Friday, August 7, 2009

தமிழ்க்கிழவி-1

சங்கப்புலவர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் அவ்வையார்தான்.பல அரிய உண்மைகளை எளிய பாடல்களில் அளித்திருக்கிறார். இன்றளவும் அவரது பாடல்களை நான் சிலாகித்து வந்திருக்கிறேன்.மிக எளிய தமிழில் எளிதில் அர்த்தம் புரியும் வகையில் நிறைய பாடல்கள் தந்திருக்கிறார். (இரண்டு மூன்று முறை படித்துப்பார்த்தால் எளிதில் பாடலின் சாராம்சம் புரிந்து விடும்) . இனி அவ்வப்போது அவர் பாடல்களை இங்கு விளக்கத்தோடு காணலாம்.

நல்வழிப் பாடல்

வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம் : வேழத்தில்
பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்.

புரிகிறதா..? இரண்டு மூன்று முறை திரும்ப வாசித்துப் பாருங்கள்.
விளக்கம் பார்ப்போம்.

வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம் - கடினத்தன்மை கொண்டவை
நெகிழ்வான மிருதுவானவற்றை வெல்ல முடியாதாம்.
வேழத்தில் - யானையில்
பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது - யானையின் உடம்பில் பாயும் ஈட்டியானது பஞ்சுமூட்டையைத் துளைக்க முடியாது
நெட்டிருப்புப் பாரைக்கு நெக்குவிடாப் பாறை - நெடிய
இரும்பினால் ஆன கடப்பாரையால் மலையைப் பிளக்க முடியாது.
பசுமரத்தின் வேருக்கு நெக்கு விடும்.- அதே
மலையில் பசுமையான மரத்தின் வேர்கள் சுலபமாக உள்ளே சென்றிருக்கும்.

1 comment:

  1. நண்பா
    இந்த தமிழ்கிழவிக்கென்று உலகிலெயே நமது ஊரில்தான் கோவில் அமைத்துள்ளனர் "ஒளவையாரம்மன் கோவில்" இது செண்பகரமன்புதூர் கிராமம் அருகில் தோப்பூர் எனும் இடத்தில் உள்ளது. இங்கு ஆடிமாதம் சிறப்பு பூஜைகள் நடக்கும்.

    ReplyDelete

இந்த பதிவு பிடித்திருந்தால் வாழ்த்துங்கள், இல்லையென்றாலும் பரவாயில்லை உங்களுடைய விவாதங்களை தெரிவியுங்கள். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி !