Sunday, October 31, 2010

BBC காணொளித் தொகுப்பு-விலங்குகளின் விந்தை உலகம்-பாகம் 1

2001 இல் நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது ஞாயிற்றுக் கிழமைகளில் சன் நியூஸ் அலைவரிசையில் காலை 11 மணிக்கு புதியதோர் உலகம் என்ற பெயரில் BBC யின் சில ஆவணப் படங்கள் ஒளிபரப்பப் பட்டன.SUPERNATURALS -THE UNSEEN POWERS OF ANIMALS என்பது ஆங்கிலத் தலைப்பு

விலங்குகளின் விந்தை உலகத்தை அதன் அருகே சென்று அறிவியல் தொழில்நுட்ப உதவியுடன் மிகச் சிறப்பான முறையில் படம் பிடித்திருப்பார்கள்.
ஒவ்வொரு விலங்கின் ஒவ்வொரு நடவடிக்கைகளுக்குப் பின்னும் இயற்கையின் விதி ஒன்று உள்ளது.சாதாரணமாக நம் கண்களுக்குப் புலப்படாத அவற்றைப் பற்றிய நிகழ்ச்சியே அது. உதாரணமாக வறட்சி காலத்தில் ஒரு மீன் எவ்வாறு அதனை சமாளிக்கிறது ? டால்பின்கள் மனிதனுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பது எதனால்? திடீரென்று மீன்மழை பொழிவது எதனால் ? என்பது போன்ற பல இயற்கை விந்தைகளுக்கு விடை கூறியிருப்பார்கள்.
அது பற்றிய காணொளித் தொகுப்பே இப்பதிவு.
இதில் மிகவும் வியப்புக்குரியது ஒவ்வொரு உயிரின் நடவடிக்கைகளும் படமாக்கப்பட்டிருக்கும் விதம். மாட்ரிக்ஸ்,அந்நியன்,பாய்ஸ் போன்ற படங்களில் நாம் பார்த்த " TIME FREEZE " தொழில்நுட்பத்தினைப் போல (அதாவது சண்டைக்காட்சிகளில் ஒருவன் அந்தரத்தில் பறக்கும்போது அப்படியே உறைந்து சலனமின்றி நிற்கும்படியாகவும் அதனைச் சுற்றி கேமரா சுழன்று வரும்படியாகவும் காண்பிக்கப் படுமே அதுதான்) ஒன்றினையோ அல்லது வேறு எதோ ஒரு உத்தியைப் பயன்படுத்தியோ படமாகியிருப்பார்கள். உதாரணத்திற்கு இந்த நிகழ்ச்சியின் முன்னோட்டத்தினைப் பார்க்கவும்.

காணொளிகள் stream ஆக சிறிது தாமதமாகலாம் (உங்களுடைய Bandwidth அளவைப் பொறுத்து stream ஆகும் காலம் வேறுபடும்) .சற்று பொறுமையுடன் காத்திருந்து பார்க்கவும்.






நம் ஊரில் எப்போதாவது அதிசயமாக ஆலங்கட்டி மழை பெய்வதாக படித்திருப்போம்.வெளிநாடுகளில் சில சமயங்கள் மீன்மழை பொழிவதுண்டாம்.சுழல் காற்றினால் ஒரு சிறிய நீர்நிலையே அதனுள் இருக்கும் மீன்கள் முதலைகள் தவளைகள் மற்றும் சிறு உயிரினங்களோடு உறிஞ்சப்பட்டு காற்றில் எடுத்துச்செல்லப்பட்டு வேறொரு இடத்தில் கொட்டப்படுவதே மீன்மழைக்கான காரணம்.
இந்தக் காணொளியைக் காணுங்கள் மிகுந்த வியப்புக்குள்ளாவோம்.
 



பனிசூழ் பகுதிகளில் உள்ள உயிரினங்கள் பனிக்காலத்தில் தன் நடவடிக்கைகளை முடக்கிவிட்டு ஒரு மறைவிடத்தில் உறைந்துவிடுவதைப் பற்றி "hibernating animals " என்று நாம் படித்திருக்கிறோம்.அதேபோல மிகுந்த வறட்சிக்காலத்தில் ஒரு மீன் என்ன செய்கிறது ? ஒரு தவளை என்னசெய்கிறது என்பது பற்றிய இந்த காணொளியைக் காணவும்.



டால்பின்கள் பொதுவாக மனிதனுக்கு மிக நெருக்கமான நண்பர்கள் என்று கூறப்படுகிறது. சிம்பன்சி குரங்குகளுக்கு அடுத்ததாக மனிதனின் கட்டளைகளை எளிதில் புரிந்துகொண்டு கீழ்படியும்  தன்மை டால்பின்களுக்கே அதிகம் என்று உயிரியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.இவ்வாறு டால்பின்கள் மனிதனை நேசிக்க என்ன காரணம் ? கடலில் மூழ்கும் மனிதர்களை டால்பின்கள் கரைசேர்ப்பதாக செய்திகளில் படித்திருப்போம்.அது போல ஒரு நிகழ்வினை இந்தக் காணொளியில் காணுங்கள்.மனிதனைத் தாக்கவரும் சுறா மீனைக் கூட டால்பின்கள் தாக்கி மனிதனைக் காப்பற்றுவதைக் காணலாம்.





இந்த ஆவணப் படங்களை எடுத்த மனிதர்களின் கடும் உழைப்பும் பொறுமையும் அசாத்தியமானது.இன்றைய தொழில்நுட்ப உதவியினால் கடந்தகாலங்களில் மர்மமாக வியங்கிய பல விஷயங்களை அறியியல் ரீதியாக தர்க்கப் பூர்வமாக விளக்கும் இவர்களை எண்ணி வியக்காமல் இருக்க முடியாது.இனிவரும் பதிவுகளில் மேலும் சில காணொளிகளைப் பார்ப்போம்.

6 comments:

  1. ரொம்ப ரொம்ப அருமையான பதிவு சகோதரர் ராஜேஷ்...காணொளிகள் அனைத்தும் ஒரு பிரமிப்பை தந்தன..

    ReplyDelete
  2. வருகைக்கும் ஊக்கமளிக்கும் பண்புக்கும் நன்றி ஆனந்தி அவர்களே :-)

    ReplyDelete
  3. சகோதரர் ராஜேஷ்க்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  4. ராஜேஷ்!!!
    பதிவு அருமை..
    (பதிவு போட்டதும் மறக்காமல் மின்னஞ்சல் செய்)...

    ReplyDelete
  5. கொஞ்சம் வேலைப்பளு மற்றும் சோம்பேறித்தனம் காரணமாக அனுப்ப மறந்து விட்டேன்.. கண்டிப்பாக இனி மின்னஞ்சல் அனுப்புவேன்

    ReplyDelete
  6. அற்புதமான படைப்பு.
    கடினமான உழைப்பு கவனத்துடன் செய்யப் பட்டிருக்கிறது. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன்
    அன்புடன்
    நந்திதா

    ReplyDelete

இந்த பதிவு பிடித்திருந்தால் வாழ்த்துங்கள், இல்லையென்றாலும் பரவாயில்லை உங்களுடைய விவாதங்களை தெரிவியுங்கள். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி !