Wednesday, November 11, 2009

தமிழ் வகுப்பும் நகைச்சுவையும்..!

பள்ளிநாட்களில் நான் அதிகம் ரசித்தது தமிழ் வகுப்புகளே. மிக்க சுவாரஸ்யமானவை. காரணம் பாடங்கள் அல்ல. அவ்வகுப்புகளின்போது அரங்கேறும் நகைச்சுவை நிகழ்வுகள்தான்.குறிப்பாக 8 மற்றும் 9 ஆம் வகுப்புகளின் தமிழ்ப்பாடவேளைகளை என்னால் மறக்கவே முடியாது. முதலில் 8 ஆம் வகுப்பு பற்றி சொல்கிறேன். 9 ஆம் வகுப்பு பற்றி அப்புறம். 8 ஆம் வகுப்பில் கல்யாண சுந்தரம் சார்.மழித்த மீசை. நல்ல உயரம், அதற்கேற்றார் போல தேகம்.வேஷ்டி சட்டையில் ஒரு கச்சிதமான தமிழாசிரியருக்கான இலக்கணங்களுடன் வருவார்.கண்ணாடியை விட்டுவிட்டேன். எல்லா தமிழ் வாத்தியார்களைப் போலவே கண்ணாடியும் அணிந்திருப்பார். சுருங்கச் சொல்வதெனின் ஒரு நேர்மையான தமிழாசிரியர்.
சிலசமயங்களில் வேஷ்டியின் நுனியால் காதைக் குடைந்துகொண்டே அடுக்கு மொழியில் "அதனை எடுத்து... கொடுத்து... உடுத்து... " என்று பாடம் நடத்துவது அவ்வளவு ரம்யமாக இருக்கும்.ஆனால் பிரம்பைக் கையில் எடுத்தார் என்றால் தொலைந்தோம். ஒருமுறை ஸ்ரீராம் வாங்கிய அடியைப் பார்த்து நாங்களெல்லாம் கழிந்து விட்டோம்.


ஒருமுறை எல்லோரிடமும் கோனார் தமிழ் உரை வாங்கி வைத்திருக்குமாறு சொன்னார். சிலநாட்கள் கழித்து கேட்கும்போது நண்பன் முருகேஷிடம் தமிழ் உரை இல்லை. " யாம்டே ? நீ எடுத்துட்டு வரலியா? என்றார். சார்.. கடைல புக்கு இல்ல சார்.. ஆமா நீ எந்த கடைலயாக்கும் கேட்ட ? வீட்டுக்கு பக்கத்துல ஒரு கடைல சார் . அதுசரி..! லேய் மாக்கான்..! வெத்தல பாக்கு கடைல எவம்ல தமிழ் புக்கு வச்சிருப்பான்? போய் மீனா குமாரிலயோ , ஸ்டூடண்ட்ஸ்லயோ வாங்கணும்ல..! என்றார்.இவ்வாறு கமெண்ட் அடிப்பதில் அபாரமான டைமிங் சென்ஸ் உள்ளவர்.

நான் அமர்ந்திருந்த வரிசையில் என்னுடன் 4 பேர், குப்புசாமி, பாலு, பாலசுப்பிரமணியம், ஸ்ரீனிவாசன். இதில் ஸ்ரீனி யும், பாலசுப்ரமணியனும் அமைதிப்படை. பாலு மிகுந்த புத்திக் கூர்மை உடையவன் ஆனால் வெளிக்காட்டாதவன். குப்பு காமெடி பீஸ்.எதிர்பாராத தருணங்களில் நமக்கு சிரிப்பை மூட்டி விட்டுவிட்டு ஒன்றும் அறிய பிள்ளை போல உட்கார்ந்து கொள்வான். நம்மைப்பற்றி நாமே சொல்லத்தேவை இல்லை.

ஒருநாள் வகுப்பில் சார் திருக்குறள் நடத்திக் கொண்டிருந்தார்.
“மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயர் நட்பு”
என்ற குறளுக்கு விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது குப்பு அக்குரலுக்கு ஒரு விளக்கம் சொன்னான்.
மக்கா லேய்..! இதுக்கு என்ன அர்த்தம் தெரிமால..? அது நாம பயங்கரமான கஷ்டத்துல இருக்கும் போது ஒருத்தன் ஓடீ வந்து காறி துப்பிட்டு போனான்னா அவன நாம மறக்கவே கூடாதுல என்றான். துன்பத்துள் துப்பாயர் நட்பை துன்பத்தில் துப்பிவிட்டு போவதாகப் பொருத்தியிருந்தான்.எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. வாயில் கைவைத்து பொத்திக் கொண்டு ஒரு கையால் வயிற்றைப் பிடித்துக் கொண்டு அடக்க முயன்று தோற்றேன்.உடனே என் பேனாவைக் கீழே போட்டு விட்டு குனிந்து சிரித்து முடித்துவிட்டு எழுந்து உட்கார்ந்தேன்.மகாலட்சுமி ஒரு விநோதப் பார்வை வீசினாள்.யாருடா இவன் லூசு என்று அவள் கண்கள் கேட்டது என் காதுகளில் ஒலித்தது.

மற்றொருநாள், தேர்வு நெருங்கி வந்த நேரம்.எனவே வாத்தியார் அனைவரையும் மனப்பாடச் செய்யுள் பகுதிகளை படிக்கச் சொல்லிவிட்டு அமர்ந்துகொண்டார். நானும் ப்ரவீனும் போய் கரும்பலகையின் அருகில் உட்கார்ந்து படிக்க ஆரம்பித்தோம். நளவெண்பா என்று நினைக்கிறேன் சரியாக ஞாபகம் இல்லை. அப்பாடலில் ஒரு வரி "தன்னை நிலைகலக்கிக் கீழிடுவானும் தன்" என்று வரும். ஞாபகம் வருதே பாடலில் சேரன் படிப்பதைப் போல முட்டி முட்டி படித்துக் கொண்டிருந்தோம்.
அப்போது நான் அமரும் வரிசையின் முன் வரிசையில் நண்பன் ஒருவன் (பெயர் வேண்டாம், சிவா என்று வைத்துக் கொள்வோம்) கொஞ்ச நேரமாக அசையாமல் அசொளகரியமாக நெளிந்து கொண்டிருந்தான். லைட்டா ஒரு பேட் ஸ்மெல் அந்த ஏரியாவிலிருந்து கிளம்பியது.ஹ்ம்ம் ... சீ.. போடே..! மொதல்ல எந்திரிச்சு போடே..! என்று கூறியபடி கார்த்திகேயன் எழுந்து ஓடினான்.ஒன்றுமில்லை நண்பன் சிவா கொஞ்சம் கக்கா போய்விட்டிருந்தான்.சலசலப்பு காரணமாக சார் " என்னடே ஆச்சு அங்கண? என்றார்.உடனே குப்பு எழுந்து "ஒண்ணும் இல்ல சார்..! நம்ம சிவா "நிலை கலக்கி கொஞ்சம் கீழ இட்டுட்டான் " சார்..! என்றான்.சாரும் சிரிப்பை அடக்கிக் கொண்டு அட கருமமே..! எந்திருச்சு ஓடுடே மொதல்ல என்றார்.வகுப்பின் சிரிப்பலையைக் கடந்து நம் நண்பன் எழுந்து டாய்லட்டை நோக்கி ஓடினான்.

9 comments:

  1. "நிலை கலக்கி கொஞ்சம் கீழ இட்டுட்டான்" ஒ!...இதுக்கு பேர்தான் இரட்டுற மொழிதலா!!!

    ReplyDelete
  2. hahaha!! :) hilarous machi!! "அதனை எடுத்து... கொடுத்து... உடுத்து... " still echoing in my ears!!! :) i was there in the situation so I can feel it really !! Keep going !! :)

    ReplyDelete
  3. machi pinnala irundha ungalaalaye poruka mudiyalaye..pakkathula irundha enaku epadi irukum..apadiye namma nagaraj sir a pathi konjam avuthuvidu..

    ReplyDelete
  4. really rocking da machi..waiting for the cont..

    ReplyDelete
  5. rasik... yes i am going to have a post based on nagarajan sir's class soon :-)

    ReplyDelete
  6. ஹ..ஹா..ஹ..ஹா........சூப்பரப்பூ !

    ReplyDelete
  7. yaruda atha siva.. yanaku niyabhagam illa?

    ReplyDelete
  8. machi great da. Great memeory da. u took me to SMRV school, nice. post some thing about Murukupatti(Murugesh) and about Balu. And post something about the 11 std tamil vathi.........

    ReplyDelete
  9. dai velayutham ..this incident happened in 8th standard and you joined smrv in 9 th standard only so you are not aware of this..

    ReplyDelete

இந்த பதிவு பிடித்திருந்தால் வாழ்த்துங்கள், இல்லையென்றாலும் பரவாயில்லை உங்களுடைய விவாதங்களை தெரிவியுங்கள். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி !