இளையராஜா ரஹ்மான் குறித்து எனக்கும் நண்பர்களுக்கும் அடிக்கடி விவாதம் நிகழ்வதுண்டு. எங்கே யுவன் , ஹாரிஸ் ஜெயராஜ், எல்லாம் இல்லையா என்றால் இன்னும் அவர்கள் தனித்த பாணியை உருவாக்காதது காரணமாக இருக்கலாம். மேலும் இருவருமே சிறந்த "Copy Cats" என்பதால் கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை. முதலில் நாம் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். ரஹ்மானின் இசையின் தரம் ராஜாவை விட உயர்ந்தது என்பவர்களுக்கு என் பதில்,K.V.மகாதேவனை விட M.S.V. இசையின் தரம் உயர்ந்ததாக இருந்திருக்கலாம், M.S.V யை விட ராஜாவின் இசையின் தரம் உயர்ந்ததாகத் தெரியலாம்.
ஏனெனில் இசையின் தரம் என்பது அந்தந்த கால கட்டங்களில் இருந்த ஒலிப்பதிவு தொழில்நுட்பம் சார்ந்ததே அன்றி இசையமைப்பாளரின் திறமை இன்மை காரணம் அன்று.கண்டிப்பாக ரஹ்மான் ஒரு மிகத்திறமை வாய்ந்த இசையமைப்பாளர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆஸ்காரை வசப் படுத்திய இந்தியன் என்பதில் நானும் பெருமை அடைகிறேன்.அதற்காக அவர் கடந்துவந்த பாதை என்பது குண்டும் குழியுமான ரோடு எனக் கொண்டால் இளையராஜா கடந்த பாதை முட்களாலான மண்பாதை எனக் கொள்ளலாம். முகேஷ், கிஷோர், லதாமங்கேஷ்கர் பிடியிலிருந்த தமிழ் மக்களின் ரசனையைத் தமிழின் பால் திருப்பிய மிகப்பெரும் பணி ராஜாவினுடையது என்பது மறுக்க முடியாதது.
இன்றைய சூழ்நிலையில் சாரு நிவேதிதா போன்றவர்கள் இளையராஜாவை முற்றிலும் நிராகரிக்கலாம். அவர்களுக்கெல்லாம் தமிழ் இசை உலக இசை போல இல்லை என்பது மிகப் பெரும் வாதம்.
எதற்காக தமிழ் இசை உலக இசை போல இருக்க வேண்டும் என்பது என் எண்ணம்? இன்று உலக இசையில் மிகப் பெரிய ஜாம்பவான்கள் அவர்களுக்குச் சொந்தமான மண்ணின் இசையையே உருவாக்கினர்.உலகளாவிய சூழலில் மேற்கத்திய பண்பாட்டு ஆதிக்கம் அதிகமான காரணத்தால் அவர்களுடைய இசை பல நாடுகளிலும் கேட்கப்பட்டு உலக இசை என்ற பொதுப் பெயர் உருவாயிற்று.அதனால் நாம் உலக இசையைப் படைக்கத் தேவையில்லை.மாற்றாக நமது இசையை உலகுக்குப் பரப்பும் முயற்சிகளை எடுப்போம்.
80 களுக்கு முன் "Stereo sound effects" தமிழில் பயன்பாட்டுக்கு வராத காலங்களில் குரலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பாடல்கள் வந்தன.குழல் ஸ்பீக்கர்கள் மட்டுமே இருந்த காலத்தில் அவ்வகைப் பாடல்களே நன்றாக ஒலிக்கும். 2 in 1 எனப்படும் "Tape Recorder" கள் வரத்தொடங்கிய காலம்தான் இளையராஜா கோலோச்சிய தமிழ்த்திரை இசையின் பொற்காலம்.எனினும் அந்த காலகட்டங்களிலேயே மிகச்சிறந்த துல்லியமான இசையை அவர் அளித்திருக்கிறார் என்பது என் எண்ணம்.1982 இல் வெளிவந்த "நினைவெல்லாம் நித்யா" திரைப்பட பாடல்களில் அவ்வளவு இனிமை நிறைந்திருக்கிறது.இன்றளவும் திகட்டாத பாடல்கள்.படங்களைப் பட்டியலிடத் தொடங்கினால் 500 க்கும் மேற்பட்ட படங்களைக் கூறவேண்டியிருக்கும்.இந்தியாவிலேயே முதல் முறையாக கணிப்பொறி உதவியுடன் இசை அமைத்ததும் அவர்தான்.விக்ரம் படத்திற்காக.
இளையராஜாவின் உச்சக் காலங்களில் சில இசையமைப்பாளர்கள் இருந்தார்கள்.சந்திர போஸ் ,சங்கர் கணேஷ் போன்றோர். அவர்களால் ஒருவழியாக பாடல்களுக்கு மெட்டமைக்க முடிந்ததே ஒழிய பாடலின் முன் வரும் இசையையும்(Preludes), பல்லவிக்கு சரணத்திற்கும் உள்ள இடைவெளியை (interludes) நிரப்பும் இசையையும் சரிவர இனிமையாகத் தர முடிந்ததில்லை.உதாரணம் வேண்டுமானால் சந்திர போஸ் இசையமைத்த மனிதன் திரைப்படப் பாடல்களையும் சண்டைக்காட்சிகளையும் பாருங்கள். அக்கால தூர்தர்ஷன் நாடகங்களில் வரும் இசையைவிட கொஞ்சமே மேம்பட்டு இருக்கும் அவை.
இன்றளவும் நாம் உபயோகிக்கும் மொபைலில் ரிங் டோன்களாக எத்தனை இளையராஜா பாடல்களில் வரும் இசையை உபயோகிக்கின்றோம்? நமது மண்ணின் இசையான தெம்மாங்குதான் அவர் படைத்த அல்லது மேம்படுத்தி வழங்கிய இசை.அதுதான் அவரது தனித்தன்மை.பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடம் நானறியேன் என்பது தெம்மாங்குப்பாடல்.சிந்து பைரவி வந்திருக்காவிட்டால் நமக்கெல்லாம் எப்படி அந்தப்பாடலைப் பற்றி தெரிந்திருக்கும்? "கரையெல்லாம் செண்பகப்பூ" படத்தில் மனோரமா அந்தப் பாடலை நாட்டுப்புற வடிவில் பாடிக்காட்டுவார்.அதே பாடலை சாஸ்திரிய சங்கீதத்துடன் மிக நுண்ணிய புள்ளி ஒன்றில் மரி மரி நின்னே என்று இணைத்திருப்பரே ராஜா,அதுதான் அவருடைய ஞானத்தின் சான்று.
இன்னும் கூறவேண்டுமானால் பாடல்வரிகளை ஒருநாளும் சிதைத்ததில்லை. அவரும் தாய்மொழி தமிழல்லாத எத்தனையோ பாடகர்களை தமிழுலகுக்குத் தந்திருக்கிறார். மனோ,ஜென்சி ,ஸ்வர்ணலதா என்று பட்டியல் இன்னும் நீளும்.புதிய பாடகர்களுக்கு வாய்ப்பு தருவதில்லை என்று அவரைக் குறைகூறுவோர் அந்தப் பாடகர்கள் குறையில்லாமல் பாடியிருந்தால் ராஜா ஒத்துக் கொண்டிருப்பார் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் .
ராஜாவின் இசையில் "Synthesizer" ஆதிக்கம் அதிகம் இல்லாமல் பார்த்துக் கொண்டார்.அவர் காலத்தில் அவ்வளவு உபயோகிக்கப்படவில்லை.எனினும் அவருடைய பின்னாளைய பாடல்களிலும் பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடல் வரிகள் சிதையாமல் பார்த்துக் கொண்டார்.
அவர் உலக இசை படைக்கவில்லையே என்று நாம் குறைகூறுவதோ அல்லது வருந்துவதோ தேவை இல்லாத ஒன்று. வெளிநாட்டு இசையை ரசிப்போம் ஆனால் நம் மண்ணின் இசை தாழ்ந்தது என்றும் உலக இசைதான் உயர்ந்தது என்றும் கூறுவது முட்டாள் செயல்.
ராஜா உலக இசையை அறியாதவரில்லை.மேற்கத்திய சாஸ்த்ரிய இசையை நன்கு கற்றுத்தேர்ந்ததோடல்லாமல் அதனை நம் சூழலுக்கு ஏற்றவகையில் இணைத்து அசலான பாடல்களை வழங்கியிருக்கிறார்.நல்ல தெம்மாங்கு மெட்டினில் கிடாரையும் பியானோவையும் ஹிந்துஸ்தானி இசைக் கருவியான ஷெனாய் யையும் கூட உறுத்தாமல் இணைத்திருப்பார்.சில உதாரணங்கள் "சின்ன மணிக் குயிலே " அம்மன் கோவில் கிழக்காலே, "கண்ணம்மா காதலென்னும் கவிதை சொல்லடி " வண்ண வண்ண பூக்கள் , பட்டியல் இப்படியாக நீளும்.
ராஜா படைத்தது அசலான நம் மண்ணின் இசை.அவர் நமக்காக ஒரு இசைப் பண்பாட்டை உருவாக்கி அளித்திருக்கிறார்.
கொஞ்சம் ரஹ்மானின் பக்கம் வருவோம்.ரஹ்மானின் பெரிய பலம் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி. "Woofer" களும் நவீன ஸ்பீக்கர்களும் இல்லாமல் அவரது இசையை ரசிக்க முடியாது.கோவில் திருவிழா குழாய் ஸ்பீக்கரில் ரஹ்மானின் "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு பாடல்" கேட்டால் எவ்வளவு கொடூரமாக இருக்கும்? குழாய் ஸ்பீக்கர் குக்கிராமங்களில் கூட வழக்கொழிந்து போனதால் பிரச்சனை இல்லை.பாடல் மெட்டு எவ்வளவு இனிமையாக இருந்தாலும் வரிகள் காதில் விழாவண்ணம் இசை அதனை அமுக்கிச் செல்கிறது. மற்றும் அவர் நம் மண்ணுக்கென உரிய விஷயங்களை குறைவாகவே இசைப் படுத்தியிருக்கிறார்.கண்டிப்பாக மிகவும் நன்றாகத்தான் இருக்கிறது.படம் வெளியான சில வாரங்கள் மாதங்கள் அவற்றை ரசிக்க முடிகிறது.அப்புறம் எப்பொழுதாவதுதான் திரும்பவும் கேட்கத்தோன்றுகிறது. இது முழுக்க முழுக்க என் எண்ணமே.பாடல்வரிகளை பாடுபவர் தின்றுவிட்டாலும் அவருக்குப் பிரச்சனை இல்லை.ஆனாலும் மிகச்சிறந்த பாடல்களை தன் தொடக்க காலங்களில் வழங்கியிருக்கிறார். டூயட்,ரோஜா,ரிதம்,என் சுவாசக் காற்றே, என்று பல படங்களை குறிப்பிடலாம்.
இப்போது ஒரு விஷயத்தை நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.ரஹ்மான் ஆண்டுக்கு 2 அல்லது 3 படங்களே இசையமைப்பார்.ராஜாவோ 80 களில் தொடங்கி 90 களின் பாதிவரையில் ஆண்டுக்கு 20 படங்களுக்கு குறையாமல் இசையமைத்திருக்கிறார்.ஒவ்வொரு படத்திலும் குறைந்தது 3 பாடல்களாவது பெரும் வரவேற்பைப் பெற்ற வெற்றிப் பாடல்கள்.இல்லாவிடில் எல்லாப் பாடல்களும் மிகப்பெரும் வெற்றி பெற்றவை.ஏழைத் தயாரிப்பாளர்களின் கமலஹாசன் என்று அழைக்கப் பட்ட மோகனின் வெற்றிக்கு இளையராஜா 75 சதவிகிதம் காரணம் என்றால் மிகையில்லை.இன்றைக்கு தொலைக்காட்சி நிகழ்சிகளில் எல்லா பாடல் போட்டிகளிலும் ராஜாவின் பாடல்களே அதிகம் பாடப் படுகிறது.
ரஹ்மான் ஆஸ்கார் விருது பெற்றது தேர்ந்த விளம்பர வியாபர யுக்திகளினால் அந்த திரைப்படம் உலக அரங்கில் வைக்கப்பட்டதன் மூலமாகத்தான். ஜெய்ஹோ பாடலைவிட அவருடைய மற்ற எத்தனையோ துள்ளிசைப் பாடல்கள் தமிழிலும் ஹிந்தியிலும் எவ்வளவு சிறப்பாக உள்ளன என்று எண்ணிப் பார்க்கவேண்டும்.இளையராஜா உலக இசையின் சாற்றினை இந்திய இசையில் கலந்தார்.ரஹ்மானோ உலக இசையை (மேற்கத்திய இசையை) மறு ஆக்கம் செய்கிறார். "Originality" என்பது ராஜவிடமே அதிகமாக இருக்கிறது.தற்போது அவர் குறைவாகவே இசையமைக்கிறார் என்றாலும் சற்றே தேக்க நிலை அடைந்துவிட்டார் போலுள்ளது. எனினும் அவ்வப்போது விருமாண்டி படப் பாடல்கள் போல ஆளை அசத்துவதும் உண்டு.ரஹ்மான் மிகவும் சுருங்கி ஒரு "Template" ஏற்படுத்திக் கொண்டுவிட்டார் எனத் தோன்றுகிறது.ராவணன் பாடல்கள் கேட்டதில் உசுரே போகுதே தவிர மற்ற ஒன்றும் தேறவில்லை."கெடாக் கெடாக் கறி அடுப்புல கெடக்கு" மிக மிகச் சாதாரணம்.
நாம் விரும்புவது நம் மண்ணின் இசை அதன் பாரம்பரியம் கெடாமல் நம்மை மகிழ்விக்க வேண்டும் என்பதே.இளையராஜா அதைத் தொடங்கி செவ்வனே செய்து நம்மை மகிழ்வித்து ஓய்விலுள்ளார்.ரஹ்மானும் அதன் நீட்சியாகத் தொடரவேண்டும் என்பதே நம் விருப்பம்.