Friday, January 29, 2010

சிம்மசொப்பனம்

இதுவரை நான் கூறிய தமிழ் வகுப்பு அனுபவங்களிலிருந்து இப்போது நான் கூறப் போவது சற்று வித்தியாசமானது.பொதுவாக தமிழாசிரியர் என்றதும் நம் நினைவுக்கு வரும் பிம்பம் என்ன? நெற்றியில் விபூதிப் பட்டை லேசான முன்வழுக்கை நடுத்தர அல்லது ஓய்வை நெருங்கும் வயது வெள்ளை வேஷ்டி சட்டை, சுருக்கமாகச் சொல்வதானால் ஒரு வாத்தியார் ராமன், பூர்ணம் விஸ்வநாதன் , சங்கரன்,சோமயாஜுலு போன்றவர்களின் தோற்றம்.எங்கள் ஒன்பதாம் வகுப்பு தமிழாசிரியர் திருவாளர் நாகராஜன் அவர்கள். சார் நடுத்தர வயதுக்காரர், வேஷ்டி தவிர்ப்பவர், (பேன்ட் அணிந்திருப்பார்).மற்றபடி சிறிய விபூதி கீற்றுடன் ஒரு அக்மார்க் தமிழாசிரியர் தான்.


அவரின் சிறப்பம்சம் ரௌத்ரம் பழகுதல். கடின உழைப்பாளி.எங்கள் பள்ளியிலேயே கடைநிலை பணியிலிருந்து முன்னேறி ஆசிரியரானவர். முதன்முதலில் எட்டாம் வகுப்பில் ப்ரேயர் முடிந்து திரும்பி வரிசையில் நடந்து வரும் பொது "Terror of the school" ஆக அடையாளம் காட்டப் பட்டவர். ப்ரேயர் அசம்ப்ளி முடிந்து வரும் வேளைகளில் அவர் தாமதமாக வரும் மாணவர்களின் காது மடல்களை வருடி சிவக்கச் செய்வார்.குப்புதான் முதலில் அவரைப் பற்றிக் கூறினான்.லேய் மக்கா அவருதாம்ல நாராஜன் சாரு.. அடி பின்னிருவாரு கேட்டியா? கொன்னு களத்திருவார் மக்கா.. என்றான். அப்படியா மக்கா என்று சற்று கலவரமானேன்.ஒன்பதாம் வகுப்பும் வந்தது. எங்கள் வகுப்பானது வேதியியல் சோதனைக் கூடம் அருகில் இருக்கும். கிச்சா வயது 16 என்ற மொக்கை படத்தில் வரும் பள்ளிதான் எங்கள் பள்ளி.S.M.R.V. மேல்நிலைப் பள்ளி. படத்தில் மாணவர்களுக்கு தண்டனையாக முட்டிக்கால் போட்டு நடக்கச் செய்வார்களே அந்த வராண்டா தான் எங்கள் வகுப்பு.

முதல் நாள் வகுப்பில் எல்லோரும் பழைய நண்பர்களுடன் உட்கார்ந்திருந்தோம். சார் வந்தார். " என்னப் பத்தி எல்லாரும் கேள்விப் பட்ருப்பீங்க.. நான் கொஞ்சம் ஒழுக்கம் மரியாதைய எதிர்பார்ப்பேன். அப்படி நீங்க நடந்துக்கிட்டீங்கன்னா ஒரு பிரச்சனையும் இல்ல. ஏன்னா ரெண்டு மாடும் ஒரே பக்கமா இழுத்தாத்தான் வண்டி ஓடும்.. இல்லாட்டி பிரச்சனைதான் ..புரிஞ்சாடே? என்றார். எல்லோரும் மையமாகத் தலையை ஆட்டினோம்.குப்பு மட்டும் சம்பந்தமே இல்லாமல் "எஸ் சார் .. வெரிகுட் சார்" என்று சன்னமாகக் கூறினான். வழக்கம் போல் சிரிப்பு பீறிட்டு வர , மொத நாளே அடிவாங்க வச்சிருவான் போல இருக்கே என்று கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன்.

சரி இப்போ நல்ல வளத்தியான பயக்கல்லாம் முன்னாடி பெஞ்சுல போய் இருங்கடே என்று தரம் பிரிக்க ஆரம்பித்தார். இப்படி அவமானப் படுறதே நம்ம பொழப்பா போச்சு என்று நொந்து கொண்டே எழுந்து முதல் பெஞ்சில் உக்கார ஆரம்பித்தேன்.ஆறடி உயரமுள்ள ரங்கசாமி கடைசி பெஞ்சுக்கு போனான்.இப்படியாக குப்பு, பாலு , பாலசுப்ரமணியிடமிருந்து என்னைப் பிரித்தார்.

முதல் பெஞ்சில் நான், வேல்முருகன், E.A.பெருமாள், ராம் குமார் என நான்கு பேர். கொஞ்ச நாள் வகுப்பு அமைதியாகச் சென்றது. புயலுக்கு முன்னும் அமைதிதானே. அந்த நாளும் வந்தது. நான் அவரிடம் மாட்டினேன் . காரணம் நம்ம முருகேஷ் தான்.காலை இடைவேளை முடிந்து தாமதமாக வந்து சாரிடம் மாட்டிக் கொண்டான். சார் பார்த்து ஒரு முறை முறைத்துவிட்டு வெளியே நிற்க வைத்து விட்டார்.இரண்டு பாடவேளைகள் அவன் வெளியே நின்றான்,அப்புறம் மதிய உணவு இடைவேளை. எல்லாரும் சாப்பிட்டுவிட்டு பாத்திரத்தை கழுவி விட்டு வந்தோம் முருகேஷும் சாப்பிட்டுவிட்டு வெளியே நின்று கொண்டான்.நான் சார்தான் வர நேரம் ஆகுமே என்று அவனிடம் பேச அவனருகில் போனேன். "லேய் வேண்டாம்ல..! உள்ள போல... உள்ள போ மக்கா!" என்று பதறினான். என்னமோ ஏதோ என்று நான் உள்ளே போக எத்தனிக்க வாசலுக்கு நேரெதிர் சார் இருக்கையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். எனக்கு சாப்பிட்ட சாப்பாடு வெளியே வந்துவிடும் போல இருந்தது(வாந்தி இல்லை). நக்கீரனைப் பார்த்த சிவபெருமான் போல அவர் விழி ஆனது. ஏதோ விசாரிக்க போனியேடே.. பொய் பொறுமையாட்டு விசாரிச்சிட்டு அவன்கூடவே நில்லு போ.. என்றார். நான் உடனே "சார்! அது வந்து! "என்று சொல்ல முற்பட்டேன். வெளிய போல.. என்று ஒரு சத்தம் போட்டார்.

மறுப்பேதும் இல்லாமல் வெளியே வந்து நின்றுவிட்டேன்.முருகேஷுக்கு ஆள்துணை கிடைத்தது . அதற்கு முன்னர் வகுப்புகளில் எத்தனையோ முறை அடிவாங்கி இருந்தாலும் வெளியே நிற்க வைக்கப் பட்டதில்லை. வெளியே நிற்பதென்பது எனக்கு சுப்ரீம் கோர்ட்டில் தூக்கு தண்டனைத் தருவதைப் போல பெரிய குற்றமாகத் தோன்றியது. அட வெளிய நிக்கிறது கூட பிரச்சனை இல்லை, என் அக்காவும் தம்பியும் அதே பள்ளியில்தான் படித்தார்கள் ஒருவேளை அவர்கள் பார்த்துவிட்டால் வீட்டில் வத்தி வைத்து விடுவார்களே என்கிற அச்சம் தான். ஒருவழியாக தூண்களுக்குப் பின் மறைந்து கொண்டும் போகும் வரும் ஆசிரியர்களைப் பார்த்து அசடு வழிந்துகொண்டும் நேரம் கடத்தினேன். முருகேஷ் என்னமோ அவார்ட் கிடைத்துவிட்ட பெருமித பாவனையில் எல்லாருக்கும் வலிந்து வணக்கம் வைத்துக் கொண்டிருந்தான். அப்புறம் சார் வந்து உள்ள போங்கல.. என்று வகுப்பினுள் அனுமதித்தார்.

சார் தன்னிடம் சிக்கும் மாணவர்களைத் திட்ட ஒரு வாக்கியம் வைத்திருப்பார். " ஒழுக்கம் இல்ல மரியாத இல்ல ..! போய் அப்பன கூட்டிட்டு வால.. என்று காதுகளை முறுக்குவார். சரி அப்படி பையன் என்னதான் தப்பு பண்ணியிருப்பான் என்று பார்த்தால் ஒன்றுமில்லை, ஒண்ணுக்கு போய் விட்டு ஒரு நிமிஷம் தாமதமாக வந்திருப்பான் இல்லாவிடில் ரெண்டுக்கு போய் விட்டு ரெண்டு நிமிடம் தாமதித்திருப்பான். அதிக பட்சம் தமிழ் புக் அல்லது நோட்டு கொண்டுவர மறந்திருப்பான். வந்தது இரண்டாவது கண்டம் எனக்கு நோட்டு வடிவில்.

சார் வகுப்பில் செய்யுள் பாடல்களுக்கு விளக்கம் தரும் பொழுது நாங்கள் அதை நோட்டுக்களில் குறித்துக் கொள்ள வேண்டும். கோடுகள் இல்லாத ப்ளைன் நோட்டுக்கள்.

"உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவர் அன்னவர்க் கேசர ணாங்களே" - எனும் பாடலை அவர் விளக்கும்போதுதான் அர்த்தம் புரியும்.

"உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே"
என்று எழுதிப் பார்த்தால்தான் எளிதில் புரியும். இன்றளவும் அந்தப் பாடல் என்மனதிலிருப்பதற்கு அவருடைய அணுகுமுறையே காரணம் .

எல்லாரும் நோட்டெடுத்து அர்த்தம் எழுதிக்கோங்கடே. .என்று அர்த்தம் கூற ஆரம்பித்தார்.நோட்டை எடுத்துப் பார்த்த எனக்கு பகீர் என்றது. நான் கொண்டு வந்திருந்தது ஒரு கோடிட்ட நோட்டு .ஆப்பதனை அசைத்திட்ட குரங்கினைப் போல் மனம் கிடந்துழல ஆரம்பித்தது. சரி வேறு ஒரு பாடநோட்டின் அட்டையை பின்பக்கமாகத் திருப்பி புதிய நோட்டுபோல மாற்றி எழுத ஆரம்பிக்கலாமே என்ற எண்ணம் வந்தது. அனால் அதில் ஆபத்து அதிகம் ஒருவேளை பார்த்துவிட்டாரென்றால் அது ஒழுக்கக்கேடாகிவிடும். அதற்குள் சார் ஒவ்வொருவர் நோட்டுக்களாக வாங்கிப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்.

சரி வருவதை பார்த்துக் கொள்ளலாம் என்று நான் பாட்டுக்கு எழுதலானேன். என் பெஞ்ச் அருகில் வந்தார். வேல்முருகன், பெருமாள் அடுத்து நான்தான்.முதலில் பார்த்துவிட்டுப் போய் விட்டார்.அப்பாடா கண்டம் விலகியது என்று சற்றே நிம்மதி அடைந்தேன்.அப்புறம் அடுத்த பெஞ்சில் ஒரு ரெண்டு மூன்று நோட்டுகளைப் பார்த்தார் .கார்த்திகேயன் கோடிட்ட நோட்டில் எழுதியிருந்தான்.சாரின் புருவங்கள் சுருங்கின, கண்கள் விரிந்தன. லேய் எவம்ல ஒன்ன ரூல்ட் நோட்ல எழுத சொன்னது ? நாளைக்கு வரும்போது அப்பன கூட்டிட்டு வால.! என்றார். எங்கே அம்பு நம் பக்கம் திரும்பி விடுமோ என்று நினைக்கும்போதே மிகச் சரியாக அவ்வாறே ஆனது.

அங்கன மொத பெஞ்சுல யாரோ ரூல்ட் நோட்ல எழுதிருந்தாம்லா? யாருடே அது ? என்றார். நான் மெதுவாக எழுந்தேன்.லேய் மனசுல என்ன நெனைச்சிட்டு இருக்க? நோட்டு எடுத்திட்டு வரலேன்னா சொல்லாண்டாமால? பாத்தியா? ஒழுக்கம் இல்ல மரியாத இல்ல .. வாத்தியானக் கண்டு பயமும் இல்ல.. நீ நாளைக்கி வரும்பம் அப்பன கூட்டிட்டு வா..! என்றார்.

எனக்கு தலை சுழல ஆரம்பித்த்தது.கால்கள் நழுவ ஆரம்பித்தன.இதெல்லாம் ஒரு காரணம்னு வீட்ல போய் சொல்ல முடியுமா? அப்படியே சொன்னாலும் அப்பா வருவாரா என்றெல்லாம் பலவித எண்ணங்கள்.நாளைக்கு பள்ளிக்கு லீவு போட்டுட்டா ஒருவேள சார் மறந்திடுவாரோ? லீவு போட வீட்ல என்ன மாதிரி பொய் சொல்லலாம் என்று பலவிதமாக் சிந்தித்துக் கொண்டே மற்ற வகுப்புகளை கடத்தினேன். ஒருவழியாக மாலை ஆனது, வீட்டிற்கு சென்றேன். அப்பாவிடம் சொல்ல வேண்டுமே. பொதுவில் அப்பா தண்மையான மனிதர் தான் என்றாலும் காலை அலுவலகம் கிளம்பும் நேரங்களில் சீப்பைக் காணவில்லை, சாவியைக் காணவில்லை என்று கொஞ்சம் டென்ஷனாகி சைலன்சர் இல்லாத RX 100 ஆக இரைவார். அம்மா இதெல்லாம் ஒரு பிரச்சனைய என்று பதிலுக்கு கொஞ்சம் சத்தம் போடுவார். அவ்வளவுதான் அப்பாவின் டென்ஷன்.ஒரு சில சமயங்களில் டென்ஷனாக எதுவும் இல்லையென்றால் அதை நினைத்து டென்ஷனாகி லேசாகக் கத்தி விட்டு செல்வார். மாலை திரும்பி வரும்போது காலையில் கத்திவிட்டுப் போனது இந்த மனிதர் தானா என்று சந்தேகம் வரும்.அவ்வளவு சாந்த சொரூபியாக வருவார்.

அப்பா வந்ததும் விஷயத்தைச் சொன்னேன். இதெல்லாம் ஒரு காரணமா? இதுகெல்லாம் ஆபிஸ் வேலைய விட்டுட்டு வரமுடியாது, முடிஞ்சா வந்து பாக்கேன். நீ கவலை படாம போ. சார் மறந்திடுவார் என்றார். நானும் சரி என்று மறுநாள் பள்ளி வந்தேன். மறுநாள் ஆங்கில வகுப்பு முடிந்து தமிழ் வகுப்பு வந்தது. ஆண்டவா இன்னிக்கு யாருமே இவர்கிட்ட மாட்டக் கூடாது என்று சுயநலம் கலந்த பொதுநலத்தோடு கடவுளை வேண்டினேன். சார் பாடம் நடத்தும் போது வேல்முருகனின் வாட்சையே பார்த்துக் கொண்டிருந்தேன்.நேரம் நகர மறுத்தது.ஒருவழியாக முடிந்தது தமிழ் வகுப்பு. ஆண்டவா இன்னிக்கு முழுக்க இவர் கண்ணுலேயே படாம தப்பிச்சிரணும் என்று எண்ணிக் கொண்டேன். அவ்வாறே செய்தேன்.

அன்று வெள்ளிக் கிழமை. அடுத்த இரண்டு நாட்கள் பள்ளி விடுமுறை. அதனால் சார் என்னை மறக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று சற்று மன நிம்மதி அடைந்தேன். திங்கள் செவ்வாய் எந்த ஒரு பிரச்சனையுமின்றிப் போனது.புதன்கிழமை என் கெட்ட காலம் ஒருத்தன் மாட்டினான். யார், என்ன காரணமென்று நினைவில்லை.

அதே இறந்து பழுத்துப் போன டயலாக்கை உதிர்த்தார். ஒழுக்கம் இல்ல மரியாத இல்ல போய் அப்பாவ கூட்டிட்டு வா என்றார். ("அப்பன" என்றால் வெஞ்சினம்.. "அப்பாவ" என்றால் மென்கோபம் என்று பொருள் கொள்க). அந்த நேரம் பார்த்துதானா அவரது ஞாபக சக்தி அவசியமின்றி அதி கூர்மையாக வேண்டும்? அங்க மொத பெஞ்சுல யாரையோ அப்பாவ கூட்டிட்டு வரச் சொன்னேனே? யாரது என்றார்.நான் எழுந்து சார்.. அப்பா ஆபிஸ்ல இன்ஸ்பெக்ஷன் நடக்குறதுனால அவரால வர முடில.. அது முடிஞ்ச ஒடனே கூட்டிட்டு வரேன் சார் என்றேன். என்ன ஆச்சரியம் சாரும் சரி அப்புறமா கூட்டிட்டு வா என்று சொல்லிவிட்டு தொடர ஆரம்பித்தார்.திரும்பவும் கவலை ரேகை என்னைப் படர்ந்தது.

அன்று மதியமே எனக்கு லேசாகக் காய்ச்சல் ஆரம்பித்தது. தூக்கம் தூக்கமாக வந்தது. குப்புசாமியும் பாலசுப்ரமணியமும் என்னை வீட்டில் கொண்டு போய் விட்டனர். அடுத்த ஆறு நாட்களுக்கு எனக்கு கடுமையான காய்ச்சல் லேசாகக் குறைவதும் மீண்டும் வருவதுமாக இருந்தது. அம்மா என்னை பள்ளி அருகில் இருக்கும் கருத்து விநாயகர் கோவிலுக்கு கூட்டிச்சென்று அந்த பூசாரி தண்ணீர் தெளித்து ஒரு கயிறு கட்டிவிட்டார். பையன் எதையோ பார்த்து பயந்திருக்கான்  என்றார். அதிசயிக்கத்தக்க விதமாக அன்றே என் காய்ச்சல் குறைந்தது. இரண்டு நாள் ஓய்வுக்குப் பிறகு திங்கள் கிழமை மீண்டும் பள்ளி சென்றேன். சார் இன்னும் என்னை ஞாபகம் வைத்திருப்பாரோ என்று உள்ளூர ஒரு மெல்லிய அச்சம் ஓடிக் கொண்டே இருந்தது. சில நாட்களில் காலாண்டுப் பரிட்சை வந்து விடுமுறையும் வந்தது.மீண்டும் பள்ளி செல்லும் போது சார் இனியும் என்னை ஞாபகம் வைத்திருக்க மாட்டார் என்று நம்பிக்கை கொண்டேன். அதன்பிறகு ஒவ்வொருமுறையும் ஒருத்தன் மாட்டும் போதும் கொஞ்சம் கலக்கமாக இருக்கும் ஆனால் சாரும் அதன் பிறகு கேட்கவில்லை.



இப்போது நினைத்துப் பார்த்தால் ஒரு சின்ன விஷயத்திற்கு எவ்வளவு பயந்திருக்கிறோம் என்று சிரிப்பு வருகிறது.
நாகராஜன் சார் பற்றி இன்னும் சொல்வதற்கு இருக்கிறது. அடுத்து வரும் பதிவுகளில் சொல்கிறேன்.

8 comments:

  1. hai rajesh.

    ungaloda intha pathivai padikkum pothu ennodaiya palli natkal ellam ninaivukku varthu....... padikirathuku inimaiya irukku.... keep it up

    ReplyDelete
  2. இந்த மாதிரியான மொக்க கதைய இவ்வளோ அருமையாக வேறு யாராலும் சொல்ல முடியாதுடா. என்னமோ சொல்ல வராத போல சொல்லிட்டு உள்ள ஒண்ணுமே இல்லதா கதைய சொல்லிடே ராசேசு.

    Thanks & Regards

    Selvakumar R

    ReplyDelete
  3. Hello Raaaji,

    Ungal pathivai padithen, mikkka maghilchikku ulllanen. Ovvvaruu muraiyum ungal pathivai padikkum pothellam, ennnudaiyaa palli kaaala kataangalil nadantha koothukkal ninaivukku varukindranan. Athil onru ungalukkkughaaa.

    Ennnudiayaa aaangila vaaathiyaar oru peruthaa penmani. 80 mattrum 90ghalil cinimaavil naditha "binthukosh pola" irrupaar. appoluthu arainyaaandu paritchaai mudinthu sila vaarangal pona smamyam. oru naaal antha aaangila vaathiyaar paaadam nadatha vendi, PT(vilayaatu neram) oru mani neram kadan vaangi kondu,aaangila paadam nadathalaaanaar. Naangal kettatharkku peraghu enraavathu oru naal exchange seithu kollalaam ena soli saantha paduthinaar. Seri piragu paathu kollalaam ena vittu vitttom. enathu giragham anrdu mulu parichitchaaikku our vaaram irrrukum tharunaathill, athe aaangile vaathiyaaar thanathu paaadathai mudikkka aayathammaaanar( 2 hours - continously), kadisiyil oru mani nerathil mudikavun seithaar.meetham oru mani neram nna seivathu enndru yosikkalaanar, appoluthu oru munthirikotaaati madam enagaalu ningal oru PT class kadan thara vendum, aathaalaal naangal vilayada selghirom endren. avalavu thaan annaikku ennnakku anth Sanian( aaaangila vaathi) pottu vacchu poo vaikka poghala. Enga ammma, appa athe scholla padikura thambi ellorum Princpal roomla(AC), aiyo solla mudiyala, avalavu thiitu, ( ne yellam thirunthva pora, faila poiduvada, epdi ne paas panlaamnu naan paakuren, - ithu maathiri pala pattaghal, paaraatukkal) - anthe..

    menmelum ungal padipughal engal ninvalaighalai uyirpikkatum.

    Vaalgha Raaaji'n padaippu

    ReplyDelete
  4. //இப்படி அவமானப் படுறதே நம்ம பொழப்பா போச்சு என்று நொந்து கொண்டே எழுந்து//same feelings


    ....ரசித்தேன்

    அதுக்கப்புறம் நம்ம அனானிமஸ்(E & I செல்வாவா???) சொன்னதுதான்

    ReplyDelete
  5. Hi da,

    I m regularly goin thro ur postings.This one is too ordinary.too much mokkai da..i was actually waiting for the end.

    Vichu

    ReplyDelete
  6. macha, antha shanmugam-nagaraj sir episode um seekram velila varumnu yathirpaakrain ;)

    ReplyDelete
  7. taking me back to the class benches..

    ReplyDelete
  8. மக்கா நீ மாட்ட காரணமா இருந்தவன் நான் தான் லே...

    நினைவுகளை நேரில் கொண்டுவந்ததர்கு நன்றி

    ReplyDelete

இந்த பதிவு பிடித்திருந்தால் வாழ்த்துங்கள், இல்லையென்றாலும் பரவாயில்லை உங்களுடைய விவாதங்களை தெரிவியுங்கள். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி !