இதுவரை நான் கூறிய தமிழ் வகுப்பு அனுபவங்களிலிருந்து இப்போது நான் கூறப் போவது சற்று வித்தியாசமானது.பொதுவாக தமிழாசிரியர் என்றதும் நம் நினைவுக்கு வரும் பிம்பம் என்ன? நெற்றியில் விபூதிப் பட்டை லேசான முன்வழுக்கை நடுத்தர அல்லது ஓய்வை நெருங்கும் வயது வெள்ளை வேஷ்டி சட்டை, சுருக்கமாகச் சொல்வதானால் ஒரு வாத்தியார் ராமன், பூர்ணம் விஸ்வநாதன் , சங்கரன்,சோமயாஜுலு போன்றவர்களின் தோற்றம்.எங்கள் ஒன்பதாம் வகுப்பு தமிழாசிரியர் திருவாளர் நாகராஜன் அவர்கள். சார் நடுத்தர வயதுக்காரர், வேஷ்டி தவிர்ப்பவர், (பேன்ட் அணிந்திருப்பார்).மற்றபடி சிறிய விபூதி கீற்றுடன் ஒரு அக்மார்க் தமிழாசிரியர் தான்.