத்து விட்டார்கள் (கர்நாடகா) ஆனால் காங்கிரசை விட சற்றேனும் மேம்பட்ட  அரசியல் நடத்துவார்கள் என்றே நம்புகிறேன் .இந்தியாவின் இன்றைய இழிநிலையைப் போக்க நமக்குத் தேவை ஒரு சர்தார் வல்லபாய் படேல். மீண்டும் ஒரு குஜராத்தி (மோடி) வந்தால் நிலைமை மேம்படும் என்று எண்ணுகிறேன்.

17 comments:

 1. நல்ல பதிவு, ஆனால் நிச்சயமாக அரசியல்வாதிகளை மட்டும் குறை கூற முடியாது. அவர்கள் முதலீடு செய்வதே நல்ல லாபத்திற்காகத்தான். ஆனால் அவர்களின் எச்சை காசுக்கு பிச்சை எடுக்கும் பத்திரிக்கைகளையும், பதவியை பிச்சையாயிட்டு, அவனிடமே அரை வயிற்றுக்கு பிச்சை எடுக்கும் மக்களையும்தான் குறை கூற வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. அன்புள்ள முத்துக்குமரன் , வருகைக்கு நன்றி , அரசியல் வாதிகளை மட்டும் குறை கூற முடியாது என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன்.ஆனால் ஊழலின் ஊற்றுக்கண் என்பது அவர்களிடமிருந்துதான் தொடர்கிறது. வருவாய்த்துறையை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்வோம். அத்துறையிலிருந்து ஒரு குறிப்பிட்ட பங்கு அமைச்சருக்கு சென்றாக வேண்டும். அதற்காக அதிகாரிகள் மக்களிடம் லஞ்சம் பெறுகிறார்கள்.கூடவே அதிகாரிகளும் ஒரு பங்கினை அவர்களுக்காக எடுத்துக் கொள்கிறார்கள். எனவே ஊழலின் படிநிலை முறையில் முதலில் இருப்பது அரசியல் வாதிகள்தான். கொடுமை என்னவெனில் இது பிரிட்டிஷ் காலத்திலிருந்தே உள்ளது.அது நமது மரபணுக்களில் ஊடுருவி இருக்கவும் கூடும். இந்நிலை மாறவேண்டுமெனில் கடுமையான சட்ட திட்டங்கள் மூலமே முடியும்,ஆனால் அரசியல்வாதிகள் அத்தகைய சட்டங்களை இயற்ற மாட்டார்கள் .

   Delete
 2. நல்ல ஒரு தலைமை இந்த நாட்டுக்கு தேவை .....

  ReplyDelete
  Replies
  1. மொல்லாளி உங்க ப்ளாக் வளர வாழ்த்துக்கள் . சீக்கிரம் எழுத ஆரம்பிங்க..! வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி

   Delete
 3. நல்ல அலசல் நண்பரே... பல தகவல்கள்...

  தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே.

   Delete
 4. Nice.. We are discussing nondisciplinary politicians leading India rather I believe we don't do our part. If those political leaders are pillars, then we become small stones building those pillars. If they are corrupt, it means that a substantial amount of stones which built that pillar are corrupt. So I strongly believe that if we expect a change of pillar, we necessarily need to correct those small stones. But that's just my opinion.. I like your post and the language except that you may need some spell check.

  ReplyDelete
  Replies
  1. thanka for your wishes and comments anand. I believe, if we dont have a short cut we wont go that way.but the real fact is every simple thing from birth certificate to death certificate, the officials expecting money from people.over the years we believe that it is part of the system. now every common man in someways bribing for everything. even I bribed for getting International driver's license recently out of no choice. so my point is if the govt enacts strict laws against corruption, eventually it will reduce. reg the spelling mistakes I am so confident in my tamil that i overlook some mistakes.I will avoid those in future. thanks.

   Delete
 5. ராஜேஷ் !!!
  உங்களது போஸ்ட் ...சராசரி இந்திய மனிதனின் ஆதங்கத்தின் சரியான பிரதிபலிப்பு ....

  இன்னொரு கொடுமை ,,நமது பிரதமர் சொல்லுகிறார் "விரைவில் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்புவோம்"

  முதலில் எங்க உசிலம்பட்டிக்கு ...நல்ல பஸ் விட சொல்லுங்கப்பு ,,,,.....

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தெய்வா.
   இந்திய அரசாங்கத்தின் விசித்திர மனநோயைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை.
   முதலில் அடிப்படை வசதிகளில் தன்னிறைவு பெற்றுவிட்டு அறிவியல் விஷயங்களில் கவனம் செலுத்தலாமே.?
   இந்த செவ்வாய் கிரகம் , நிலவுக்கு மனிதனை அனுப்புவது ஒருபுறம், தேனீ மாவட்டத்தில் மலையைத் துளைத்து
   நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப் போகின்றார்களாம். மலையை துளைக்கும் சாக்கில் லட்சம் கோடிகள் கொள்ளை அடிக்கலாம்.
   இந்த இழவை நிறுத்திவிட்டு நாடு முழுவதும் தரமான கழிப்பறை வசதிகள் , குடிநீர் விநியோகத்தை செம்மையாக்குதல் போன்ற பணிகளைச் செய்யலாம். டர்பன் கட்டிய ஊமை இருக்கும் வரை இதுதான் நம் தலைஎழுத்து.

   Delete
 6. ராஜேஷ் !!!
  உங்களது போஸ்ட் ...சராசரி இந்திய மனிதனின் ஆதங்கத்தின் சரியான பிரதிபலிப்பு ....

  இன்னொரு கொடுமை ,,நமது பிரதமர் சொல்லுகிறார் "விரைவில் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்புவோம்"

  முதலில் எங்க உசிலம்பட்டிக்கு ...நல்ல பஸ் விட சொல்லுங்கப்பு ,,,,.....

  ReplyDelete
 7. ராஜேஷ்...ஆதங்கம் எல்லாம் சரிதான்...பட் , ஒரு விஷயம் மட்டும் உண்மை...இந்த விஷயம் எல்லாம் சில பல வருஷங்களில் மட்டும் ஆரம்பிச்சது இல்லை...மத வேறுபாடுகள்,துவேஷங்கள்,துரோகங்கள் எல்லாம் எப்பவோ இருந்தே ஆரம்பிச்சு,தொடர்ந்து இருந்துட்டே இருந்திருக்கு...வரலாற்று பக்கங்களை கொஞ்சம் திரும்பி பார்த்தால்...அப்பனை போட்டு தள்ளிட்டு மகனே அரியணை ஏறி இருப்பான்,சகோதரனை போட்டு தள்ளிட்டு அண்ணன் அல்லது தம்பி ராஜா ஆகி இருப்பான்...கிளியோபட்ரா(தன் தம்பிய கொன்னுட்டு அரியணை ஏறியது)
  முதல் அவுரங்கஷிப்(தந்தையவே சிறை வைத்தது),
  ஷாஜஹான்(தம்பியை போட்டு தள்ளியது) ,
  அசோக சக்கரவர்த்தி(சகோதரர்களை கொன்றது),
  1192 ல முஹம்மது கோரி,மன்னன் பிரிதிவி கூட தரேன் வார் ல சண்டை போடும்போது உள்ளூர் காரனுன்களே பிரிதிவிக்கு உதவாமல் மண்ணை கவ்வியது ன்னு எல்லாமே வரலாற்றின் அசிங்கமான பக்கங்கள்...
  (அடுத்து அடுத்து வந்த அத்தனை சிறிய,பெரிய பேரரசுகள் எல்லாமே ஒற்றுமை இல்லாமல் உருக்குலஞ்சு போனவை தான்...)ன்னு நிறைய உதாரணம் சொல்லலாம்...அசோக சக்கரவர்த்தி புத்த மதத்துக்கு ஆதரவு தெரிவிக்கிராருனு உயர்ந்த குடி :-) அசோகனின் இந்து மத மந்திரி புஷ்ய சுங்கர் னு நினைக்கிறேன்...அந்த ஆளு மவுரிய இளவரசனையே போட்டு தள்ளிட்டு ராஜா ஆனவன்...

  இப்போ சுதந்திர போராட்ட முயற்சியில் கூட தென்னிந்தியால நீதிகட்சி இங்கிலீஷ்காரனின் சில அரசியல் கருத்தை சப்போர்ட் பண்ண,வட இந்தியா காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கன்னு அப்போவும் நம்ம இந்தியனின் கூட்டுறவு :-) க்கு பொங்கல் வச்சாங்க :-)

  இந்தியமன்னர்கள் ஒற்றுமையா இருந்து இருந்தால் எந்த அராபிய ,மங்கோலிய ,ஆங்கிலேய அரசும் இந்தியாக்குள்ளே காலடி எடுத்து வச்சுருக்க மாட்டானுங்க...இந்தியால இருக்குற சொத்துக்களையும் எவனும் கொள்ளையடிச்சுட்டு போயிருக்க மாட்டான்...கட்டபொம்மனையே காட்டி குடுத்தது நம்ம ஊரு காரன் தான்...ஸோ,மதம் ங்கற விஷயத்தை விட்டுட்டு நம்ம நாடுன்னு தீர்க்கமான எண்ணம் எந்த நூற்றாண்டுலையுமே இருந்ததா தெரில...இதுல எந்த லட்சணத்தில் இந்த decade பத்தி யோசிக்க...Things that are fundamentally wrong :-)

  //இன்றைய இழிநிலையைப் போக்க நமக்குத் தேவை ஒரு சர்தார் வல்லபாய் படேல். மீண்டும் ஒரு குஜராத்தி (மோடி) வந்தால் நிலைமை மேம்படும் என்று எண்ணுகிறேன்.//

  தலைமைங்கிறது ஒரே ஒரு ஆளின் நல்ல நடத்தை வச்சு யோசிக்கிறது இந்த ஊழல் புடிச்ச நாட்டில் சாத்தியமா...?? சகாயம் னு ஒரே ஒரு ஆளு மதுரையில் கிரேட் ஆ கலக்கிட்டு இருந்தார்...ஆட்சி மாற மாற என்ன ஆச்சு...ஏதோ ஒரு உதவாத department ல தூக்கி அடிச்சுட்டாங்க அந்த ஆளை...எத்தனை தலைவன் இப்படி இருப்பான்...இருக்க முடியும்....இருக்க விட்ருவாங்களா...??!!

  ReplyDelete
 8. இந்தியா பாகிஸ்தான் பிரிவினையில் காந்திஜிக்கு கடைசி வரை விருப்பம் இல்லன்னு தான் கேள்வி பட்டு இருக்கேன்...அதை தடுக்க எவ்வளவோ முயற்சி பண்ணதா கூட கேள்வி பட்டேன்...ஆனால் அப்போதைய காங்கிரஸ் தலைவர்கள் இடையே ஏற்பட்ட பயங்கர ஈகோ தான் முஸ்லிம் லீக் மாதிரி பிரிவினை கட்சி ஆரம்பிச்சு...இப்படி ஸ்பிலிட் இல் போயி முடிஞ்சுருக்கு...பங்களாதேஷ் பிரிவினையால் வணிக ரீதியாய் நாம இழந்தது ரொம்பவே அதிகம்...அதே மாதிரி வளம் தரும் ஜீவநதிகள் ஓடும் செழிப்பான பூமியின் பலபகுதிகளை பாகிஷ்டன் பிரிவினையில் இழந்தோம்...என்னத்தை சொல்றது...எல்லாருமே ஒன்று கூடி இருந்தால் பொருளாதாரம்,வணிகம்,ஹ்யுமன் ரிசொர்செஸ் னு அமேரிக்கா மாதிரி ஊருகளுக்கு தண்ணி காட்ட முயற்சி பண்ணிருக்கலாம்....:-(

  ReplyDelete
 9. //இந்த பிழைப்பிற்கு ஒரு நாலு பேரிடம் .............. வாங்கி ......... ஹ்ம்ம் இதை எப்படி என்கையால் எழுதுவது ? இவர்கள்தான் இந்திய ஒருமைப் பாட்டினைக் கட்டிக் காப்பாற்றும் மிகப்பெரிய தூண்கள்.//

  இதை மட்டும் அவர் படிச்சு இருந்தால் மாபெரும் வெற்றி மாநாடு டெசோ :-) வை ஒரு வேளை நிறுத்தி இருந்து இருக்கலாம்...;-)))

  ReplyDelete
 10. Hi Rajesh,

  Good one machi !! especially i liked the stuff regarding the money spent / going to spend for other countries . and also for "mission mars" and "chandrayaan" and all sort of nonsense ( still workers in municipality/railways are in very bad state cleaning the waste by hands. we are not innovating a machine for that !! atleast we can get some technology from others countries for these sort of issues... !! first we need to think of walking , then we will dream about flying !
  keep writing these sort of powerful essays on social issues too!!

  Kudosss.....


  Pravin C

  ReplyDelete
 11. இங்கு காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்துக்களைத் தெரிவித்திருப்பதால் நான் கண்மூடித்தனமான பிஜேபி ஆதரவாளர் என்று நினைக்க வேண்டாம். அவர்களும் காங்கிரசுக்கு சளைத்தவர்கள் இல்லை. என்ன ஒன்று அவர்களுக்கு இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கிடைத்த வாய்ப்பிலும் அடி பின்னி எடுத்து விட்டார்கள் (கர்நாடகா) ஆனால் காங்கிரசை விட சற்றேனும் மேம்பட்ட அரசியல் நடத்துவார்கள் என்றே நம்புகிறேன் .இந்தியாவின் இன்றைய இழிநிலையைப் போக்க நமக்குத் தேவை ஒரு சர்தார் வல்லபாய் படேல். மீண்டும் ஒரு குஜராத்தி (மோடி) வந்தால் நிலைமை மேம்படும் என்று எண்ணுகிறேன்.

  ReplyDelete
 12. உண்மையில் மிகசிறந்த அறிவியல் பார்வையுடன் எழுதப்பட்ட கட்டுரை இன்றைய எல்லா மக்களும் இன்றைய அழும் பறைய கட்சியை ஒதுக்கத்தொடன்கினால் தான் அதன் சீரழிவு அதற்க்கு புரியவரும் சிறந்த இடுகை பாராட்டுகள்

  ReplyDelete

இந்த பதிவு பிடித்திருந்தால் வாழ்த்துங்கள், இல்லையென்றாலும் பரவாயில்லை உங்களுடைய விவாதங்களை தெரிவியுங்கள். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி !