Friday, August 19, 2011

இயந்திரப் பொறியியல் மாணவர்களுக்கு-என் அனுபவம்-1


நான் வீட்டு உபயோகப் பொருள் (Home Appliances) உற்பத்தி செய்யும் பன்னாட்டு 
நிறுவனத்தில் ஒரு இயந்திரப் பொறியாளனாக ஐந்தரை வருடங்களாக வேலை
பார்த்துக் கொண்டிருக்கிறேன்.ஒரு குடும்பத்தில் முதல் தலைமுறையாக படித்து வெளியே 
வந்து முட்டி மோதி இன்று ஒரு நிலையை அடைந்திருக்கும் நான்,இயந்திரப் பொறியியல் 
துறையில் எனது  கல்வி மற்றும் வேலை அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று
நினைக்கிறேன்.
இது "Mechanical Engineering" படிக்கும் மாணவர்களுக்கு அல்லது படித்து முடித்து விட்டு  
வேலைக்கு முயற்சி செய்யும் நண்பர்களுக்கு ஒரு சிறிய அளவிலாவது நன்மை பயக்கலாம் 
என்ற நம்பிக்கையில் எழுதத் துவங்குகிறேன்.

செங்கோவி  அண்ணன் முன்பே இது பற்றி தொடர் பதிவு எழுதியுள்ளார்.உங்களுக்காக
இங்கே தொடர்புக் கண்ணிகள்


சிறு சிறு பதிவுகளில் அட்டகாசமாக எழுதியுள்ளார் செங்கோவி அண்ணன்நான் பகிரப்போவது என்னுடைய தனிப்பட்ட அனுபவங்களேபடிக்கும் போதும் படித்து முடித்த பிறகும் நான் செய்த தவறுகள் இதனைப் படிப்பவர்கள் செய்யக் கூடாது என்கிற ஒரு எண்ணம்தான் இப்பதிவினை
எழுதத் தூண்டியது.

இன்றைய நுகர்வுக் கலாச்சார காலத்தில்கழுத்தில் அடையாள அட்டையுடன் , INFY,WIPRO,CTS,TCS என்று தகவல் தொழில்நுட்பத்துறையில் அழகழகான பெண்களுடன் 
ஹேய் டியூட்  மொழி பேசி ,வேலை செய்ய முடியவில்லையே என்று நாம் 
வருத்தப்படத் தேவையில்லை.( சீ சீ இந்தப் பழம் புளிக்கும்.. டேய் ராஜேஷ் லேசா கருகுற வாசனை வருது பாரு..)
  
தகவல் தொழிநுட்பத்துறை ஒரு பொருளின் உற்பத்தி மற்றும் சந்தை விற்பனையில் 
எங்கே வருகிறது என்று பார்ப்போம்விவசாயத்துறை உற்பத்தி செய்கிறதுஉலகின் எல்லா 
வருமானத்திற்கும் தாய் தந்தை அதுதான்.நவீன தொழில் நுட்பத்துடன் விளைச்சலைக் 
கூட்ட இயந்திரங்கள் தேவைப்படுகின்றன இங்கும் மெக்கானிகல் எஞ்சினியர்களின் பங்களிப்பு 
தவிர்க்க இயலாததுவிவசாய  விளை பொருட்களை வேறோர் இடத்திற்கு கொண்டு
செல்ல வாகனம் தேவை (Logistics). வாகனங்கள் தயாரிக்க மெக்கானிகல் எஞ்சினியர்கள் 
தேவை இயந்திரப் பொறியியலும் விவசாயமும் இங்ஙனம் ஒன்றுக்கொன்று ஒத்திசைந்து
இயங்கும் (Symbiotic relationship) வகையில் உள்ளதுவிவசாய உற்பத்தி மூலம் பணம்
புழங்குகின்றதுபணபுழக்கத்திற்கு துணையாய் வங்கிகள் தேவை.வங்கிகள் விரைவான
சேவைக்கும் ,ATM போன்ற வசதிகள் தருவதற்கும் மென்பொருட்கள் தேவைப்படும் இடத்தில் 
தகவல் தொழில்நுட்பத்துறை மிக முக்கிய பங்காற்றுகின்றது. (இவைமட்டும் தவிர ஒரு தொழிற்சாலை இயக்கத்திலும் தகவல் தொழில் நுட்பத்துறையின் 
பங்கு உள்ளது என்பதை மறுக்கவில்லைஎனில் கிட்டத்தட்ட கடைசி இடம்அது தவிர இன்று 
எல்லா துறைகளுமே ஒன்றுக்கொன்று சார்ந்தே உள்ளன என்பதை நான் மறுக்கவில்லை.

மெக்கானிக்கல் எஞ்சினியரிங் என்பது கவுதம் மேனன் படத்தில் காண்பிப்பதுபோல் அத்தனை 
எளிதல்ல . மின்னலே படத்தில் மாதவன் செம்ம கெத்தாக வந்து பெண்களைக் கண்டால் 
வெறுத்துஅழகாக ரவுடித்தனம்  செய்து மெக்கானிக்கல் மாணவர்களுக்கு ஒரு தவறான 
முன்னுதாரணமாக அமைந்துவிட்டார் என்றே கூறுவேன்


சும்மா படிக்காமல் ரவுடித்தனம் செய்துவிட்டுவகுப்பறைகளை அலட்சியப் படுத்தி 
கெத்தாகத் திரிந்தால்,அரியர் வைப்பது உறுதிஏனென்றால் மெக்கானிகல் எஞ்சினியரிங்கில் நிறைய பாடங்கள் கணிதம் மற்றும் தர்க்கங்கள் (Logics) கொண்டவையாக இருக்கும்
அது தவிர நிறைய சூத்திரங்கள் (Formulae) நாம் நினைவில் கொள்ள வேண்டியிருக்கும்
சற்றே கடினமாகத் தோன்றினாலும் செய்தாக வேண்டியது அவசியம்

எப்படி சிறுவயதில் நாம் படிக்கும் வாய்ப்பாடுகள் வருங்கால படிப்பிற்கு அவசியமோஅது 
போல மெக்கானிகல் எஞ்சினியரிங் படிப்பிலும் சில பாடங்கள் கடைசிவரை படிப்பிலும்
வேலையிலும மிக அவசியமாக இருக்கும்.
அனைத்துமே பவுதீகம் (Basic Physics) மற்றும் கணிதத்தின் (Mathematics) அடிப்படைதான்
அப்படியான சில பாடப் பிரிவுகளைப் பார்ப்போம் 

1.  Engineering Drawings and Graphics
2.  Machine Drawing
3.  Engineering Mechanics
4.  Strength of materials
5.  Fluid mechanics
6.  Thermodynamics
7.  Thermal Engineering

இவற்றில் முதல் இரண்டும்  கற்பனை சக்தியைத் தூண்டும் பாடங்கள். ஒரு பொருளை 
மேலிருந்து பார்த்தால் எப்படித் தெரியும்? கீழிருந்து பார்த்தால் எப்படி? நேராக மற்றும்  
பக்கவாட்டிலிருந்து பார்த்தால் எப்படித் தெரியும் (Views&Projections) என்று கற்பனை செய்து 
சில விதிகளுக்குட்பட்டு வரைய வேண்டும். ஒரு இயந்திரப் பொறியாளனுக்கு முதல் 
இரண்டு பாடங்களும் வாழ்நாள் வரை துணைவரும்

மூன்றாம் பாடமான எஞ்சினியரிங் மெக்கானிக்ஸ் முற்றிலும் பவுதீகம் சார்ந்தது. பொதுவாக மாணவர்கள் முதலாம் ஆண்டிலேயே படித்து விடுவார்கள். முக்கியமான 
விஷயம் படித்து முடித்து மறந்தும் விடுவார்கள். ஆனால் முக்கியமாக கவனிக்க வேண்டிய 
விஷயம் என்னவென்றால் இந்த பாடத்தில் நாம் கற்கும் அடிப்படைகள் எப்பொழுதும் 
பணியில் உதவக்கூடியது

நான்காம் பாடமான ஸ்ட்ரெங்த் ஆப் மெட்டீரியல்ஸ் வேலை தேடும் சமயத்தில் மிகவும் 
தேவைப்படும் ஒன்று. ஒவ்வொரு இன்டர்வியூ பேனலிலும் ஒரு நடுத்தர அல்லது சற்றே 
வயதான ஒருவர் கண்டிப்பாக இருப்பார். அவர்களுக்கு " Strength of materials" என்றால் குதூகலம். அப்பாடத்தின் அடிப்படைகளில் நாம் வலுவாக இருந்தால் வேலையை எளிதில் தட்டி விடலாம்.
நான்கரை வருடங்கள் ஒரு வீட்டு உபயோகப்பொருள் Global giant இடம் வேலை பார்த்திருந்தாலும் புதிய வேலை தேடும் போது நான் " Strength of materials"  திரும்பவும் புரட்ட வேண்டியிருந்தது. நம்முடைய நிஜமான பொறியியல் அறிவுக்கு ஒரு அளவுகோல் இந்தப் பாடம். 
ஒரு beam (தூண்) இன் ஒரு முனையில் குறிப்பிட்ட எடையை வைத்தால் அது எவ்வளவு 
வளையும், எவ்வளவு தாங்கும் போன்றவற்றை அறிந்து கொள்ள உதவும் சூத்திரங்கள் 
அடங்கியது இப்பிரிவு.இது தவிர வேறு பலவற்றைப் பற்றியும் இப்பாடப் பிரிவு 
உள்ளடக்கியுள்ளது.  

Thermodynamics மற்றும் Thermal Engineering ஆனது   Refrigeration & Air Conditioning மற்றும் வாகனங்களின் இஞ்சின் Engine போன்றவற்றின் படிப்பாகும்.

பொதுவில் நிறுவனங்களின் கட்டமைப்பானது  
1.Marketing
2.Human Resource
3.Research & engineering
4.Design
5.Production
6.Logistics 
7.Sales & Service

என்று வகைப்படுத்தலாம். இது வீட்டு உபயோகப்பொருள் மட்டுமல்ல ஆட்டோமொபைல் 
தொழில் நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
இதில்  Marketing , Research & engineering & Design இந்த மூன்றும் "White collar Job" எனப்படும்.
Production,Logistics மற்றும் Sales&Service இதற்கு அடுத்த படியாக வருபவை.
சற்று அதிகமான உடலுழைப்பு தேவைப்படுபவை.

இவை பற்றி மேலும் விபரங்கள் வரும் பதிவுகளில் பார்ப்போம்.



8 comments:

  1. அருமையான பதிவு..அட்டகாசமான ஆரம்பம்!

    ReplyDelete
  2. தம்பி. எனக்கு பின்னூட்டத்தில் ஒரு லின்க் தரக்கூடாதா? நல்லவேளை தமிழ்மணம் புண்ணியத்தில் இதை தவற விடாமல் வந்து சேர்ந்தேன்..தொடர்ந்து கலக்குங்க!

    ReplyDelete
  3. @செங்கோவி
    அண்ணா பதிவை எழுதி முடித்து பதிவிட நள்ளிரவு தண்டி விட்டது. இதுபற்றி காலை உங்களுக்கு தெரியப்படுத்தலாம் என்று நினைத்திருந்தேன்.
    தமிழ் மணத்திற்கு நன்றி. என்னதான் நாம நல்ல பொருளை வைத்திருந்தாலும் அது எல்லாரையும் சேரணும்னா விளம்பரம் அவசியம்தான்.
    இது பற்றி நீங்களும் உங்கள் வட்டத்தில் தெரியப் படுத்தினால் இன்னும் நிறைய பேரைப் போய்ச் சேரும்.
    இந்த தம்பிக்கு ஊக்கமளித்து பின்னூட்டமிட்ட உங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  4. ஏற்கனவே இந்தப் பதிவை லின்க்க எண்ணம் உண்டு..அடுத்த நானா யோசிச்சேன் - பகுதியில் லின்க்கி விடுகிறேன்!

    ReplyDelete
  5. இந்தப் பழம் இனிக்கவே செய்கிறது !! :) !! தொடர்ந்து எழுதவும் ! :)

    ReplyDelete
  6. ராஜேஷ்...சகோ செங்கோவி இது பத்தி பதிவு போடும்போதே ரொம்ப பிரமிப்பா இருந்தது...நீயும் உன் ஸ்டைலில் இல் களத்தில் இறங்கிட்ட...நிறைய ஷேர் பண்ணிக்கோ...கம்ப்யூட்டர் எஞ்சினியரிங் மோஹம் கொஞ்சமாவது குறையட்டும் :-))

    ReplyDelete
  7. செங்கோவியின் நானா யோசிச்சேன் புண்ணியத்தில் இயந்திரவியல் துறையை சேர்ந்த நானும் உங்கள் தொடரை தொடர்கிறேன்...

    ReplyDelete
  8. நானும் இயந்திர துறையில் ஒரு பிரிவில் தொடர் எழுத ஆரம்பித்துள்ளேன். நேரம் கிடைக்கும் போது பார்க்கவும்.
    http://tamilvaasi.blogspot.com/search/label/CNC

    ReplyDelete

இந்த பதிவு பிடித்திருந்தால் வாழ்த்துங்கள், இல்லையென்றாலும் பரவாயில்லை உங்களுடைய விவாதங்களை தெரிவியுங்கள். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி !