Friday, July 6, 2012

பில்லா 2 முன்னோட்டம் - சில பகிர்வுகள்

எல்லாருக்கும் வணக்கம். இது முழுக்க முழுக்க தல வழிபாட்டுப் பதிவு. படிச்சிட்டு கமன்ட் ல வந்து திட்ட நினைக்கிறவங்க (வேற யாரு டாக்டர் ரசிகர்கள் தான்) படிக்காமல் தவிர்ப்பது நலம். நன்றி.



சென்ற வருடம் மங்கத்தா யூ டியூபைக் கலக்கியது போல் இந்த வருடம் பில்லா 2 இன் டிரைலர்கள் கலக்கி எடுக்கின்றன. இந்தமுறை டிரைலரைப் பார்க்கும்போது  வசனங்கள் மிகுந்த கவனத்துடன் அஜித்துக்காகவே எழுதப்பட்டுள்ளன எனத் தோன்றுகிறது.
ஒரு காலத்தில் " நான் தனி ஆளு இல்ல " " அத்திப்பட்டினு ஒரு கிராமம் இருந்துது உங்களுக்கு தெரியுமா " என்று சீரியஸ் ஆகப் பேசி கிண்டலுக்குள்ளான காலங்கள் மலையேறிப் போயாச்சு. 

டிரயிலரில் அவர் பேசும் வசனங்கள் அவருடைய சொந்த வாழ்க்கையைப் பிரதிபலிப்பதைப் போலவே உள்ளன. என்னோட  வாழ்க்கைல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும்  ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்கினது டா , கண்டிப்பாக சுயமாக செதுக்கிய வாழ்க்கைதான் அவருடையது.
மேலும் "எனக்கு நண்பனா இருக்க எந்த தகுதியும் தேவை இல்ல , ஆனா எதிரியா இருக்க கண்டிப்பா தகுதி வேணும் என்னும் வசனத்தைக் கேட்கும்போது  ஒரு காலத்தில் அவருடைய திரைப் போட்டியாளராக கருதப்பட்ட ஒரு நடிகர் தற்காலத்தில் தனது படங்கள் மொக்கை வாங்குவதால் அரசியலுக்கு செல்ல முயன்று அங்கேயும் மொக்கை வாங்கி , ஆளும் கட்சிகளுக்கு மாற்றி மாற்றி சொம்படித்து காலத்தை ஒட்டி தற்போது பிறந்தநாளுக்கு குழந்தைகளுக்கு மோதிரம் போடுகிறேன் என்று மருத்துவமனைக்குப் போய் கலாட்டா உண்டு பண்ணி அங்கேயும் பல்பு வாங்கி எப்படியாவது விளம்பரம் கிடைக்காதா என்று தரை லெவலுக்கு இறங்கி தன்னுடைய தகுதியை தாழ்த்திக் கொண்டே செல்வது ஞாபகம் வருகிறது.
(ஒரு காலத்தில் அவர் ரசிகர்கள் ஆடிய ஆட்டமென்ன ? தற்போது அவர்கள் நடந்த பிள்ளை தவழுதடி .. நான் செய்த பாவமடி என்று வருத்தத்தில் உள்ளனர்.)
சமூகத்தில் மரியாதை என்பது தானாக வரவேண்டும். பிறருடன் பண்புடன் நடந்துகொண்டாலே தானாக வரும். இன்னும் சுயவிளம்பரங்கள் மூலமாக புகழ் மற்றும் மரியாதை பெற நினைத்தால் கூடிய விரைவில் பவர் ஸ்டாருக்கு போட்டியாகும் வாய்ப்புள்ளது. 
இன்று திரைத்துறையில் அஜித்துக்கு இருக்கும்  மரியாதை பற்றி இங்கு எழுதவே தேவை இல்லை. விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு , தலையா ..? அவரு கிரேட்டுப்பா என்று கூறுபவர்களே அதிகம்.
இந்த மரியாதை எதனால் சாத்தியமாயிற்று? வயது கூடிவருவதனால் வந்த பக்குவம் ஒரு காரணமாக இருக்கலாம். நடிக்கும் படங்களில் தன்னுடைய வேலையைத் தவிர்த்து பிற விஷயங்களில் தலையிடாததும், அனைவரிடமும் சகஜமாகப் பழகுவதும் காரணமாக இருக்கலாம்.
எது எப்படியோ இத்தனை தோல்விகளுக்குப் பிறகும் அவருக்கு இருக்கும் வரவேற்பும் , ரசிகர் மன்றங்களைக் கலைத்த பிறகும் எகிறும் ரசிகர்கள் எண்ணிக்கையும் எல்லாவற்றிற்கும் மேலாக அவருக்கு கோடிகளை கொட்டிக் கொடுத்து படமெடுக்கும் தயாரிப்பாளர்களும் பெரும் ஆச்சரியமே.
அஜித்துக்கு ரஜினியைப் போலவோ கமலைப் போலவோ இவ்வளவு ஏன் டாக்டர் விஜய் போலவோ இந்திய அளவில் பரந்த சந்தை மதிப்பு கிடையாது.  (டாக்டரின் படங்கள் கேரளாவில் வரவேற்பினைப் பெறுகின்றன. முல்லைப் பெரியாரில் தண்ணீர் தராத மலையாளிகளுக்கு தமிழன் தரப்பிலிருந்து வழங்கப் படும் மிகப் பெரிய தண்டனை டாக்டரின் படங்கள் என்பது என் எண்ணம்.) தான் படங்களை விநியோகம் செய்கிறார்கள் எனும் ஒரே காரணத்திற்காக சன் மியூசிக்கிலோ இசையருவியிலோ வந்து வெற்றி வெற்றி மாபெரும் வெற்றி என்று கூப்பாடு போடுவதும் கிடையாது. பிஹைண்ட் உட்ஸ் போன்ற இணைய தளங்களும் அஜித்தின் படங்களின் உண்மையான சந்தை நிலவரத்தை இருட்டடிப்பு செய்கின்றன.
விகடன் விமர்சனமும் போனால் போகிறது என்று 40 மதிப்பெண்கள் மட்டும் கொடுக்கும். போதாக்குறைக்கு டாக்டரின் ஆதரவாளர்கள் இணைய தளத்தில் கிழித்துத் தொங்கவிட்டு விமர்சனம் எழுதுவார்கள்.எனினும் அஜித் படங்களின் வசூல் நிலைவரமானது ரஜினி கமலுக்கு அடுத்தபடியாகவே இருக்கின்றன.  

எந்த விளம்பரமும் இல்லாமல் மிகக் காலதாமதமாக வெளியான வரலாறு வெகுநாட்கள்  தமிழ் சினிமாவின் அதிக வசூல் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் இருந்தது . பில்லா பற்றி நான் கூறவே தேவை இல்லை. மங்காத்தா ரிலீஸ் ஆகுமோ ஆகாதோ என்னும் நிலையில் மிகக் குறுகிய நாட்களே சன் டிவியால் விளம்பரம் செய்யப்பட்டு கடந்த ஆண்டு அதிக வசூலைக் குவித்தது. சன் டிவி எல்லா படங்களையுமே மாபெரும் வெற்றி என்று சொல்லும் என்பவர்களுக்கு சுறா, வேட்டைக்காரன், குருவி போன்ற படங்களை நியாபகப் படுத்த விரும்புகிறேன்.

சரி மீண்டும் பில்லா 2 ற்கு வருவோம். மிகச் சிறப்பான ஆக்ஷன் காட்சிகள் அமையப்பெற்றுள்ளதாகத் தோன்றுகிறது. குறிப்பாக ஹெலிகாப்டரிலிருந்து ஒற்றைக் கையில் தொங்கும் காட்சி மயிர்க் கூச்செறியச் செய்கின்றது. 
என்னதான் முன்னெச்சரிக்கை உபாயங்கள் கையாளப் பெற்றிருந்தாலும் தல இத்தகைய ஆபத்து நிறைந்த காட்ச்களில் நடிக்க வேண்டாம் என்பது என் விருப்பம். ஒரு காலத்தில் ஒரு நடிகர் ஒரு ஏணி மூலமாக ஒரு பால்கனியிலிருந்து இன்னொரு பால்கனிக்கு தாவுவார். உடனே இந்த காட்சியில்  டூப் போடாமல் நடித்தது உங்கள் டாக்டர் என்று வெட்கமில்லாமல் திரையில் ஒரு சுய விளம்பரம் வேறு. குருதிப் புனலில் கமல் ஒரு ஓடும் ரயிலை தண்டவாளத்தில் குறுக்காகத் தாண்டுவார். அது ஒரே ஒருமுறை மாத்திரம் திரையில் காண்பிக்கப்படும். ஆனால் டாக்டரோ ஏணி மூல தாண்டுவதை பல   ஆங்கிள்களில் படம்பிடித்து திரும்பத் திரும்ப நான்கு முறை காட்டுவார். ஜாக்கி சான் கூட இப்படி விளம்பரம் செய்ய மாட்டார்.



தல வெறுமனே திரையில் வந்தால் மட்டும் போதும். அவருடைய ஸ்கிரீன் ப்ரசென்ஸ் ஒன்று மட்டுமே மொத்த திரைப் படத்தையும் தாங்கி நிற்கும்.
சும்மா கதை  விடாதீங்க என்பவர்களுக்கு பில்லா, மங்காத்தா போன்ற படங்கள் உதாரணம். கமலுக்கு அடுத்தபடியாக என்ன உடை அணிந்தாலும் , எந்த வித சிகை அலங்காரத்திலும்  சிறப்பாக தோன்றுவது தல தான். மங்கத்தா நரைமுடி தோற்றத்திலேயே அசத்திய தைரியம் யாருக்கும் வராது. டாக்டரின் ப்ளாண்ட் ஹேர் ஸ்டையிலை பார்க்கும் தைரியம் யாருக்கும் வராது.. 



எதற்கெடுத்தாலும் கோட் அணித்ந்து கொண்டு கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு சும்மா அங்கேயும் இங்கேயும் நடக்கிறார் என்று தலையைப் பற்றிக் கூறுபவர்களுக்கு ஒரு கேள்வி. ஒரு ஹை ப்ரோபைல் டான் படத்தின் ஆம்பியன்சிற்கேற்ப பாந்தமாக கோட்  ஸ்யூட் அணிந்து வந்தது நன்றாக இருந்ததனால்தானே பில்லா வெற்றிபெற்றது? மாறாக மொட்டை வெயிலில் சிகப்பு நிற லெதர் கோட் போட்டுக் கொண்டு இடுப்பில் கை வைத்துக் கொண்டே சேரிப் பகுதிகளில் வீரமாக தொண்டரடிப்பொடிகள் சூழ டாக்டர் நடந்து வந்த சுறாவோ வேட்டைக்காரனோ என்ன ஆயிற்று?



எது எப்படியோ பில்லா  2 வெற்றி பெறுகிறதோ இல்லையோ தல ரசிகர்களுக்கு அது ஒரு பெரிய விஷயமே இல்லை. உட்றா உட்றா சூனா பானா என்று அடுத்த படத்திற்கு தயாராகிவிடுவோம். இதே மாதிரி தல ஆராதனைப் பதிவுகள் எழுதிக்கொண்டேதான் இருப்போம்.

27 comments:

  1. Super boss... kalakkureenga ponga...

    ReplyDelete
    Replies
    1. நான் ரஜினி ரசிகன்...பில்லா படத்துக்கு அப்புறம் அஜீத்தையும் சேர்த்து பிடிக்கும்....மங்காத்தா படத்துக்கு அப்புறம் தல வெறியனா மாறிட்டேன்....இப்போது பில்லா-2 பார்க்க ரொம்ப ஆவலா இருக்கேன்......அப்புறம் ஒரு சிறிய வேண்டுகோள்......அந்த பன்னாடை டாக்டரை அஜித் அவர்களுடன் ஒப்பிட வேண்டாம்...எதுக்குனா தலையே சொல்லிட்டரு எனக்கு "எதிரியா இருக்க தகுதி வேணும்னு"...அது அந்த பயபுள்ளகிட்ட கொஞ்சம் கூட இல்ல....என்ன சரிதான.........அப்புறம் ரஜினிக்கு அப்புறம் ஸ்டைல்-னா... அது தல தான்...

      Delete
  2. பாஸ் சூப்பர்ராய் சொன்னிங்க நிறைய பேர் பதிவுலகில் தலலைக்கு ரசிகராய் உள்ளது ரொம்ப சந்தோசம்...சன் வெளிஇட்டதலேயே ஒரு சில படங்கள் தான் ஹிட் மற்ற படி எல்லாம் வெறும் வெளம்பரம் தான்...

    ReplyDelete
    Replies
    1. என்ன சார் பெரிய பதிவுலகு ? ஒட்டு மொத்த தமிழ்நாட்டுலயும் தலைக்கு தான் நெறைய ரசிகர்கள் ;-) . வருகைக்கும் பகிர்விற்கும் நன்றிகள் சின்ன மலை

      Delete
  3. தளபதி ரசிகர்கள் ஏதாவது சொல்லுவங்கனு moderation வைத்து உள்ளீங்களா...

    ReplyDelete
    Replies
    1. மட்டுறுத்தல் உண்டு பாஸ். ஆனா கெட்ட வார்த்தைகள் இல்லாம நாகரிகமா இருந்தா எதிர்வினைகள் கண்டிப்பாக வெளியிடப்படும். நன்றி. தளபதி ரசிகர்கள் பவர் ஸ்டார் பக்கம் போயிட்டாங்க சண்டை போட.

      Delete
  4. nalla iruku... thala pola varuma...

    ReplyDelete
  5. //டாக்டரின் படங்கள் கேரளாவில் வரவேற்பினைப் பெறுகின்றன. முல்லைப் பெரியாரில் தண்ணீர் தராத மலையாளிகளுக்கு தமிழன் தரப்பிலிருந்து வழங்கப் படும் மிகப் பெரிய தண்டனை டாக்டரின் படங்கள் என்பது என் எண்ணம்

    செம ...

    டாக்குடர் ரசிகர்களை எல்லாம் ஒரு பொருட்டாவே மதிக்கக்கூடாது பாஸ் , முதலில் நம்ம தல ரசிகர்களோடு சண்ட போட்டானுக , பில்லாவுக்கு அப்பறம் நாம அவனுகளை மதிக்ககிறதே இல்லை , உடனே சூரியா ரசிகர்கள் கூட சண்ட போட போனானுக , அப்புறம் தனுஷ் ரசிகர்கள் அளவுக்கு கீழ்த்தரமா எறங்கி சண்டை போட்டு , இப்ப கார்த்தி ரசிகர்களோட வாய் சவாடல் விட்டுகிட்டு இருக்கானுக ,

    ReplyDelete
    Replies
    1. வா நண்பா .. என்னடா தலைய பத்தி பதிவு போட்டோம் இன்னும் நன்பன காணலியேன்னு பார்த்தேன். நண்பா டாம் அண்ட் ஜெர்ரி ல என்னதான் எலியோ பூனையா ஒண்ண ஒண்ணு கவுத்தாலும் ரெண்டும் ஒண்ணு இல்லேன்னா சோகமாயிடும். அதுமாதிரிதான் தலையும் டாக்டரும். இல்லாட்டி நமக்கெல்லாம் பொழுது போகாதில்லையா?

      Delete
  6. தல... தல தான்... ப்ளாப்பே கொடுத்தாலும் தல பின்னாடித்தான்...

    ReplyDelete
  7. ////டாக்டரின் படங்கள் கேரளாவில் வரவேற்பினைப் பெறுகின்றன. முல்லைப் பெரியாரில் தண்ணீர் தராத மலையாளிகளுக்கு தமிழன் தரப்பிலிருந்து வழங்கப் படும் மிகப் பெரிய தண்டனை டாக்டரின் படங்கள் என்பது என் எண்ணம்///

    ReplyDelete
  8. நான் ரஜினி ரசிகன்...பில்லா படத்துக்கு அப்புறம் அஜீத்தையும் சேர்த்து பிடிக்கும்....மங்காத்தா படத்துக்கு அப்புறம் தல வெறியனா மாறிட்டேன்....இப்போது பில்லா-2 பார்க்க ரொம்ப ஆவலா இருக்கேன்......அப்புறம் ஒரு சிறிய வேண்டுகோள்......அந்த பன்னாடை டாக்டரை அஜித் அவர்களுடன் ஒப்பிட வேண்டாம்...எதுக்குனா தலையே சொல்லிட்டரு எனக்கு "எதிரியா இருக்க தகுதி வேணும்னு"...அது அந்த பயபுள்ளகிட்ட கொஞ்சம் கூட இல்ல....என்ன சரிதான.........அப்புறம் ரஜினிக்கு அப்புறம் ஸ்டைல்-னா... அது தல தான்...நன்றி அண்ணாமலை முருகன்...

    ReplyDelete
  9. தலைய பத்தி இன்னும் நெறைய எழுதுங்கள்...அண்ணாமலை முருகன்...

    ReplyDelete
  10. நான் ரஜினி ரசிகன்...பில்லா படத்துக்கு அப்புறம் அஜீத்தையும் சேர்த்து பிடிக்கும்....மங்காத்தா படத்துக்கு அப்புறம் தல வெறியனா மாறிட்டேன்....இப்போது பில்லா-2 பார்க்க ரொம்ப ஆவலா இருக்கேன்......அப்புறம் ஒரு சிறிய வேண்டுகோள்......அந்த பன்னாடை டாக்டரை அஜித் அவர்களுடன் ஒப்பிட வேண்டாம்...எதுக்குனா தலையே சொல்லிட்டரு எனக்கு "எதிரியா இருக்க தகுதி வேணும்னு"...அது அந்த பயபுள்ளகிட்ட கொஞ்சம் கூட இல்ல....என்ன சரிதான.........அப்புறம் ரஜினிக்கு அப்புறம் ஸ்டைல்-னா... அது தல தான்...நன்றி அண்ணாமலை முருகன்

    ReplyDelete
  11. தலயப் பத்தி வாசிக்கவே சுவாரஸ்யமா இருக்கு.

    //மங்கத்தா நரைமுடி தோற்றத்திலேயே அசத்திய தைரியம் யாருக்கும் வராது. //

    அது மட்டுமா? வயசுக்கேத்த தொப்பையுடன் வெறும் ஷார்ட்ஸுடன் நின்ற தலயின் தைரியம் எங்க? தேங்காண்ணய பூசிட்டு சிக்ஸ் பேக்குன்னு காட்டிட்டு நின்ற டாக்குடர் எங்க? தல போல வருமா?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஹாலிவுட் ரசிகன் .. தல தொப்பைய குறைக்க முடியாம திணறுவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அவர் எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் பக்க விளைவுகள் ஒரு காரணம். அது பரவில்லை விடுங்க. சிவாஜி கணேசன் 70 களின் இறுதில இருந்ததை விடவா தல குண்டா இருக்கார்?
      அது சரி இலங்கைல டாக்டர் ரசிகர்கள்தான் அதிகமாமே? தல ரசிகரைப் பார்த்ததுல மகிழ்ச்சி.

      Delete
  12. ராஜேஷ்...இதை படிச்சு பயங்கர டென்ஷன் ஆய்ட்டேன்...;)ஸோ, " சுறா" பார்க்க போறேன்..;-)) பை..:)

    ReplyDelete
  13. thala greattttttt thala thala than da

    ReplyDelete
  14. thala is a great and favorate hero in tamilnadu billa is a great success on a thala

    ReplyDelete
  15. Thala style a than irukkar Ana Paramasivan,Asal mathiri mokka padattha ini mel kodukkama irunta nalla irukkum

    ReplyDelete

இந்த பதிவு பிடித்திருந்தால் வாழ்த்துங்கள், இல்லையென்றாலும் பரவாயில்லை உங்களுடைய விவாதங்களை தெரிவியுங்கள். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி !