Sunday, December 19, 2010

மம்மொத்கள் ( MAMMOTHS) மீண்டும் பிறப்பது சாத்தியமா..?

ஜுராசிக் பார்க் படத்தில் டைனோசர்கள் மனிதனுடன் உலவுவதை பார்த்திருக்கிறோம். அது போல ஊழிப்பனிக் காலத்தில் வாழ்ந்த மிருகமான  வுல்லி மம்மோத் (Woolly Mammoth )  யானைகள் நம்முடன் சமகாலத்தில் உலவினால் எப்படி இருக்கும் ? சாத்தியம்  இருக்கிறதா என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். 
இந்த துறையில் தன் வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்ட ஜப்பானிய ஆராய்ச்சியாளர் கஸு புமி கோட்டோ (Kazufumi Goto) கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கு  மேலாக ஒரு உறைநிலை மம்மொத்தின் உடலத்தைத் தேடிவருகிறார். 2000 ஆண்டுவாக்கில் நேஷனல் ஜியாக்ரபிக் தொலைக்காட்சியில் அடிக்கடி இவரது வாசகம் ஒன்று ஒளிபரப்புவார்கள்
" எனக்கு ஒரு முழுமையான மம்மொத்தின் உறைநிலை உடல் கிடைத்தால் கண்டிப்பாக நான் மம்மொத்தை மீண்டும் பிறக்க வைப்பேன்" என்பதாகும். திடீரென்று அந்த ஆராய்ச்சி எந்த நிலையில் உள்ளது என்று இணையத்தில் தேடிய போது கிடைத்த சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர விரும்புகிறேன். 
மம்மொத்கள் Mammuthus Premigenius என்னும்  பிரிவினைச் சேர்ந்ததாகும்.
இந்திய யானைகள் Elephas maximus indicus என்னும் பிரிவினைச் சேர்ந்தவையாகும்.
ஆப்பிரிக்க யானைகள் Loxodonta africana  என்னும் பிரிவினைச் சேர்ந்தவையாகும்.குளிரிலிருந்து தம்மை காத்துக்கொள்ள அடர்த்தியான  கம்பளி ரோமங்களைப் பெற்றிருந்ததனால்தான் அவை வுல்லி மம்மோத் (Woolly Mammoth)  என்று அழைக்கப்படுகிறது.

ஊழிப்பனிக் காலத்தில் அதாவது "Ice Age" என்று அழைக்கப்பட்ட காலத்தில் சுமார் 10000 வருடங்களுக்கு முன்பு அந்த இனம் மெல்ல மெல்ல மறைந்து போகத் தொடங்கியது. பெரும்பாலும் இன்றைய அலாஸ்கா , ரஷ்யாவின் சைபீரிய தூந்திரப் பிரதேசங்களில் அவை அதிகம் வாழ்ந்திருக்கின்றன என்று கணிக்கப் படுகிறது. உலகம் தன் தட்ப வெப்ப நிலையிலில்  மாறுதல் அடைந்ததால் அவற்றிற்கான உணவுத் தாவரங்கள் அழிந்து போய் அதனால் அந்த இனம் அழிந்திருக்கலாம் என்பது ஒரு ஊகம்.
மேலும் பனி உருகத்தொடங்கிய காலத்தில் அவற்றிற்கான வாழ்விடப் பற்றாக்குறை காரணமாகவும் அவை இறந்திருக்கலாம்.
சிலவேளை மாறும் தட்ப வெப்ப நிலைக்கேற்ப பரிணாம வளர்ச்சி அடைந்து தன்னைத் தகவமைவு செய்து கொள்ளாததினாலும் அவை இறந்திருக்கலாம் என்று எண்ணப் படுகிறது.

10000 B.C திரைப்படத்தில் நவீன கணினித் தொழில்நுட்ப உதவியுடன் மிக தத்ரூபமாக மம்மோத் யானைகளை வடிவமைத்திருப்பார்கள். அவற்றைப் பிரமிடுகள் கட்ட பயன்படுத்துவதாகக் காட்டியிருப்பார்கள். ஆனால் அத்தகைய பாலைவனச்  சூழலில் வுல்லி மம்மொத்களால் வாழ்ந்திருக்க முடியாது. அவற்றின் ரோமமே அவற்றைக் கொன்றிருக்கும்.
க்ளோனிங் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப் பட்ட பிறகு ஒரு அழிந்து போன இனத்தை மீண்டும் 
பிறக்கச்செய்ய முடியும் என்னும் நம்பிக்கை அதிகரித்திருக்கிறது. 1990 இல் காஸு புமி  கோட்டோ
ஒரு நாட்டு வகை ஜப்பானிய பசு இனத்தை மீட்டெடுக்க இறந்த பசுவின் உயிரணுக்களை முதிர்ந்த கருமுட்டையில் செலுத்தி வெற்றிகரமாக மீட்டெடுத்திருக்கிறார்.

தற்போது அவர் வேண்டுவதெல்லாம் DNA மூலக் கூறுகள் சிதையாமல் உள்ள ஒரு மம்மொத்தின் உடலம். தற்போது கிடைக்கப் பெற்ற சதைத் துணுக்குகளில் உள்ள DNA  மூலக்கூறுகள் 85 சதவிகிதம் மட்டுமே முழுமையாக உள்ளன. அவரது எண்ணம் என்னவென்றால் முதலில் ஒரு 100 சதவிகித DNA வைக் கொண்டு ஒரு ஆப்பிரிக்க யானை மூலம் ஒரு "மம்மோத் - ஆப்பிரிக்க யானை " கலப்பினத்தை உருவாக வேண்டும். பின்பு அந்த கலப்பின யானை கன்று மூலம் மம்மொத்தின் DNA  வைக் கொண்டு ஒரு முழு மம்மொத்தை உருவாக்கிவிடலாம் என்பதேயாகும்.இது ஒருவிதத்தில் பின்னோக்கிய பரிணாம வளர்ச்சி "Reverse  Evolution " என்று அழைக்கப்படுகிறது.
தற்போது ரஷ்ய சைபீரியப் பகுதியிலிருந்து  ஒரு யானை கன்றின் உறைநிலை உடல் கிடைக்கப் பெற்றுள்ளது.

இம்முறை கோட்டோ வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும். அவ்வாறு ஒருவேளை உருவாகிவிட்டால் அவை இன்றைய சைபீரியப்  பகுதிகளில் வாழ முடியும்.
நாமும் ஜுராசிக் பார்க் படத்தில் டைநோசரைப்  பார்க்கப் போவது போல தூந்திரப் பகுதிக்கு சென்று பார்க்கலாம்.
 
இயற்கைக்கு எதிரான மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் இயற்கை கடுமையான எதிர்வினையைக் கொண்டிருக்கும்.மம்மோத் விஷயத்தில் என்ன நடக்கும் என்று தெரியவில்லை ஆனால் இப்போதே விஞ்ஞானிகள் இது தடுக்கப் படவேண்டும் .இது இயற்கைக்கு எதிரானது என்று முறையிடுகின்றனர்.
ஒருவேளை இந்தியாவில் மம்மொத்கள் வந்தால் என்னவாகும் ? யானைப்பாகன் மம்மொத்தின் ரோமத்தை ஒவ்வொன்றாகப் பிடுங்கி விற்று மம்மொத்தை மொட்டையடிப்பான். சாதாரண யானைக்குப் பதில் மம்மொத்தை வைத்துப்  பிச்சை எடுப்பார்கள். எப்படியானாலும் அவை திரும்பவும் பூமிக்கு வராமலிருப்பதே
நன்று என்று நினைக்கிறேன்.

நன்றி :

மேலும் அதிக தகவல்களுக்கு மேற்குறிப்பிட்ட இணைப்பில் பார்க்கவும்.8 comments:

 1. முடியும் என்றும் சொல்ல முடியாது, ஆனால் முடியாது என்றும் சொல்ல முடியாது. முடியும் ஆனா முடியாது. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 2. @இக்பால் செல்வன்
  முடியாதது என்று எதுவும் இல்லை நண்பரே

  ReplyDelete
 3. கலக்கல் & வித்தியாச பதிவு ராஜேஷ்...அனேகமா மனிதனின் பரிணாம வளர்ச்சி கூட ஆதிகால மனிதனுக்கு உடம்பில் அதிக ரோமத்துடன் தானே இருந்து இருக்கான்...ஆனால் கொஞ்சம் கொஞ்சமா அந்த ரோமங்கள் எல்லாம் உத்ரிந்து இப்போ இருக்கும் மனிதனின் தோற்றமே வேற ...எனக்கு என்னவோ மம்முதுக்கள் இந்த கால இயற்கை சூழ்நிலைக்கு அதாலே survival பண்ண முடியுமான்னு சந்தேகமா இருக்கு ராஜேஷ்..என்னவோ ஆதிவாசி மனிதனை திருப்பி பிறக்க வைக்கும் முயற்சியா...?க்ளோனிங் படுத்தும் பாடு இதெல்லாம்...:))) ஏற்கனவே குளோபல் வார்மிங் இல் உலகம் அழிஞ்சுட்டு இருக்கு...ஆர்க்டிக் பக்கம் கொஞ்சம் கொஞ்சமா வெப்பம் தாங்காமல் உருகிட்டு இருக்குனு பயமுறுத்துறாங்க ..எந்த புதிய கண்டுபிடிப்பும் foodchain ஐ பாதிக்காமல் இருந்தால் சரி...:)) நீங்கள் சொன்ன மாதிரி இதுலயும் கம்மேர்ஷியல் ஆ காசு பார்க்க யோசிக்கும் கும்பல் தான் நம்மை சுத்தி இருக்கு.. ...கோட்டா அங்கிள் வேற உருப்படியா யோசிச்சால் நல்லது...ஹ ஹ...am i right rajesh??:)

  ReplyDelete
 4. @ஆனந்தி..
  உண்மைதான் ஆனந்திக்கா.இப்போ இருக்குற சூழ்நிலைல மம்மொத்களால வாழ முடியாதுதான்.இயற்கைக்கு மீறி நாம எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் நமக்கான குழியை ஒரு அடி ஆழமாக்குது.ஆகாயத்தாமரைகள ஒரு பிரிடிஷ்காரன் கல்கத்தாவுல அழகா இருக்குமேன்னு ஒரு நதியில போட்டானாம்.இன்னிக்கு இந்தியா முழுக்க பல நீர்நிலைகள் அழிய அதுவே காரணமாயிடிச்சு. மக்கள் நாம்தான் விழிப்புணர்வோட நம்ம சுற்றுச்சூழல பாதுகாக்கணும்.

  ReplyDelete
 5. "ஹைக்கூ அதிர்வுகள்", ஆனந்தி - உங்கள் ப்லாக் எனக்கு பரிந்துரைத்தார்கள்.. ரொம்ப நல்லா எழுதுறீங்க....
  Follow பண்றேன். மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. @Chitra
  தங்கள் வருகைக்கும் ஊக்கப்படுத்தும் பண்புக்கும் நன்றி சித்ரா அவர்களே.

  ReplyDelete

இந்த பதிவு பிடித்திருந்தால் வாழ்த்துங்கள், இல்லையென்றாலும் பரவாயில்லை உங்களுடைய விவாதங்களை தெரிவியுங்கள். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி !