கடந்த பதிவுகளில் ஓரளவிற்கு "design" பற்றி பார்த்துவிட்டோம். இந்த பதிவில் "Product Development Cycle" பற்றி பார்ப்போம்.எந்த ஒரு பொருளும் கருத்து வடிவிலிருந்து (idea) பொருளாக (product) மாறுவதற்கு சில இடைநிலைகள் உண்டு. இது எந்த ஒரு பொருளுக்கும் பொருந்தும்.
இதனை "Product Development cycle" பொருள் வளர்நிலை சுழல் எனலாம். (இன்னும் மேலான தமிழாக்கம் தெரிந்தால் கூறவும்)
Conceptualization --> Conversion --> Production Evaluation & Testing --> Product Release
கருத்துருவாக்கம்--கருத்து உருமாற்றம்--மதிப்பீடு செய்தல்--சந்தைப்படுத்துதல்
முதல் நிலையை "Conceptualization" - கருத்துருவாக்கம் எனலாம்.
இதில் சில இடைநிலைகள் உள்ளன.
Opportunity Identification குறிப்பிட்ட பொருளுக்கான தேவையைக் கண்டறிதல்
Idea Generation பொருளுக்கான கருத்து வடிவினை உருவாக்குதல்
Idea Selection சிறந்த கருத்து வடிவினைத் தேர்ந்தெடுத்தல்
Conceptualization அதனை கருத்துரு வாக மாற்றுதல்
Concept Evaluation கருத்துருவை மதிப்பீடு செய்தல்
இந்நிலைகள் அனைத்தும் ஒரு பொறியாளரால் மட்டுமே செய்யப்படுவதில்லை. "Opportunity Identification" னுக்கு Marketting துறையின் உதவி தேவைப்படும்.மற்ற நிலைகளுக்கு அனைத்து துறைகளிலிருந்தும் நிபுணர்களால் (Subject Matter Experts) உள்ளீடுகள் (Inputs) அளிக்கப்படும்.
இவ்வாறு ஒவ்வொரு கருத்துருவும் மெருகேற்றப்பட்டு அதில் சிறந்த ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டு அது அடுத்த நிலைகளுக்கு முன்னேறும்.
அடுத்த நிலை தேர்ந்தெடுக்கப்பட்ட கருத்துருவை பொருள் வடிவமாக மாற்றுதல் - Conversion
ஒரு டிசைன் எஞ்சினியரின் பணி கருத்துருவாக்க நிலையிலிருந்தே துவங்கி விடுகிறது. இந்த Conversion நிலையில் இன்னும் அதிகமான உழைப்பு டிசைன் என்ஜினியருக்குத்தான். concept ஐ தயாரிப்பிற்கு ஏற்ற வகையில் ஒரு 3D CAD மென்பொருள் மூலம் வடிவமைப்பதும் வரைபடங்கள் தயார் செய்வதும் டிசைன் எஞ்சினியரின் பணி.இடையில் ஏதேனும் மெருகூட்டும் எண்ணம் தோன்றினால் நிபுணர்களிடம் கலந்தாய்வு செய்துவிட்டு தேவைப்படும் மாற்றங்களை செய்யலாம்.
பின்பு வரைபடங்கள் ஒரு Manufacturing அல்லது Production எஞ்சினியர் துணையுடன் தயாரிப்பிற்கு ஏற்ற வகையில் உள்ளனவா என்று மதிப்பீடு செய்யப்பட்டு தயாரிப்பிற்காக அனுமதிக்கப்படுகின்றன. (Production Release).
அடுத்த நிலையானது Production Evaluation & Testing: தயாரித்த பொருளை மதிப்பீடு செய்தல்.
தயாரிக்கப்பட்ட பொருளானது முறையாக இயங்குகிறதா , சரியான தரத்தில் தயரிக்கப்பட்டுள்ளதா என்று சோதனை செய்யப்பட்ட பிறகே சந்தையில் விற்பனைக்கு வரும். தீபாவளி பண்டிகைக்கு ஒரு புதிய பொருள் விற்பனைக்கு வருகிறது என்றால் குறைந்தது நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்கு முன்பே அப்பொருளினைத் தயாரித்து விடுவார்கள். பின்பு சோதனைச் சாலையில் அதனை பல்வேறு சூழ்நிலைகளில் இயக்கி பரிசோதிப்பார்கள். இதனை "Accelerated Life test" " Endurance test" என்பர்.பின்பு சில பொருட்கள் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு ஓரிரு மாதங்கள் அவர்கள் அதனை பயன்படுத்தி , பின்பு அதில் ஏதேனும் குறைகள் இருந்தால் , புதிதாக தயாரிக்கப் போகும் பொருட்களில் நிவர்த்தி செய்வார்கள். பின்பு அவை சந்தைக்கு அனுப்ப தயாராகும்.
இவ்வாறு குறைகளைக் கண்டறிதல்அதனை குறிப்பிட்ட பொறியாளருக்கு , துறைக்கு அறிவித்தல் தரக்கட்டுப்பாட்டுத் துறையின் (Quality Department) பணியாகும்.
அடுத்த நிலையானது தயாரிக்கப்பட்ட பொருளை சந்தைப்படுத்துதல் (Product Release)
இதில் Marketting Department,மற்றும் Logistics department முக்கிய பங்கு வகிக்கின்றன.
Marketing Department
தயாரிக்கப்பட்ட பொருள் பற்றிய செய்திகள் மக்களைச் சென்றடையும் விதத்தில் விளம்பரப் படுத்துதல் மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து பொருட்களில் தேவையான மாறுதல்கள் கொண்டுவர நடவடிக்கை எடுத்தல் போன்றவை marketting துறையின் பணியாகும்.
Logistics ( Material management) - பொருள் நிர்வாகம்
தேவையான பொருள் சரியான இடத்தில் சரியான நேரத்தில் இருப்பதை உறுதி செய்வது லாஜிஸ்டிக் துறையின் பொறுப்பு. தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருளானது உலகமெங்கிலும் உள்ள நாடுகளுக்கு, நகரங்களுக்கு தரை வழியாகவோ , கடல்வழியாகவோ வான்வழியாகவோ சென்று சேர்ப்பது இவர்கள் வேலை.
இவ்வாறு உள்ள நிலைகளில் ஒவ்வொரு நிலையின் இறுதியிலும் அனைத்து துறைகளையும் சேர்ந்த நிபுணர்களின் கலந்தாய்வுக் கூட்டம் (Technical Reviews)நிகழும். இதனை சில நிறுவனங்கள் toll gate என்று அழைக்கின்றன, சில நிறுவனங்கள் gateway என்று அழைக்கின்றன ஒவ்வொரு நிலையிலும் ஏதேனும் குறைகளைக் கண்டால் நிவர்த்தி செய்ய முந்தைய நிலைக்கு பரிந்துரைப்பது இக்குழுவின் பொறுப்பு.
இவ்வாறு தரமான பொருள் உருவாகுவதை உறுதி செய்கின்றனர்.இத்தகைய Reviews பொருளில் கடைசிநேர மாறுதல்கள் தேவைப்படுவதை தவிர்க்கின்றன.தரத்தினை உறுதி செய்கின்றன.
ஒரு "Product development Cycle" உதாரணம் காண்போம்.
இது ஒவ்வொரு நிறுவனத்திற்கும் சற்று வேறுபடும்.ஆனால் அடிப்படை இதுதான்.
கடுமையான சோம்பேறித்தனத்திற்கு இடையே நான் பகிர விரும்பியதை ஓரளவுக்கு கூறிவிட்டேன் என்று நினைக்கிறேன்.மேலும் ஒரு பதிவுடன் இத்தொடரை நிறைவு செய்ய எண்ணம்.
மேலும் பார்ப்போம்!

ஒரு பதிவு எழுதுவதை விட , நிறைய பதிவுகள் எழுதுவதாகவும் அதனை நிறைய பேர் படித்து பாராட்டி பின்னூட்டமிடுவதாகவும் கற்பனை செய்துகொள்வது மிகுந்த எளிதாகவும் சுகமாகவும் இருப்பதால் சோம்பேறியாய் இருக்கிறேன்.தொடர்ந்து எழுத முயற்சி செய்கிறேன்!
ReplyDeleteபயனுள்ள பகிர்வு
ReplyDeleteநன்றி நண்பரே
thambi super da..keep doing ..all the best da !
ReplyDeleteSagala thangalin pani melum melum sirakka vaazhthukkal
ReplyDeleteverithanama irukuda!! idhu pol innum un pugazh valai engum parava, peruga en vazhthukkal
ReplyDeleteபுகழெனின் உயிருங் கொடுக்குவர் , பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர் ..! ஹா ஹா மச்சி புகழுக்காக ப்ளாக் எழுதலா டா.. என்னைக்காவது ஒருநாள் நமக்கு பின்னால வர்ற சந்ததியினர் படிச்சா பயனுள்ளதா இருக்குமேன்னு தான் எழுதிட்டு இருக்கேன். உன்னுடைய பாராட்டுகளுக்கு நன்றி!
ReplyDelete