Monday, July 12, 2010

இளையராஜாவும் ரஹ்மானும் , சில பகிர்வுகள்..!

இளையராஜா ரஹ்மான் குறித்து எனக்கும் நண்பர்களுக்கும் அடிக்கடி விவாதம் நிகழ்வதுண்டு. எங்கே யுவன் , ஹாரிஸ் ஜெயராஜ், எல்லாம் இல்லையா என்றால் இன்னும் அவர்கள் தனித்த பாணியை உருவாக்காதது காரணமாக இருக்கலாம். மேலும் இருவருமே சிறந்த "Copy Cats" என்பதால் கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை. முதலில் நாம் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். ரஹ்மானின் இசையின் தரம் ராஜாவை விட உயர்ந்தது என்பவர்களுக்கு என் பதில்,K.V.மகாதேவனை விட M.S.V. இசையின் தரம் உயர்ந்ததாக இருந்திருக்கலாம், M.S.V யை விட ராஜாவின் இசையின் தரம் உயர்ந்ததாகத் தெரியலாம்.















ஏனெனில் இசையின் தரம் என்பது அந்தந்த கால கட்டங்களில் இருந்த ஒலிப்பதிவு தொழில்நுட்பம் சார்ந்ததே அன்றி இசையமைப்பாளரின் திறமை இன்மை காரணம் அன்று.கண்டிப்பாக ரஹ்மான் ஒரு மிகத்திறமை வாய்ந்த இசையமைப்பாளர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆஸ்காரை வசப் படுத்திய இந்தியன் என்பதில் நானும் பெருமை அடைகிறேன்.அதற்காக அவர் கடந்துவந்த பாதை என்பது குண்டும் குழியுமான ரோடு எனக் கொண்டால் இளையராஜா கடந்த பாதை முட்களாலான மண்பாதை எனக் கொள்ளலாம். முகேஷ், கிஷோர், லதாமங்கேஷ்கர் பிடியிலிருந்த தமிழ் மக்களின் ரசனையைத் தமிழின் பால் திருப்பிய மிகப்பெரும் பணி ராஜாவினுடையது என்பது மறுக்க முடியாதது.

இன்றைய சூழ்நிலையில் சாரு நிவேதிதா போன்றவர்கள் இளையராஜாவை முற்றிலும் நிராகரிக்கலாம். அவர்களுக்கெல்லாம் தமிழ் இசை உலக இசை போல இல்லை என்பது மிகப் பெரும் வாதம்.

எதற்காக தமிழ் இசை உலக இசை போல இருக்க வேண்டும் என்பது என் எண்ணம்? இன்று உலக இசையில் மிகப் பெரிய ஜாம்பவான்கள் அவர்களுக்குச் சொந்தமான மண்ணின் இசையையே உருவாக்கினர்.உலகளாவிய சூழலில் மேற்கத்திய பண்பாட்டு ஆதிக்கம் அதிகமான காரணத்தால் அவர்களுடைய இசை பல நாடுகளிலும் கேட்கப்பட்டு உலக இசை என்ற பொதுப் பெயர் உருவாயிற்று.அதனால் நாம் உலக இசையைப் படைக்கத் தேவையில்லை.மாற்றாக நமது இசையை உலகுக்குப் பரப்பும் முயற்சிகளை எடுப்போம்.

80 களுக்கு முன் "Stereo sound effects" தமிழில் பயன்பாட்டுக்கு வராத காலங்களில் குரலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பாடல்கள் வந்தன.குழல் ஸ்பீக்கர்கள் மட்டுமே இருந்த காலத்தில் அவ்வகைப் பாடல்களே நன்றாக ஒலிக்கும். 2 in 1 எனப்படும் "Tape Recorder" கள் வரத்தொடங்கிய காலம்தான் இளையராஜா கோலோச்சிய தமிழ்த்திரை இசையின் பொற்காலம்.எனினும் அந்த காலகட்டங்களிலேயே மிகச்சிறந்த துல்லியமான இசையை அவர் அளித்திருக்கிறார் என்பது என் எண்ணம்.1982 இல் வெளிவந்த "நினைவெல்லாம் நித்யா" திரைப்பட பாடல்களில் அவ்வளவு இனிமை நிறைந்திருக்கிறது.இன்றளவும் திகட்டாத பாடல்கள்.படங்களைப் பட்டியலிடத் தொடங்கினால் 500 க்கும் மேற்பட்ட படங்களைக் கூறவேண்டியிருக்கும்.இந்தியாவிலேயே முதல் முறையாக கணிப்பொறி உதவியுடன் இசை அமைத்ததும் அவர்தான்.விக்ரம் படத்திற்காக.
இளையராஜாவின் உச்சக் காலங்களில் சில இசையமைப்பாளர்கள் இருந்தார்கள்.சந்திர போஸ் ,சங்கர் கணேஷ் போன்றோர். அவர்களால் ஒருவழியாக பாடல்களுக்கு மெட்டமைக்க முடிந்ததே ஒழிய பாடலின் முன் வரும் இசையையும்(Preludes), பல்லவிக்கு சரணத்திற்கும் உள்ள இடைவெளியை (interludes) நிரப்பும் இசையையும் சரிவர இனிமையாகத் தர முடிந்ததில்லை.உதாரணம் வேண்டுமானால் சந்திர போஸ் இசையமைத்த மனிதன் திரைப்படப் பாடல்களையும் சண்டைக்காட்சிகளையும் பாருங்கள். அக்கால தூர்தர்ஷன் நாடகங்களில் வரும் இசையைவிட கொஞ்சமே மேம்பட்டு இருக்கும் அவை.

இன்றளவும் நாம் உபயோகிக்கும் மொபைலில் ரிங் டோன்களாக எத்தனை இளையராஜா பாடல்களில் வரும் இசையை உபயோகிக்கின்றோம்? நமது மண்ணின் இசையான தெம்மாங்குதான் அவர் படைத்த அல்லது மேம்படுத்தி வழங்கிய இசை.அதுதான் அவரது தனித்தன்மை.பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடம் நானறியேன் என்பது தெம்மாங்குப்பாடல்.சிந்து பைரவி வந்திருக்காவிட்டால் நமக்கெல்லாம் எப்படி அந்தப்பாடலைப் பற்றி தெரிந்திருக்கும்? "கரையெல்லாம் செண்பகப்பூ" படத்தில் மனோரமா அந்தப் பாடலை நாட்டுப்புற வடிவில் பாடிக்காட்டுவார்.அதே பாடலை சாஸ்திரிய சங்கீதத்துடன் மிக நுண்ணிய புள்ளி ஒன்றில் மரி மரி நின்னே என்று இணைத்திருப்பரே ராஜா,அதுதான் அவருடைய ஞானத்தின் சான்று.

இன்னும் கூறவேண்டுமானால் பாடல்வரிகளை ஒருநாளும் சிதைத்ததில்லை. அவரும் தாய்மொழி தமிழல்லாத எத்தனையோ பாடகர்களை தமிழுலகுக்குத் தந்திருக்கிறார். மனோ,ஜென்சி ,ஸ்வர்ணலதா என்று பட்டியல் இன்னும் நீளும்.புதிய பாடகர்களுக்கு வாய்ப்பு தருவதில்லை என்று அவரைக் குறைகூறுவோர் அந்தப் பாடகர்கள் குறையில்லாமல் பாடியிருந்தால் ராஜா ஒத்துக் கொண்டிருப்பார் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் .

ராஜாவின் இசையில் "Synthesizer" ஆதிக்கம் அதிகம் இல்லாமல் பார்த்துக் கொண்டார்.அவர் காலத்தில் அவ்வளவு உபயோகிக்கப்படவில்லை.எனினும் அவருடைய பின்னாளைய பாடல்களிலும் பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடல் வரிகள் சிதையாமல் பார்த்துக் கொண்டார்.

அவர் உலக இசை படைக்கவில்லையே என்று நாம் குறைகூறுவதோ அல்லது வருந்துவதோ தேவை இல்லாத ஒன்று. வெளிநாட்டு இசையை ரசிப்போம் ஆனால் நம் மண்ணின் இசை தாழ்ந்தது என்றும் உலக இசைதான் உயர்ந்தது என்றும் கூறுவது முட்டாள் செயல்.
ராஜா உலக இசையை அறியாதவரில்லை.மேற்கத்திய சாஸ்த்ரிய இசையை நன்கு கற்றுத்தேர்ந்ததோடல்லாமல் அதனை நம் சூழலுக்கு ஏற்றவகையில் இணைத்து அசலான பாடல்களை வழங்கியிருக்கிறார்.நல்ல தெம்மாங்கு மெட்டினில் கிடாரையும் பியானோவையும் ஹிந்துஸ்தானி இசைக் கருவியான ஷெனாய் யையும் கூட உறுத்தாமல் இணைத்திருப்பார்.சில உதாரணங்கள் "சின்ன மணிக் குயிலே " அம்மன் கோவில் கிழக்காலே, "கண்ணம்மா காதலென்னும் கவிதை சொல்லடி " வண்ண வண்ண பூக்கள் , பட்டியல் இப்படியாக நீளும்.
ராஜா படைத்தது அசலான நம் மண்ணின் இசை.அவர் நமக்காக ஒரு இசைப் பண்பாட்டை உருவாக்கி அளித்திருக்கிறார்.

கொஞ்சம் ரஹ்மானின் பக்கம் வருவோம்.ரஹ்மானின் பெரிய பலம் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி. "Woofer" களும் நவீன ஸ்பீக்கர்களும் இல்லாமல் அவரது இசையை ரசிக்க முடியாது.கோவில் திருவிழா குழாய் ஸ்பீக்கரில் ரஹ்மானின் "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு பாடல்" கேட்டால் எவ்வளவு கொடூரமாக இருக்கும்? குழாய் ஸ்பீக்கர் குக்கிராமங்களில் கூட வழக்கொழிந்து போனதால் பிரச்சனை இல்லை.பாடல் மெட்டு எவ்வளவு இனிமையாக இருந்தாலும் வரிகள் காதில் விழாவண்ணம் இசை அதனை அமுக்கிச் செல்கிறது. மற்றும் அவர் நம் மண்ணுக்கென உரிய விஷயங்களை குறைவாகவே இசைப் படுத்தியிருக்கிறார்.கண்டிப்பாக மிகவும் நன்றாகத்தான் இருக்கிறது.படம் வெளியான சில வாரங்கள் மாதங்கள் அவற்றை ரசிக்க முடிகிறது.அப்புறம் எப்பொழுதாவதுதான் திரும்பவும் கேட்கத்தோன்றுகிறது. இது முழுக்க முழுக்க என் எண்ணமே.பாடல்வரிகளை பாடுபவர் தின்றுவிட்டாலும் அவருக்குப் பிரச்சனை இல்லை.ஆனாலும் மிகச்சிறந்த பாடல்களை தன் தொடக்க காலங்களில் வழங்கியிருக்கிறார். டூயட்,ரோஜா,ரிதம்,என் சுவாசக் காற்றே, என்று பல படங்களை குறிப்பிடலாம்.
















இப்போது ஒரு விஷயத்தை நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.ரஹ்மான் ஆண்டுக்கு 2 அல்லது 3 படங்களே இசையமைப்பார்.ராஜாவோ 80 களில் தொடங்கி 90 களின் பாதிவரையில் ஆண்டுக்கு 20 படங்களுக்கு குறையாமல் இசையமைத்திருக்கிறார்.ஒவ்வொரு படத்திலும் குறைந்தது 3 பாடல்களாவது பெரும் வரவேற்பைப் பெற்ற வெற்றிப் பாடல்கள்.இல்லாவிடில் எல்லாப் பாடல்களும் மிகப்பெரும் வெற்றி பெற்றவை.ஏழைத் தயாரிப்பாளர்களின் கமலஹாசன் என்று அழைக்கப் பட்ட மோகனின் வெற்றிக்கு இளையராஜா 75 சதவிகிதம் காரணம் என்றால் மிகையில்லை.இன்றைக்கு தொலைக்காட்சி நிகழ்சிகளில் எல்லா பாடல் போட்டிகளிலும் ராஜாவின் பாடல்களே அதிகம் பாடப் படுகிறது.

ரஹ்மான் ஆஸ்கார் விருது பெற்றது தேர்ந்த விளம்பர வியாபர யுக்திகளினால் அந்த திரைப்படம் உலக அரங்கில் வைக்கப்பட்டதன் மூலமாகத்தான். ஜெய்ஹோ பாடலைவிட அவருடைய மற்ற எத்தனையோ துள்ளிசைப் பாடல்கள் தமிழிலும் ஹிந்தியிலும் எவ்வளவு சிறப்பாக உள்ளன என்று எண்ணிப் பார்க்கவேண்டும்.இளையராஜா உலக இசையின் சாற்றினை இந்திய இசையில் கலந்தார்.ரஹ்மானோ உலக இசையை (மேற்கத்திய இசையை) மறு ஆக்கம் செய்கிறார். "Originality" என்பது ராஜவிடமே அதிகமாக இருக்கிறது.தற்போது அவர் குறைவாகவே இசையமைக்கிறார் என்றாலும் சற்றே தேக்க நிலை அடைந்துவிட்டார் போலுள்ளது. எனினும் அவ்வப்போது விருமாண்டி படப் பாடல்கள் போல ஆளை அசத்துவதும் உண்டு.ரஹ்மான் மிகவும் சுருங்கி ஒரு "Template" ஏற்படுத்திக் கொண்டுவிட்டார் எனத் தோன்றுகிறது.ராவணன் பாடல்கள் கேட்டதில் உசுரே போகுதே தவிர மற்ற ஒன்றும் தேறவில்லை."கெடாக் கெடாக் கறி அடுப்புல கெடக்கு" மிக மிகச் சாதாரணம்.

நாம் விரும்புவது நம் மண்ணின் இசை அதன் பாரம்பரியம் கெடாமல் நம்மை மகிழ்விக்க வேண்டும் என்பதே.இளையராஜா அதைத் தொடங்கி செவ்வனே செய்து நம்மை மகிழ்வித்து ஓய்விலுள்ளார்.ரஹ்மானும் அதன் நீட்சியாகத் தொடரவேண்டும் என்பதே நம் விருப்பம்.

29 comments:

  1. இசையின் துருவங்களை அருமையாக சொன்னீர்கள்.......நல்ல பதிவு வாழ்த்துகள்

    ReplyDelete
  2. ஒவொரு வரிகளிலும் உங்களின் தனி கருத்து பிரதிபலிப்பது இன்பம் . அனால் தொடர் வெற்றி என்பது காலத்திற்கு ஏற்ப மாறுவது அதிலும் கலை துறை கண்டிப்பாக மாறவேண்டியது. மேயாத மான் என்று பாகவதிரின் பாடலை ரசிக்காதவர்களே இல்லை அனால் இன்று அதை நம் தலை முறை இனரால் ரசிக்க முடியாது.தமிழ் பாடகர்கள் இந்திய முழுவதிலும் அணைத்து பாசைகளிலும் பதித்த தடயங்களை இளையராஜா முடியாததற்கு அவரது திறமையை பரிணாமத்திற்கு கொண்டு செல்லாமையே கரணம் என்பது என் சொந்த கருத்து.

    ReplyDelete
  3. Good one Machi !! :) prelude , interlude paathi la pesurae !! periya vidvaana varuva pola!! keep goin !! :)

    ReplyDelete
  4. //"Woofer" களும் நவீன ஸ்பீக்கர்களும் இல்லாமல் அவரது இசையை ரசிக்க முடியாது.//

    ஹா ஹா ஹா

    அவரது முதல் படத்தின் சின்ன சின்ன ஆசை பாடல் கேட்டிருக்கிறீர்களா

    அல்லது இந்த வருடம் வந்த உசிரே போகுதே கேட்டிருக்கிறீர்களா

    இந்த பாடலை 50 ரூபாய் FM Radioவில் கூட கேட்டு பாருங்கள்

    ரசிக்க முடியவில்லை என்றால் காது சிறப்பு மருத்துவரை அணுகவும். காதில் பிரச்சனையில்லை என்றால் எந்த மருத்துவரை அணுக வேண்டும் என்று உங்களுக்கே தெரியவேண்டும்

    ReplyDelete
  5. //கொஞ்சம் ரஹ்மானின் பக்கம் வருவோம்.ரஹ்மானின் பெரிய பலம் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி.//

    அந்த வளர்ச்சி அனைவருக்கும் பொது தான். மற்றவர்கள் அதை பயன்படுத்த வில்லை என்பதற்கு ரகுமான் எப்படி பொறுப்பு

    இப்படி தான் எழுத்தாளர் சுஜாதாவை பிடிக்காத கும்பல் ஒன்று கூறிக்கொண்டு அலைந்தது

    // "Woofer" களும் நவீன ஸ்பீக்கர்களும் இல்லாமல் அவரது இசையை ரசிக்க முடியாது.கோவில் திருவிழா குழாய் ஸ்பீக்கரில் ரஹ்மானின் "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு பாடல்" கேட்டால் எவ்வளவு கொடூரமாக இருக்கும்? குழாய் ஸ்பீக்கர் குக்கிராமங்களில் கூட வழக்கொழிந்து போனதால் பிரச்சனை இல்லை. பாடல் மெட்டு எவ்வளவு இனிமையாக இருந்தாலும் வரிகள் காதில் விழாவண்ணம் இசை அதனை அமுக்கிச் செல்கிறது.//

    1992ல் சின்ன சின்ன ஆசை முதல் 2010ல் உசிரே போகுதே வரை ஒரு படத்தில் பாதி பாடல்களில் வார்த்தைகள் மிக மிக தெளிவாகவே உள்ளன

    நேற்று இல்லாத மாற்றம்
    என் வீட்டு தோட்டத்தில்
    புத்தம் புது பூமி வேண்டும்

    என்று உதாரணம் சொல்லிக்கொண்டே போகலாம்

    ஏன் தற்சமயம் பக்கத்து அறையில் ஒலிப்பது கூட ரஹ்மான் பாடல் தான்

    கண்ணில் ஒரு வலி இருந்தால் கனவுகள் வருவதில்லை

    எனக்கு வார்த்தைகள் தெளிவாகவே கேட்கின்றன

    நீங்கள் காது மருத்துவரை அணுகவும்

    காதில் பிரச்சனை இல்லை என்றால் எந்த மருத்துவரை பார்க்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்

    //மற்றும் அவர் நம் மண்ணுக்கென உரிய விஷயங்களை குறைவாகவே இசைப் படுத்தியிருக்கிறார்.//



    இளையராஜா மேற்கத்திய இசையை
    பயன்படுத்தவேயில்லையா.

    குறை கூற வேண்டும் என்பதற்காக அபத்தங்களை அடுக்க வேண்டாம்

    //கண்டிப்பாக மிகவும் நன்றாகத்தான் இருக்கிறது.படம் வெளியான சில வாரங்கள் மாதங்கள் அவற்றை ரசிக்க முடிகிறது.அப்புறம் எப்பொழுதாவதுதான் திரும்பவும் கேட்கத்தோன்றுகிறது. இது முழுக்க முழுக்க என் எண்ணமே.//

    இது அனைத்து இசையமைப்பாளர்களுக்கும் பொருந்தும்

    ஒரு படத்தில் மெலடி பாடல்கள் மட்டுமே தான் காலம் கடந்தும் நிற்கும்

    வெற்றிவிழாவில் அனைத்து பாடல்களும் நல்ல பாடல்கள்தான்

    ஆனால் இன்றும் சட்டென்று நினைவிற்கு வருவது பூங்காற்று என் பேர் சொல்ல தான்

    //பாடல்வரிகளை பாடுபவர் தின்றுவிட்டாலும் அவருக்குப் பிரச்சனை இல்லை.//

    ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதம்.

    //ஆனாலும் மிகச்சிறந்த பாடல்களை தன் தொடக்க காலங்களில் வழங்கியிருக்கிறார். டூயட்,ரோஜா,ரிதம்,என் சுவாசக் காற்றே, என்று பல படங்களை குறிப்பிடலாம்.//

    தற்பொழுதும் வழங்கிக்கொண்டிருக்கிறார்

    சஹானா சாரல், உசிரே போகுதே எல்லாம் சென்ற நூற்றாண்டில் வந்த் பாடல்களா

    ReplyDelete
  6. //இப்போது ஒரு விஷயத்தை நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.ரஹ்மான் ஆண்டுக்கு 2 அல்லது 3 படங்களே இசையமைப்பார்.ராஜாவோ 80 களில் தொடங்கி 90 களின் பாதிவரையில் ஆண்டுக்கு 20 படங்களுக்கு குறையாமல் இசையமைத்திருக்கிறார்.//

    ரகுமானின் இசையில் வரும் சின்ன சின்ன விஷயங்களை கவனித்தால் அதற்கு (பாடல் பதிவிற்கு) தேவைப்படும் உழைப்பு என்பது இளையராஜாவின் பாடல் பதிவிற்கு தேவைப்படும் உழைப்பை விட அதிகம் என்று புரிந்து கொள்ளலாம்

    அடுத்த விஷயம் : ரகுமான் உலகம் முழுவதும் செல்ல வேண்டியுள்ளது :) :) :) :)

    ராஜாவிற்கு அது போல் நிர்பந்தங்கள் எதுவும் இல்லையே :) :) :)

    //ஒவ்வொரு படத்திலும் குறைந்தது 3 பாடல்களாவது பெரும் வரவேற்பைப் பெற்ற வெற்றிப் பாடல்கள்.//

    இது அனைத்து ராஜா படங்களுக்கும் பொருந்தாது என்பது உங்களுக்கு தெரியாது

    //இல்லாவிடில் எல்லாப் பாடல்களும் மிகப்பெரும் வெற்றி பெற்றவை.//

    இது அனைத்து ராஜா படங்களுக்கும் பொருந்தாது என்பது உங்களுக்கு தெரியாது

    //ஏழைத் தயாரிப்பாளர்களின் கமலஹாசன் என்று அழைக்கப் பட்ட மோகனின் வெற்றிக்கு இளையராஜா 75 சதவிகிதம் காரணம் என்றால் மிகையில்லை.//

    நடிகர் ராமராஜன், இயக்குனர் சுந்தரராஜன் என்று பட்டியல் பெரிது

    அதே போல் தான் கதிர் ஷங்கர் என்று ரகுமான் மூலம் வெற்றிபெற்றவர்களும் உள்ளனர்

    --

    //இன்றைக்கு தொலைக்காட்சி நிகழ்சிகளில் எல்லா பாடல் போட்டிகளிலும் ராஜாவின் பாடல்களே அதிகம் பாடப் படுகிறது.//

    ஹி ஹி ஹி
    நீங்கள் போட்டி எல்லாம் பார்ப்பதில்லையா சார்

    //ரஹ்மான் ஆஸ்கார் விருது பெற்றது தேர்ந்த விளம்பர வியாபர யுக்திகளினால் அந்த திரைப்படம் உலக அரங்கில் வைக்கப்பட்டதன் மூலமாகத்தான்.//

    சீச்சி இந்த பழம் புளிக்கும் என்ற நரி நினைவிற்கு வருகிறது

    ராஜாவை இசையமைக்க ஒரு ஹாலிவுட் இயக்குனரும் கூப்பிட வில்லை சார்

    ஹாலிவுட் படத்திற்கு இசையமைத்தால் தான் ஆஸ்கர் கிடைக்கும்

    அதை புரிந்து கொள்ளுங்கள்

    //ஜெய்ஹோ பாடலைவிட அவருடைய மற்ற எத்தனையோ துள்ளிசைப் பாடல்கள் தமிழிலும் ஹிந்தியிலும் எவ்வளவு சிறப்பாக உள்ளன என்று எண்ணிப் பார்க்கவேண்டும்.//

    ஆமாம் சார்

    ஆஸ்கர் என்பது தமிழ் படத்திற்கு அளிக்கப்படும் விருது கிடையாது

    //இளையராஜா உலக இசையின் சாற்றினை இந்திய இசையில் கலந்தார்.ரஹ்மானோ உலக இசையை (மேற்கத்திய இசையை) மறு ஆக்கம் செய்கிறார்.//

    ரகுமானோ இந்திய இசையை உலகிற்கு அளிக்கிறார்

    // "Originality" என்பது ராஜவிடமே அதிகமாக இருக்கிறது.//

    ஆதாரம் ப்ளீஸ்

    // தற்போது அவர் குறைவாகவே இசையமைக்கிறார் என்றாலும் சற்றே தேக்க நிலை அடைந்துவிட்டார் போலுள்ளது. எனினும் அவ்வப்போது விருமாண்டி படப் பாடல்கள் போல ஆளை அசத்துவதும் உண்டு.//

    ஐயா

    1995க்கு பின் கங்கை அமரன் இல்லாமல் இளையராஜாவால் எத்தனை வெற்றிப்படங்கள் அளிக்க முடிந்தது என்று கூற முடியுமா

    சிறைச்சாலை
    பாரதி
    காதலுக்கு மரியாதை
    ஹே ராம்
    சேது
    விருமாண்டி

    //ரஹ்மான் மிகவும் சுருங்கி ஒரு "Template" ஏற்படுத்திக் கொண்டுவிட்டார் எனத் தோன்றுகிறது.//

    இந்த குற்றச்சாட்டை ராஜா ரசிகர்கள் 18 வருடமாக கூறிவருகிறார்கள்

    ராஜாவிற்கு தமிழில் ஹிட் குறைந்ததும் ரகுமான் ஆஸ்கர் வென்றது நடந்து விட்டன

    // ராவணன் பாடல்கள் கேட்டதில் உசுரே போகுதே தவிர மற்ற ஒன்றும் தேறவில்லை."கெடாக் கெடாக் கறி அடுப்புல கெடக்கு" மிக மிகச் சாதாரணம்.//

    நான் இதை ஏற்றுக்கொள்கிறேன்
    அது சரி நானே வருவேன் கேட்டீர்களா

    //நாம் விரும்புவது நம் மண்ணின் இசை அதன் பாரம்பரியம் கெடாமல் நம்மை மகிழ்விக்க வேண்டும் என்பதே.இளையராஜா அதைத் தொடங்கி செவ்வனே செய்து நம்மை மகிழ்வித்து ஓய்விலுள்ளார்.
    ரஹ்மானும் அதன் நீட்சியாகத் தொடரவேண்டும் என்பதே நம் விருப்பம். //

    புஷ்பவனம் குப்புசாமி பாடல்களை கேட்டுள்ளீர்களா.
    மண்ணின் இசையை அளிக்க பலர் உள்ளனர்

    ஆனால் இந்திய இசையை உலகிற்கு அளிப்பவர்கள் வெகு சிலரே

    இளையராஜாவால் கூட செய்ய முடியாத அந்த சாதனையை செய்தது ரகுமான் தான்

    அவர் அதை தொடர்ந்து செய்யட்டும் !!!

    ReplyDelete
  7. //ராஜாவின் இசையில் "Synthesizer" ஆதிக்கம் அதிகம் இல்லாமல் பார்த்துக் கொண்டார்.//
    ப்ரியா படத்தில் ஹே பாடல் ஒன்று பாட்டை கேளுங்களேன்

    //அவர் காலத்தில் அவ்வளவு உபயோகிக்கப்படவில்லை.எனினும் அவருடைய பின்னாளைய பாடல்களிலும் பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடல் வரிகள் சிதையாமல் பார்த்துக் கொண்டார்.//

    சிந்தசைசருக்கும் பாடல் வரி சிதைவதற்கும் சம்மந்தம் இல்லை !!

    வெறும் வயலினை வைத்து கூட பாடல் வரியை சிதைக்க முடியும் :) :)

    ReplyDelete
  8. நான் எப்பொழுதும் இளையராஜாவின் இசையை குறை கூறுவதில்லை

    பெரும்பாலான ரகுமான் ரசிகர்கள் அப்படித்தான்

    ஆனால் ராஜா ரசிகர்களால் ரகுமானை குறை கூறாமல் இருக்க முடியவில்லையே ஏன்

    ReplyDelete
  9. நான் என்றுமே இளையராஜாவின் இசையை குறை கூறுவதில்லை

    எனக்கு தெரிந்து எந்த ஒரு ரகுமான் விசிறியும் கூட அப்படி செய்வதாக தெரியவில்லை

    ஆனால்

    இளையராஜாவின் ரசிகர்கள் ஏன் இது போல் ரகுமானை குறை கூற மெனக்கெடுகிறார்கள் என்று தெரியவில்லை

    உங்களுக்கே அவர் இசை மேல் நம்பிக்கை இல்லையா

    ரகுமானின் பாட்டு நல்லாயில்லை என்று கூற வேண்டிய நிர்பந்தம் உங்களுக்கு வந்தது ஏன் :) :) :)

    ReplyDelete
  10. எனக்கு பிடித்தது என்பது வேறு
    சிறந்தது என்பது வேறு

    இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம்

    --

    உங்களுக்கு பிடித்த சமையல்காரர் உங்கள் அம்மா

    ஆனால்

    உலகின் மிகச்சிறந்த சமையல்காரர் உங்கள் அம்மாதான் என்றும் மற்றவர்களுக்கு சமைக்க தெரியாது என்று கூறுவது ஏற்புடையதா

    ReplyDelete
  11. Bruno sir, definitely I agree with some of your points.. Let me have answers for some of your questions later.thanks for your valuable comments and time..

    ReplyDelete
  12. எச்சரிக்கை 1

    ராஜேஷ் குமார்... கள்ளக்காதல் கிசு கிசு எழுதி பிரபலமாக துடிக்கும் சுயமோக விளம்பர பிரியர் புரூனோ Bruno இன்னோரு விளம்பர பிரியருக்கு ஆதரவாக ஜல்லியடிப்பது ஆச்சரியமில்ல . இவருக்கு பதில் செல்லி நேரத்தை வீண்டிப்பதை விட ரகுமானின் பாடல்களையே கேட்கலாம்.

    ReplyDelete
  13. பிகில் அவர்களே.. புருனோ அவர்கள் சில பல கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.அதில் சரியானவற்றை ஏற்றுக் கொண்டு என் கருத்துக்களுடன் உடன்பாடற்றவைகளுக்கு பதிலளிப்பதில் தப்பில்லை என்றே நினைக்கிறேன். என்னதான் சுயமோகப்பிரியராயிருந்தாலும் அவரது கருத்துக்களையும் கேட்டுத்தான் பார்ப்போமே.
    (எந்தவித பதிவுலக அரசியல் உள்குத்துக்களும் நானறியேன்.பதிவுலகில் நானொரு தவழும் குழந்தை என்று சொல்லிக் கொள்கிறேன்)

    ReplyDelete
  14. மாப்பி !!!
    பதிவுக்கு பாராட்டுக்கள் ....
    (நான் பாட்டு கேக்கறதோட சரி.....இந்த மாதிரி ஆராயும் அளவுக்கு ஞானம் இல்லை நண்பா...)

    ReplyDelete
  15. நானும் ராஜாவின் ரசிகன் தான் ,
    இது இளையராஜா firefox theme..

    http://www.getpersonas.com/en-US/persona/249493

    raja fans, check it and apply ..

    ReplyDelete
  16. excellent post . Leave that nonsence Nanba

    ReplyDelete
  17. நண்பர் ப்ருனோவின் கருத்தை வரிக்கு வரி வழிமொழிகிறேன்.
    ரஹ்மான் ரசிகர்கள் எப்போதும் ரொம்ப நாகரீகமாணவர்கள். பிறரை குறை சொல்ல மாட்டார்கள்.

    ReplyDelete
  18. நண்பரே மிகவும் அருமையான கட்டுரை,வார்த்தைக்கு வார்த்தை கன்னாபின்னாவென வழிமொழிகிறேன்.
    நான் ஏஆர் ஆரின் பாடலையும் விரும்பி கேட்பேன்,
    உசிரே போகுதே கேட்டேன் ,நல்ல வேளை என் உசிர் போகவில்லை.

    ரொம்ப நல்ல கட்டுரை.
    இசைஞானி இது வரை ஐந்து முறை அரைசதம் அடித்துள்ளார்.அத்தனையும் சோடை போகாத படங்கள்,அதில் சில படம் ஓடாவிட்டாலும் பாடலகள் பெரும் வெற்றி பெற்றவை

    இந்த சாதனை தான் யாராலும் தான் முறியடிக்கவோ அல்லது முயன்றுபார்க்கவோ தான் முடியுமா? எத்தனை படத்துக்கு கதை கேட்டிருக்கவேண்டும்? எத்தனை ட்யூன்கள் போட்டு தயாரிப்பாளர்,இயக்குனர் சம்மதம் வாங்கியிருக்கவேண்டும்?எத்தனை பாடலாசிரியரிடம் டிஸ்கஸ் செய்திருக்கவேண்டும்?எத்தனை கற்பனை வளம் இருந்திருக்க வேண்டும்?எத்தனை புதிய தயாரிப்பாளரை,புதிய இயக்குனரை உருவாக்கியிருக்க வேண்டும், இன்றைய தொழிற்நுட்பம் கோலோச்சும் உலகில் இந்த உலகத்தரம் கிடைக்குமா? நடக்குமா? எவ்வளவு கோஆர்டினேஷன். பெர்ஃபெக்‌ஷன்.எவ்வளவு தியாகங்கள்?சொந்தகுரலில் எவ்வளவு பாடல் பாடியிருப்பார்?எவ்வளவு இறைப்பணி?எவ்வளவு குடும்பம் பிழைத்திருக்கும்? கடவுளே!!! சான்சே இல்ல. அமெரிக்க,ஐரோப்பிய இசை மேதைகள் என்னியோ மார்ரிக்கோன், ஜேம்ஸ் ஹார்னர்,மற்றும் பலர் ஆண்டாண்டாக செய்யாததை தென்னாட்டில் பிறந்த ராசையா சொற்ப காலத்தில் செய்தார் என்றால் மிகையல்ல.இவரால் தான் ஒரு விருதுக்கே பெருமை இருக்க முடியும்.அருகில் இருக்கும் போது ஒரு பொக்கிஷத்தின் மதிப்பு தெரிவதில்லை.இன்னும் தோண்ட தோண்ட என்ன?என்ன? சாதனைகள் கிடைக்குமோ?அவருடைய சோக பாடல்கள் காதலில் தோல்வியுற்ற எத்தனை பேரின் மன வேதனையை தீர்திருக்கும்.மனிதனின் ஒவ்வொரு நிலைக்கும் இசையமைத்து இருக்கிறார்.சந்தோஷம் ,துக்கம், தாலாட்டு ,தனிபாட்டு,உழைப்பு, உயர்வு,வெற்றி ,தோல்வி,பாசம், நேசம்,தேசம், நீதி,ஜாதி,மடமை,கடமை என மனிதனின் வாழ்க்கைக்குள் சென்று பாடி உயிரோடு கலந்தது அவர் இசை என்றால் மிகை அல்ல.


    http://ragadhevan.blogspot.com/2010/05/blog-post.html

    ReplyDelete
  19. பதிவினைப் படித்து பின்னூட்டமிட்டு வழிமொழிந்த , எதிர் விவாதம் புரிந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  20. //எவ்வளவு குடும்பம் பிழைத்திருக்கும்? கடவுளே!!! சான்சே இல்ல.//

    வழி மொழிகிறேன் !!!
    சான்சே இல்லை என்று தான் நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் :) :) :)

    --

    பின் குறிப்பு : இசைக்கலைஞர்களுக்கு உரிய ஊதியமும் மரியாதையும் அளித்தது யார் என்று உலகறியும்

    கிடாரிஸ்ட், டிரம்ஸ் வாசிப்பவர் ஆகியோரின் பெயரை கேசட் அட்டையில் போட்டு அங்கீகாரம் தந்தது யார் என்பதையும் ஊரறியும்

    ReplyDelete
  21. மீண்டும் நல்வரவு புருனோ சார், ஒரு விஷயம் நாம் புரிந்து கொள்ள வண்டும் , இளையராஜா காலத்தில் அவர் ஒன்றும் கோடிகளில் சம்பளம் பெறவில்லையே? சில ஆயிரங்களும் அல்லது லட்சங்களுமே அவர் சம்பளமாகப் பெற்றார். எத்தனையோ புதிய இயக்குனர்களுக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார். சின்னத்தாயி, ஆவாரம்பூ, புதுநெல்லு புதுநாத்து, என அவர் உழைத்த சிறு பட்ஜெட் படங்கள் எண்ணிலடங்காதவை. பணத்தைக் குறிக்கோளாகக் கொண்டு அவர் இயங்கியதில்லை.இவ்வளவு ஏன் ? சேது திரைப்படத்திற்கு அவர் பெற்றது மிக சொற்பமே. எனினும் குறைந்த காசுதானே என்று இசையை குறைத்துக் கொடுத்ததில்லை. விக்ரமனின் புதிய மன்னர்கள் படத்திற்கு ரஹ்மான் இசையமைத்தார்.எனக்கென்னமோ S.A.ராஜ்குமார் அல்லது சிற்பி கூட இன்னும் சிறப்பாக செய்திருப்பார்களோ என்று நினைக்கத்தோன்றியது.அப்புறம் சிறு பட்ஜெட் தாயாரிப்பாளர்கள் அணுக முடியாத ஆளாகிவிட்டார் ரஹ்மான். இதைச் சொன்னால் பொறாமை , தூற்றுகிறேன் என்பீர்கள்.

    ReplyDelete
  22. //உங்களுக்கு பிடித்த சமையல்காரர் உங்கள் அம்மா.
    ஆனால் உலகின் மிகச்சிறந்த சமையல்காரர் உங்கள் அம்மாதான் என்றும் மற்றவர்களுக்கு சமைக்க தெரியாது என்று கூறுவது ஏற்புடையதா?//

    ப்ரூனோ,
    இதை (19வது பாய்ண்ட்)பாருங்களேன்.

    :)

    சும்மா ... ஜாலிக்கு ..!

    ஆனாலும் உங்களுக்கு ரொம்ம்ம்ம்ப பிடிச்ச ரஹ்மானின் புகழ் பாடுங்கள். அதை விட்டுட்டு அடுத்த 'வீட்டம்மா' சமையலை இந்தப் போடு போடுறீங்க!!

    ReplyDelete
  23. //அப்புறம் சிறு பட்ஜெட் தாயாரிப்பாளர்கள் அணுக முடியாத ஆளாகிவிட்டார் ரஹ்மான். இதைச் சொன்னால் பொறாமை , தூற்றுகிறேன் என்பீர்கள்.
    //

    இல்லை சொல்ல மாட்டேன் :) :)

    //இளையராஜா காலத்தில் அவர் ஒன்றும் கோடிகளில் சம்பளம் பெறவில்லையே? //
    சம்பளத்திற்கும் கேசட் அட்டையில் பெயர் போடுவதற்கும் என்ன சார் சம்மதம்

    ReplyDelete
  24. //அப்புறம் சிறு பட்ஜெட் தாயாரிப்பாளர்கள் அணுக முடியாத ஆளாகிவிட்டார் ரஹ்மான். இதைச் சொன்னால் பொறாமை , தூற்றுகிறேன் என்பீர்கள்.
    //

    இல்லை சொல்ல மாட்டேன் :) :)

    //இளையராஜா காலத்தில் அவர் ஒன்றும் கோடிகளில் சம்பளம் பெறவில்லையே? //
    சம்பளத்திற்கும் கேசட் அட்டையில் பெயர் போடுவதற்கும் என்ன சார் சம்மதம்

    ReplyDelete
  25. //அப்புறம் சிறு பட்ஜெட் தாயாரிப்பாளர்கள் அணுக முடியாத ஆளாகிவிட்டார் ரஹ்மான். இதைச் சொன்னால் பொறாமை , தூற்றுகிறேன் என்பீர்கள்.
    //

    இல்லை சொல்ல மாட்டேன் :) :)

    //இளையராஜா காலத்தில் அவர் ஒன்றும் கோடிகளில் சம்பளம் பெறவில்லையே? //
    சம்பளத்திற்கும் கேசட் அட்டையில் பெயர் போடுவதற்கும் என்ன சார் சம்மதம்

    ReplyDelete
  26. //ப்ரூனோ,
    இதை (19வது பாய்ண்ட்)பாருங்களேன்.

    :)

    சும்மா ... ஜாலிக்கு ..! //

    நன்றி சார் :) :)

    //ஆனாலும் உங்களுக்கு ரொம்ம்ம்ம்ப பிடிச்ச ரஹ்மானின் புகழ் பாடுங்கள். அதை விட்டுட்டு அடுத்த 'வீட்டம்மா' சமையலை இந்தப் போடு போடுறீங்க!! //

    இதைத்தான் நானும் சொல்லிக்கொண்டிருக்கிறேன். ஆனாலும் உங்களுக்கு ரொம்ம்ம்ம்ப பிடிச்ச ராஜாவின் புகழ் பாடுங்கள். அதை விட்டுட்டு அடுத்த 'வீட்டம்மா' சமையலை இந்தப் போடு போடுறீங்க!!

    ராஜா ரசிகர்கள் ஏன் ரகுமானை இழுக்கிறார்கள் என்பது தான் எனது கேள்வி. ஏற்கனவே கேட்டிருக்கிறேன் :) :) இது வரை பதில் வர வில்லை

    ReplyDelete
  27. Rajesh kumar சார், தருமி சார்

    நீங்கள் ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்

    நான் இளையராஜாவின் இசையை என்றுமே குறை கூறுவதில்லை.

    இளையராஜாவின் இசையை புகழும் எத்தனையோ இடுகைகளில் நான் (புகழ்ந்து) மறுமொழி எழுதியிருக்கிறேன்

    அதே போல் ரஹ்மான் பற்றிய உண்மை விமர்சனங்களை நான் மறுப்பது கிடையாது

    ஆனால்

    இளையராஜாவை தூக்கி பிடிக்க வேண்டும் என்று மற்றொரு இசையமைப்பாளரை தேவையே இல்லாமல் தாக்கும் போது தான் நான் defend செய்ய வேண்டியுள்ளது :) :)

    ReplyDelete
  28. please read my blog இசைஞானி விழுந்த இடமும் இரகுமான் எழுந்த இடமும் (பகுதி- ஒன்று) www.padithuraiganesh.blogspot.com

    ReplyDelete

இந்த பதிவு பிடித்திருந்தால் வாழ்த்துங்கள், இல்லையென்றாலும் பரவாயில்லை உங்களுடைய விவாதங்களை தெரிவியுங்கள். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி !