Tuesday, February 9, 2010

சொர்க்கமே என்றாலும்

எழில்மிகு நாஞ்சில் நாடு... இப்புவியில் ஒரு சொர்க்கம் !

ரப்பர் காடுகள் - கீரிப்பாறை போகும் வழி 

(படங்களைப் பெரிதாக்க மேலே சொடுக்கவும்..!)

 

Friday, February 5, 2010

நான் மொழியறிந்தேன்

தமிழ்நாட்டில் பிறந்ததற்காக நான் வருத்தப்படும் ஒரே விஷயம் பிற மொழிகளைக் கற்கும் வாய்ப்பு மிகக் குறைவு என்பதுதான்.என் அம்மா அப்பா நன்றாக மலையாளம் பேசுவார்கள்.எனக்கும் அக்காவுக்கும் தம்பிக்கும் நன்றாக மலையாளம் புரியும் என்றாலும் பேச முயற்சிப்பதில்லை.எப்பொழுதாவது திருமணங்களில் உறவினர்களைப் பார்க்கும் போது அவர்கள் மலையாளத்தில் ஏதாவது கேட்டால் தமிழில் பதில் கூறுவோம். "ஓ அவரொக்க தமிழாணோ?" என்று அம்மா அப்பாவைப் பார்த்துக் கேட்பார்கள். குமரி மாவட்டம் பண்டைய திருவிதாங்கூரின் ஒரு பகுதி என்பதால் மலையாளம் காதுகளில் விழுந்துகொண்டே இருக்கும் வாய்ப்பு அதிகம். அதனால் ஒருமாதிரியாக என்னால் சமாளிக்க முடியும்.அப்புறம் ஆங்கிலம். ஆங்கில வழியில் பள்ளியில் படித்தாலும் அதிகம் பேசியதில்லை. ஆனால் கல்லூரியின் இறுதிக்காலங்களில் ஆங்கிலம் பேசியே ஆகவேண்டிய கட்டாயத்தினால் ஒருவாறு பேசத்தொடங்கினேன்.தற்சமயம் போதுமான அளவுக்கு பிழையின்றி பேசவும் எழுதவும் முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.