Saturday, January 8, 2011

தமிழன் : அன்றும், இன்றும்..!


தமிழன் அன்று :

உண்டால் அம்ம, இவ்வுலகம் – இந்திரர்;
அமிழ்தம் இயைவது ஆயினும், ‘இனிது’ எனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவு இலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சி,
புகழ் எனின்; உயிரும் கொடுக்குவர், பழி எனின்,
உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனையர் ஆகி,
தமக்கு என முயலா நோன் தாள்,
பிறர்க்கு என முயலுநர் உண்மையானே
அதாவது தேவலோகத்து இந்திரர் அமிர்தமே தந்தாலும் தமிழன் தனியாக சாப்பிடாமல் எல்லாருடனும் பகிர்ந்து உண்பானாம்.

புகழ் கிடைக்கிறதென்றால் தமிழன் உயிரைக் கூட கொடுப்பானாம், பழி நேரும் நிலை வந்தால் உலகையே கொடுத்தாலும் அச்செயலைச் செய்ய மாட்டானாம்.

அயர்வில்லாது உழைப்பவன், தமக்கென வாழாமல் பிற நலனுக்காகவும் வாழ்பவன் இவன் போன்றவர்கள் வாழ்வதாலேயே இன்னும் இந்த உலகம் அழியாமல் இருக்கிறது என்று கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி கூறியிருக்கிறார். 

இந்த புறநானூற்றுப் பாடல் அந்நாளைய தமிழனின் இயல்புகளை குறைந்த சொற்களில் நிறைவாய் விளக்குகின்றது. இரண்டாயிரம் ஆண்டுகளில் நம் இனம் எப்படி எப்படியெல்லாம் மாறி வந்திருக்கிறது என்று பார்ப்போம்.
  
தமிழன் இன்று :

1.அன்டார்டிகாவுக்கே  போனாலும் அரிசி சோறு செய்து சாப்பிடுவது , தன்மானமா சாப்பாடா என்று கேட்டால் சாப்பாட்டில் சரணடைவது.

2.தன் பிள்ளைகள் தமிழை எவ்வளவு தப்பாக எழுதினாலும் வாசித்தாலும்  கவலைப்படாமல் இருப்பது , மாறாக ஆங்கிலத்தில் எழுத்துப்பிழையோ தவறோ இருந்தால் டியூஷன் வைத்தாவது ஆங்கிலம் வளர்ப்பது.

3.தமிழெல்லாம் எனக்கு வாசிக்கிறதோ எழுதுறதோ ரொம்ப கஷ்டம் என்று கூறுவது . அதனினும் கொடுமை அவ்வாறு கூறுவதைப் பெருமையாக நினைப்பது.

4.தப்பித்தவறி யாராவது கொஞ்சம் தமிழ் ஆர்வத்துடன் இருந்தால் "வந்துட்டாருய்யா புலவர்" என்று அவர்களைப் பழிப்பது.

5.அயல் மொழி பேசும் ஊரில் தமிழனைக் கண்டால் ஆங்கிலத்திலேயே பேசுவது(அலட்டுவது). பெரும்பாலும் மூஞ்சியை சுளித்துக் கொண்டே பிற தமிழனைத் தவிர்ப்பது.
.
6.கோபப்படவேண்டிய  முக்கியமான  விஷயங்களுக்கு மொண்ணையாக இருப்பது , உப்புப்பெறாத விஷயத்தை ஊதிப் பெரிதாக்கி கோவப்படுவது.
(ஊழல்கள், ஈழம், மு செயல்பாடுகள் போன்றவற்றில் அமைதியாக இருந்துவிட்டு, கமலஹாசன் படம் வரும்போது பிரச்சனை செய்வது)

7.இலவசங்களுக்காக பல்லிளித்து நிற்பது , மேலும் இந்த மக்களை சுலபமாக ஏமாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையை ஆட்சியாளர்கள் மனதில் ஆணித்தரமாக பதிய வைத்தது.

8.பணம் கொடுத்தால்தான் இனிமேல் ஒட்டு என்னும் அளவிற்கு இனமானத் தமிழன் ஈனமான          தமிழனாக ஆனது.

தமிழனின் மிகப்பெரும் சரிவு  அவன் எதையும் எதனுடனும் சமரசம் செய்து கொள்வது.
சுலபத்தில் எதையும் மறந்து விடுவது.

அன்றைய தமிழனின் குணநலன்களையும் இன்றைய தமிழனின் குணநலன்களையும் பார்த்தால் எப்படி இருந்த நாம் இப்படி ஆயிட்டோம் என்றுதான் கூறத்தோன்றுகிறது.

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்,
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.

என்பது புறநானூற்றுப் பாடல் பொன்முடியார் எழுதியது.

இந்த இரண்டாயிரம் வருடங்களில் நாம் சீரழிந்ததற்குக் காரணம் நன்னடை நல்காத நமது வேந்தர்கள் என்றே நினைக்கிறேன்.
அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி..!

8 comments:

  1. சகோ...படிச்சுட்டேன்...டீடைல் ஆ நாளைக்கு கமெண்ட் போடுறேன்..இது தமிழ் மணம் க்காக ட்ரெயில் கமெண்ட்..:))

    ReplyDelete
  2. அடேங்கப்பா...புறநானுற்று பாடல் மூலம் இந்த காலத்து தமிழனை ஒப்பிடுவது...shame ..shame ..puppy shame சகோ..:)) அந்த காலத்து தமிழனுங்களுக்கு இருந்த வீரம் எங்க ?...முறத்தை வைத்து அடிச்ச தமிழச்சிங்க எங்க...புறமுதுகு காமிக்காமல் வீரமாய் மடிந்த தலைவர்கள் எங்க.....!! இப்போ எல்லாம் எல்லாம்...எல்லாமே உடான்சு ராஜேஷ்.:))..தாய்பால் மட்டுமே ஒரிஜினல் ..மத்த எல்லாமே..எல்லாருமே...டுபாக்கூர்...இது தான் தமிழ்நாடு...இன்றைய தமிழன்..!!நீங்க வேணும்னால் புறநானூறு மாதிரி டுபாக்கூரு தமிழ்நூறு னு எதாவது எழுத முயற்சி பண்ணுங்க சகோ...'நம் தமிழர் தன்பெருமை இவ்வுலகில் தெறித்து மிதப்புடன் வீறு கொண்டு சிரிப்போம்.'..ஹ ஹ..ஹ:)))

    அருமையான தொகுப்பு...அருமையான முயற்சி சகோ இந்த பதிவு...

    ReplyDelete
  3. ௨ ௩ ௪ அருமை ராசேசு,

    ReplyDelete
  4. அருமையா எழுதி இருக்கீங்களே....

    ReplyDelete
  5. ரெண்டு ஓட்டும் போட்டாச்சு...

    ReplyDelete
  6. தமிழனின் மிகப்பெரும் சரிவு அவன் எதையும் எதனுடனும் சமரசம் செய்து கொள்வது.
    சுலபத்தில் எதையும் மறந்து விடுவது.//
    எப்படி இருந்த நாம் இப்படி ஆயிட்டோம் !!

    ReplyDelete
  7. தமிழ்மணம் முதல் vote

    ReplyDelete
  8. அருமையான பதிவு

    ReplyDelete

இந்த பதிவு பிடித்திருந்தால் வாழ்த்துங்கள், இல்லையென்றாலும் பரவாயில்லை உங்களுடைய விவாதங்களை தெரிவியுங்கள். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி !